Monday, April 15, 2013

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்ல தெரிஞ்சிக்கடா ....


நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்ல தெரிஞ்சிக்கடா ....

**************************************

ஒன்பதரை மணி காலேஜ் க்கு
ஒவ்வொருத்தரா கிளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கி கிட்டு இருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும் ...

அடிச்சி பிடிச்சி கிளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிச பந்தயத்துல
அர குறையா சாப்டதுண்டு ..

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல
லேட்டா வர நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல ..!!

ஈ அடிச்சான் காப்பி இந்த பக்கம்னா
அத அடிப்பான் காப்பி அந்த பக்கம்
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு
ஒன்பது பேர் பாஸ் ஆனதுண்டு ..

பசில யாரும் தவிச்சதில்ல
காரணம் தவிக்க விட்டதில்ல
டீ கடையில் கடன் சொல்லி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல ..

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
பீஸ் கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ..

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பார்த்ததில்ல
மூஞ்சி மேல கால போட்டு தூங்கினாலும்
முகவரி என்னனு கேட்டதில்ல ...

படிச்சாலும் படிக்கலனாலும்
பிரிச்சி வச்சி பார்த்ததில்ல
அரியர்ஸ் வச்சாலும் வெக்கலனாலும்
அந்தஸ்து பார்த்த நாபகம் இல்ல...

வேல தேடி அலையுறப்போ
வேதனை பார்துப்புட்டோம்
வெட்டி ஆபீசர் ன்னு நிஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம் ..

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சி
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டபனா கண்ணீர் சிந்தி காட்டி கொடுக்கும்
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைககிறப்போ
சாப்பாடு ல காரம் டா மச்சான் நாட்கள் நகர
எப்போதாவது தான் ஈமெயில் வருது
"ஹாய் டா மச்சான் ஹவ் ஆர் யூ ன்னு "...

தங்கச்சி கல்யாணம்
தம்பி காலேஜ்
அக்காவோட சீமந்தம்
அம்மாவோட ஆஸ்த்மா
ஹௌசிங்க் லோன் EMI
ஷேர் மார்க்கெட் சருக்கல்
அப்ரைசல் டென்ஷன்
இந்த கொடுமை எல்லாம் பத்தாம
இன்னிக்காவது பேச மாட்டாளா .? ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடா கூடமா
நேரம் பார்க்க நேரமில்லை போதாத காலமா ...

ஈமெயில் இருந்தாலும்
இன்டர்நெட் இருந்தாலும்
பேஸ் புக் இருந்தாலும்
கம்பெனி ல ஓசி போன் இருந்தாலும்
நேரம் மட்டும் கிடைகிரதில்ல
நண்பனோட குரல் கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பார்க்க..

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
பேஸ் புக் இருந்தும் கமெண்ட் பண்ண முடியாம போனாலும்
அவைலபிள் தெரிஞ்சி சாட் பண்ண முடியாம போனாலும்
ஏண்டா பேசல ?? கோச்சிக்க தெரில
இத பெரிய பிரச்சனயா யோசிக்கவும் முடில !

என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது
வாசம் மாறி போகாது
வருசங்கள் பல கழிஞ்சாலும்
வரவேற்ப்பு குறையாது
வசதி வாய்ப்பு வந்தாலும்
மாமா மச்சான் மாறாது ..

by:பிரசாந்த்
நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்ல தெரிஞ்சிக்கடா ....

**************************************

ஒன்பதரை மணி காலேஜ் க்கு
ஒவ்வொருத்தரா கிளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கி கிட்டு இருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும் ...

அடிச்சி பிடிச்சி கிளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிச பந்தயத்துல
அர குறையா சாப்டதுண்டு ..

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல
லேட்டா வர நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல ..!!

ஈ அடிச்சான் காப்பி இந்த பக்கம்னா
அத அடிப்பான் காப்பி அந்த பக்கம்
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு
ஒன்பது பேர் பாஸ் ஆனதுண்டு ..

பசில யாரும் தவிச்சதில்ல
காரணம் தவிக்க விட்டதில்ல
டீ கடையில் கடன் சொல்லி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல ..

அம்மா ஆசையா போட்ட செயினும் 
மாமா முறையா போட்ட மோதிரமும்
பீஸ் கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ..

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பார்த்ததில்ல
மூஞ்சி மேல கால போட்டு தூங்கினாலும்
முகவரி என்னனு கேட்டதில்ல ...

படிச்சாலும் படிக்கலனாலும்
பிரிச்சி வச்சி பார்த்ததில்ல
அரியர்ஸ் வச்சாலும் வெக்கலனாலும்
அந்தஸ்து பார்த்த நாபகம் இல்ல...

வேல தேடி அலையுறப்போ
வேதனை பார்துப்புட்டோம்
வெட்டி ஆபீசர் ன்னு நிஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம் ..

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சி
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டபனா கண்ணீர் சிந்தி காட்டி கொடுக்கும்
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைககிறப்போ
சாப்பாடு ல காரம் டா மச்சான் நாட்கள் நகர
எப்போதாவது தான் ஈமெயில் வருது
"ஹாய் டா மச்சான் ஹவ் ஆர் யூ ன்னு "...

தங்கச்சி கல்யாணம்
தம்பி காலேஜ்
அக்காவோட சீமந்தம்
அம்மாவோட ஆஸ்த்மா
ஹௌசிங்க் லோன் EMI
ஷேர் மார்க்கெட் சருக்கல்
அப்ரைசல் டென்ஷன்
இந்த கொடுமை எல்லாம் பத்தாம
இன்னிக்காவது பேச மாட்டாளா .? ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடா கூடமா
நேரம் பார்க்க நேரமில்லை போதாத காலமா ...

ஈமெயில் இருந்தாலும்
இன்டர்நெட் இருந்தாலும்
பேஸ் புக் இருந்தாலும்
கம்பெனி ல ஓசி போன் இருந்தாலும்
நேரம் மட்டும் கிடைகிரதில்ல
நண்பனோட குரல் கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பார்க்க..

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
பேஸ் புக் இருந்தும் கமெண்ட் பண்ண முடியாம போனாலும்
அவைலபிள் தெரிஞ்சி சாட் பண்ண முடியாம போனாலும்
ஏண்டா பேசல ?? கோச்சிக்க தெரில
இத பெரிய பிரச்சனயா யோசிக்கவும் முடில !

என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது
வாசம் மாறி போகாது
வருசங்கள் பல கழிஞ்சாலும்
வரவேற்ப்பு குறையாது
வசதி வாய்ப்பு வந்தாலும்
மாமா மச்சான் மாறாது ..

by:பிரசாந்த்

No comments:

Post a Comment