Thursday, April 4, 2013

"கண்ணதாசன் வரிகள்"


"கண்ணதாசன் வரிகள்"

தாய் பசித்திருக்கும்போது
தாரத்திற்கு சோறூட்டாதே;
நீ பசித்திருக்கும்போது
உன் பிள்ளைகள்
அதே வேலையைச்செய்துகொண்டிருப்பார்கள்.

உடம்பை ஒழுங்காய் வைத்திருப்பவனை
மரணம் நெருங்குகிறது;
உடம்பை கெடுத்துக்கொண்டவன்
மரணத்தை நெருங்குகிறான்.

இன்ன ஓவியத்தை வரையப்போகிறோமென்று
முடிவுகட்டிக்கொண்டு தூரிகையை எடுப்பவன்பெயர் ஓவியன்.

'மையை ஊற்றுவோம்-அது
எப்படிவேண்டுமானாலும் விழட்டும்; அதுவே ஓவியம்'
என்று முடிவுகட்டுவோன்பெயர் அரசியல்வாதி.

ஆணவமும் அழிவும் இரட்டைக்குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
அவ்வளவுதான்.

நான் இறந்த பிற்பாடு
என்னையே நான் விமர்சனஞ்செய்துகொண்டால்
இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே
வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன்
கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி
முட்டாளாக செத்துப்போனேன்.

சட்டத்தையும் ஒழுங்கையும்
யாரோ குலைப்பதாகச்சொல்லப்படுவதை
நான் மறுக்கிறேன்.
சட்டந்தான் ஒழுங்கை
குலைத்துக்கொண்டிருக்கிறது.


"கண்ணதாசன் வரிகள்"

தாய் பசித்திருக்கும்போது 
தாரத்திற்கு சோறூட்டாதே;
நீ பசித்திருக்கும்போது
உன் பிள்ளைகள்
அதே வேலையைச்செய்துகொண்டிருப்பார்கள்.

உடம்பை ஒழுங்காய் வைத்திருப்பவனை
மரணம் நெருங்குகிறது;
உடம்பை கெடுத்துக்கொண்டவன்
மரணத்தை நெருங்குகிறான்.

இன்ன ஓவியத்தை வரையப்போகிறோமென்று
முடிவுகட்டிக்கொண்டு தூரிகையை எடுப்பவன்பெயர் ஓவியன்.

'மையை ஊற்றுவோம்-அது
எப்படிவேண்டுமானாலும் விழட்டும்; அதுவே ஓவியம்'
என்று முடிவுகட்டுவோன்பெயர் அரசியல்வாதி.

ஆணவமும் அழிவும் இரட்டைக்குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
அவ்வளவுதான்.

நான் இறந்த பிற்பாடு
என்னையே நான் விமர்சனஞ்செய்துகொண்டால்
இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே
வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன்
கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி
முட்டாளாக செத்துப்போனேன்.

சட்டத்தையும் ஒழுங்கையும்
யாரோ குலைப்பதாகச்சொல்லப்படுவதை
நான் மறுக்கிறேன்.
சட்டந்தான் ஒழுங்கை
குலைத்துக்கொண்டிருக்கிறது.


via - ஃபீனிக்ஸ் பாலா

No comments:

Post a Comment