இன்று பழைய நண்பர் ஒருவர் எமது இல்லத்திற்கு வந்திருந்தார். அவரது பெயர் இளங்கோ. அவர் மனைவியின் பெயர் மணிமேகலை. இருவருக்கும் நல்ல தமிழ்ப் பெயர்கள். அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து பிறந்த நாள் அழைப்பிதழ் நமக்கு கொடுத்தார். ஆர்வமுடன் அழைப்பிதழ் திறந்து பார்த்தேன். அவரது பெண் குழந்தையின் அழகிய படம் அதில் இருந்தது.
அக்குழந்தையின் பெயரை படித்ததும் சற்று அதிர்ந்து போனேன் .குழந்தையின் பெயர் ஜோசிகா என்று இருந்தது. உடனே நண்பரிடம் கேட்டேன், யார் இந்தப் பெயரை வைத்தது . இந்த பெயருக்கு பொருள் தெரியுமா எனக் கேட்டேன். அவர் சொன்னார் , பொருள் எல்லாம் தெரியாது, எண் கணிதம் அடிப்படையில் ஜோசியக்காரர் தான் இந்த பெயரை வைக்கச் சொன்னார் என்றார். மனம் ஒரு நிமிடம் கனத்தது.
இது தான் இன்றைய தமிழ் குடும்பங்களின் நிலை. பெயர் தான் தமிழர்களின் அடையாளம். ஆனால் இன்று தமிழ் குடும்பங்கள் தங்களது அடையாளங்களை இழந்து கொண்டு வருகிறது. அதன் ஒரு வகை தான் பொருள் தெரியாத சமஸ்க்ரித்த பெயர்களை தமிழ்க் குழந்தைகளுக்கு சூட்டுதல்.
இந்த நிலை மாற வேண்டும். நமது பெயரை நம் பெற்றோர்கள் தவறாக வடமொழியில் வைத்திருப்பினும் நமது குழந்தைகளுக்காவது தூய தமிழ் பெயர்களை வைப்போம். தமிழர் அடையாளத்தை மீட்போம். வாழ்க தமிழ்!

No comments:
Post a Comment