ஊழல் செய்த மருமகனின்தலையை துண்டித்த மன்னர்:
ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் "மன்னர் விஜயரகுநாத சேதுபதி".
தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதிகள். ராமர் தனக்கு உதவி செய்த மறவர்களை ராமர் பாலம், சீதாபிராட்டியால் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமலிங்கத்தையும் பாதுகாக்கும்படி கட்டளையிட்டார் "பாலத்துக்கு பாதுகாப்பாளர் அல்லது உரிமையாளர் என்ற பொருள் படும்படி சேதுபதி என்ற பட்டம்" கொடுத்தார். உலகெங்கிலும் இருந்து வரும் யாத்திரிகர்களை ராமேஸ்வரம் தீவுக்கு தோணிக்கரை( மண்டபம்) வழியாக படகுகளில் அழைத்து சென்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தரிசனத்திற்குபின்பு மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது இவர்களின் தலையாய கடமையாக இருந்து வந்தது. 1674 முதல் 1710 வரை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது மருமகன் 'விஜயரகுநாத சேதுபதி' என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தார்.இவர் தோணித்துறையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்து செல்லும் பொறுப்புகளை தனது இரண்டு மகள்களான சீனிநாச்சியார், லட்சுமிநாச்சியார்களின் கணவரானதண்டபாணியிடம் ஒப்படைத்திருந்தார்.
பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 9 கி.மீ., தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தண்டபாணி யாத்திரிகர்களிடம் தலா ஒரு பணம் (தற்போதைய மதிப்பு 96 காசு) கட்டணமாக வசூலித்து வந்தார்.
இமயமலையிலிருந்து நடந்து வந்த பைராகியிடம் (நிர்வாண சாமியார்) பணம் கொடுத்தால்தான் படகில் ஏற்றுவேன் என்று தகராறு செய்தார். இதனால் விரக்தியடைந்தபைராகி, ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்று அங்கிருந்த மன்னனிடம்” இறைவனை தரிசிக்க விடாத நீயும் ஒரு அரசனா? என தூற்றினார். கட்டணம் வசூல் செய்யும் தகவல் விஜயரகுநாத சேதுபதிக்கு தெரியவர அதை மாறுவேடத்தில் சென்று உறுதி செய்தார்.
தனது இரண்டு மகள்களையும் அழைத்து விஷயத்தை கூறாமல் “அம்மா சிவதுரோகம் செய்தவருக்கு என்ன தண்டனை தரலாம் என கேட்க, அவர்களோ “சிரச்சேதம் (தலைமை துண்டித்தல்) செய்வதுதான் சரியான தண்டனை’ என்றனர்.மன்னரோ “மிக வேண்டியவராக இருந்தால்’ என்ன செய்வது என கேட்க “யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்’ என மகள்கள் கூறினர்.இதன்பின் மன்னர் விஷயத்தை கூறியதும் பதறிய மகள்கள் ,”தாங்களும் கணவரோடு உடன்கட்டை ஏற அனுமதிக்க வேண்டும்’ என கேட்டனர்.
மன்னர் உத்தரவுப்படி மருமகன் தண்டபாணி தலை துண்டிக்கப்பட்டு இரண்டு மகள்களும் உடன்கட்டை ஏறினர். இறுகிய மனதோடு கடமையை நிறைவேற்றிய மன்னர் மருமகன் சேர்த்து வைத்திருந்த சொந்த நிதியிலிருந்து தனது மகள்களின் நினைவாக பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் தங்கச்சிமடம் மற்றும் அக்காள்மடத்தில் யாத்திரிகர்கள் தங்கி செல்லும் வகையில் மடங்களை உருவாக்கினார்.தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அக்காள்மடத்தில் உள்ள மடம் இடிக்கப்பட்டுவிட்டது. தங்கச்சிமடத்தில் உள்ள மடம் மட்டும் சிறிது சிறிதாக அழிந்துவருகிறது. ஊழலே இருக்க கூடாது என நினைத்த மன்னர் வாழ்ந்த பூமியில் தற்போது ஊழலுக்கு பஞ்சமில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
ஊழல் செய்த மருமகனின்தலையை துண்டித்த மன்னர்:
No comments:
Post a Comment