Thursday, April 25, 2013

பேச்சு சாதுர்யம்

பேச்சு சாதுர்யம்

* பொதுவாகவே பெண்கள் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. ஆனால், பண்டைய இலக்கியங்களில் வரும் பெண்கள் ரத்தினச் சுருக்கமாகப் பேசவும் தெரியும், நீட்டி முழக்கி, சுற்றி வளைத்துப் பேசவும் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு: கண்ணகி தன் கணவன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டுக் கொதித்தெழுந்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கச் செல்கிறாள்.

** பாண்டியன், ""நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்... யார் நீ?'' என்று ஒரு கேள்விதான் கேட்டான். அதற்குக் கண்ணகி. ""தேரா மன்னா....'' என்று ஆரம்பித்து, தன் குலம், கோத்திரம் தொடங்கி, ஊழ்வினையை இழுத்து, ""உன்னால் கொலை செய்யப்பட்டவன் மனைவி'' என்று ஆதியோடந்தமாய் ஒரு கேள்விக்கு ஒன்பது பதில்கள் சொல்லி பாண்டியனைத் திணறடித்தாள்!

*** இதற்கு நேர் எதிராக, காட்டில் கந்தர்வ மணம் புரிந்து மனைவியையும், மகனையும் மறந்து நாட்டை ஆளுகின்றான் துஷ்யந்தன். மனைவி சகுந்தலை தன் மகனுடன் அரசன் துஷ்யந்தன் சபைக்குச் செல்கிறாள். அப்போது துஷ்யந்தன், ""பெண்ணே நீ யார்? எதற்காக வந்தாய்? இந்தக் குழந்தை யார்? இதற்கும் உனக்கும் என்னத் தொடர்பு? எனப் பல கேள்விகள் கேட்கிறான். இவ்வளவு கேள்விகளுக்கும் சகுந்தலை சொன்ன ஒரே பதில், ""மகனே... உன் தந்தைக்கு வணக்கம் சொல்'!

**** என்னவொரு நெத்தியடியான பதில்! ஆக, பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா என்ன? அதுவும் எங்கே?, எப்படி?, எந்தளவுக்குப் பேச வேண்டும்? என்று அவர்கள் தெரிந்திருப்பதால்தான் ஆண்கள் ஜம்பம் எக்காலத்திலும் எடுபடுவதில்லை போலும்!

- பேகம் பானு

No comments:

Post a Comment