Thursday, April 25, 2013

நீதிபதி சந்துரு

கடந்த 1999 ம் ஆண்டு. ஐகோர்ட் நிருபராக பணியாற்றிய காலம். அப்போது நான் வளசரவாக்கத்தில் வசித்துவந்தேன். வளசரவாக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, எனக்கு தெரிந்த கான்ஸ்டபிள் ஒருவர் வேகமாக ஓடிவந்தார். ‘‘ரஜினிகாந்த் வீட்டில் திருடியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி அப்பாவி ஒருவரை வளசரவாக்கம் ஸ்டேஷனில் வைத்து 5 நாளாக அடிக்கிறாங்க சார். பாவமா இருக்கு...எப்படியாவது செய்தி போட்டு காப்பாத்துங்க...என் பெயர் ஏதும் வந்திடாம பார்த்துக்குங்க’’ என்று சொல்லிவிட்டு பறந்து சென்றார்.
ஐகோர்ட்டுக்கு வரும் வரை அந்த இளைஞரைப் பற்றிய நினைவே என்னை வாட்டிக் கொண்டிருந்தது. ஐகோர்ட் வளாகத்துக்குள் நுழைந்ததும் எதிரே வந்து கொண்டிருந்தார் சந்துரு அவர்கள். அப்போது அவர் மூத்த வழக்கறிஞர். என்ன விசேஷம் என்று கேட்டார். அந்த இளைஞர் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதை கூறினேன். விபரங்களை கொடுங்க, உடனே கேஸ் போடலாம் என்றார். ஐகோர்ட் வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தை அணுகினேன். அவர்கள் அனுப்பி வைத்த வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் ஸ்டேஷன் சென்றேன். இன்ஸ்பெக்டர் எங்களை கண்டுகொள்ளவே இல்லை. அந்த இளைஞனின் தாய் வெளியே நின்று கதறிக் கொண்டிருந்தார்.
அவரை அழைத்து வந்து சந்துரு அவர்களிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே ஆள்கொணர்வு மனுவை சந்துரு அவர்கள் தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் அந்த இளைஞரை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை. பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. அப்போதைய டி.ஜி.பி. அலெக்ஸாண்டர், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த நடராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இருவரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. வேறு வழியின்றி இருவரும் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்தார்கள். அதே நேரம், அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டு, உண்மை குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.
மகன் மீண்டும் உயிருடன் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த தாய் சந்துரு அவர்களை, ‘‘ஐயா நீங்க நல்லா இருக்கணும்...’’ என்று வாயார வாழ்த்தினார். அப்போதுகூட, ‘அய்யய்யோ அதெல்லாம் எதற்கு?’ நீங்க தைரியமா போங்க’’ என்று அனுப்பி வைத்தார்.
இது ஒரு சாம்பிள்தான். சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது ஏழைகளுக்காக ஏதும் எதிர்பார்க்காமல் ஆஜரான வழக்குகள் ஏராளம்...நீதிபதியானபின்பும் அவரது குணாதிசயங்கள் மாறவில்லை...அவருடன் நெருங்கிப் பழகிய என்னைப் போன்றவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.

No comments:

Post a Comment