உங்களுடைய ஆதரவை எஸ்.ஐ பிரவின் குமாருக்கு வழங்குவீர்களா ?
பிரவின் குமாருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன், நீங்களும் ஆதரவளிப்பீர்களா ?
காரைக்கால் மாவட்டம் நிரவி காவல் நிலைய எஸ்.ஐ யாக பிரவின்குமார் என்பவர் கடந்த 22.10.2011 ஆம் ஆண்டு பதவியேற்றார். அவர் பதவியேற்ற நாள் முதல் நிரவி பகுதியில் சுதந்திரமாக நடந்து வந்த மணல் திருட்டு மற்றும் சாராயக்கடத்தலை முற்றிலும் தடுத்தார்.
இந்நிலையில் கடந்த 20.08.2012 அன்று நிரவி சாரயக்கடை அருகில் குடித்துவிட்டு பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக திரிந்த வாலிபர் இருவரை கைது செய்தார். இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ மற்றும் அரசியல் கட்சியினர் எஸ்.ஐ பிரவின்குமாரை மிரட்டி கைது செய்தவர்களை விடுதலைச் செய்ய வலியுறுத்தியுள்ளனர். அதை எஸ்.ஐ கேட்காமல் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
தொடர்ந்து 3 வாரம் கழித்து கடந்த 12.09.2012 அன்று பிரவின்குமாரை புதுச்சேரி காவல்துறை புதுச்சேரிக்கு பணியிடை மாற்றம் செய்தது.
இது குறித்து பிரவின்குமார் தொடுத்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளில் 5 முறை பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். மேலும் தற்போது குழந்தைகளோடு காரைக்காலில் செட்டில் ஆகிவிட்டதால் இந்த பணியிடை மாற்றத்தை என்னால் ஏற்க முடியாது என்று சென்னை நிர்வாக தீர்ப்பாயத்தில் பிரவின்குமார் 24.09.2012-ல் வழக்கு தொடர்ந்தார்.
அரசின் இந்த பணியிடை மாற்றத்திற்கு சென்னை நிர்வாக் தீர்ப்பாயம் 26.09.2012 அன்று தடை உத்தரவு பிறப்பித்தது.
தீர்ப்பயத்தின் தடை உத்தரவை புதுச்சேரி காவல்துறையும் காரைக்கால் மாவட்ட எஸ்.எஸ்.பி-யும் ஏற்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக் பிரவின்குமார் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கினை விசாரித்த சென்னை நிர்வாக தீர்பாய நீதிபதிகள் வெங்கடேஸ்வர ராவ், சதாபதி ஆகியோர்...
அரசியல் காரணத்திற்காக பணியிடை மாற்றம் என்பது தவறானது.
மக்கள் பிரச்சனையில் காவலர்கள் பாதிக்கப்பட்டால், மேல் அதிகாரிகள் காபந்து செய்யவேண்டுமே தவிர, பணியிடை மாற்றம் என்பது தீர்வாகாது. எனவே பிரவின்குமாருக்கு புதுச்சேரி காவல்துறை வழங்கிய இந்த பணியிடை மாற்றத்தை ரத்து செய்கிறோம்.
மேலும் பிரவின்குமாரை உடனே பணியில் சேர்ப்பதுடன் இன்னும் 6 வார காலத்திற்குள் பிரவின்குமாருக்கு சேர வேண்டிய 7 மாத சம்பளத்தை அனைத்து வித சலுகைகளுடன் புதுச்சேரி காவல் துறை வழங்கவேண்டும் என தீர்பளித்துள்ளனர்.
பணியிடை மாற்றத்தில் வெகுகாலத்திற்கு பிறகு நீதிமன்றம் இதுபோன்ற தீர்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையில் நல்லது செய்பவர்களை காண்பது அரிதாக இருக்கும் நிலையில்... ஓரிரு அதிகாரிகள் நல்லது செய்தாலும் அவர்களையும் பந்தாடுவது போல் அங்கும் இங்கும் அலைய விடுவதும், சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதும் நடைபெற்று வருகிறது.
ஆகையால் எஸ்.ஐ பிரவின் குமார் அவர்களுக்கு கிடைக்க வேண்டியவைகள் சரியாக கிடைக்க வேண்டும் இல்லையென்றால் அவருக்கு ஆதரவாக இந்த தளம் இறுதிவரை போராடும்.
உங்களுடைய ஆதரவை எஸ்.ஐ பிரவின் குமாருக்கு வழங்குவீர்களா ?
via - சங்கை ரிதுவான்
No comments:
Post a Comment