Thursday, April 11, 2013

சுதந்திரத்தை கொண்டாடாத ஒரே கட்சி பார்வர்டு ப்ளாக் ஏன் ?


சுதந்திரத்தை கொண்டாடாத ஒரே கட்சி பார்வர்டு ப்ளாக் ஏன் ?

இந்திய தேச விடுதலைக்காக சுபாஷ் சந்திராபோசுடன் இணைந்து போராடிய முத்துராமலிங்க தேவர் இந்திய சுதந்திரம் அடைந்தபோது புளிச்சிக்குளம் என்னும் குக்கிராமத்தில் தனது பண்ணை வீட்டில் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார் ..

காந்தியின் அகிம்சை கொள்கையில் தான் நாடு விடுதலை பெற்றது என்றால் பர்மாவிற்க்கும் ,மலேசியாவிற்கும் ,சிலோனுக்கும் எந்த காந்தி விடுதலை வாங்கித்தந்தான் ?

1755ல் பூலித்தேவனில் தொடங்கி ..வல்லநாட்டு வேங்கை வெள்ளையத்தேவன் ,வேலுநாச்சியார் ,மருதுபாண்டியர் சிந்திய ரத்தம் முதல் ..நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் துப்பாக்கி தூக்கி இம்பால் முனைவரை நம்மினம் சிந்திய ரத்தம் கொஞ்சமா ?நஞ்சமா ?
என்னெற்ற உயிர் பலிகளுக்கு பின்னல் தான் ஒரு போலி சுதந்திரத்தை தருவதற்கு வெள்ளைக்காரன் முன்வந்தானே தவிர .. காந்தியால் சுதந்திரம் வரவில்லை ..

நேதாஜி நிறுவிய தியாகிகள் நினைவு சின்னத்தை டைனமிக் குண்டு வைத்து தகர்த்து துண்டு துண்டாக சிதறிய கரித்துண்டுகளை தனது பூட்ஸ் காலால் உதைத்து தள்ளிய மவுண்ட் பேட்டனை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ஏற்றுக்கொண்டு அந்த மவுண்ட் பேட்டன் கீழ் நேரு பிரதமராக பதவியேற்று ..ஆட்சியை தொடங்கியதுதான் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் ..

அதனாலே தான் சுதந்திரத்தை அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கொண்டாடவில்லை ...இந்தியாவிலேயே இன்றுவரை சுதந்திர தினத்தை கொண்டாடாத ஒரே கட்சி ..பார்வர்டு ப்ளாக் ..

No comments:

Post a Comment