தனி ஸ்பான்சர் - சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு..........!!
சவூதியில் இயற்றப் பட்டுள்ள 'நிதாகத்' புதிய சட்டத்தின் படி இன்னும் மூன்று மாத்தத்திற்குள் சட்ட விரோதமாக அல்லது. சிகப்பு கேட்டகிரியில் உள்ள தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
இதில், இந்தியர்கள் தாயகம் செல்ல சவூதி இந்திய தூதரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி, தனி ஸ்பான்ஸரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டக்கிரியில் இருப்பதால் தாயகம் செல்லமுடியாத பிரச்சனையில் உள்ளவர்கள், பாஸ்போர்ட் , இக்காமா, காலாவதி ஆனவ்ருகள் மற்றும் ஹூரூப் கொடுக்கப்பட்டவர்கள்.
மேலும் விசா விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு தாயகம் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரிய சட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.
சவூதி அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசி பாதுகாப்பாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ள இவ்வேலையில். தங்களது தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் இதற்கு ஏப்ரல் 15 வரை தூதரகத்தை அனுகலாம் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
ஒரிஜினல் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு EC தேவையில்லை. அந்த பாஸ்போர்ட்டிலேயே Exit அடித்து அனுப்பி வைக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தை அனுகவும்.
அல்லது please contact First Secretary (Community Welfare), Telephone 4884032. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நகரை விட்டு வெளியில் உள்ளவர்கள் இந்த முகவரிக்கு அஞ்சல் செய்யவும்.
The complete profile and other information of the interested legal firms shall reach the Indian Embassy, Riyadh, [B-1, Diplomatic Quarters, PB No. 94387, Riyadh – 11693], Saudi Arabia, on or before April 15, 2013
மின் அஞ்சல் முகவரி :
sscw@indianembassy.org.sa; hoc.riyadh@mea.gov.in and pol.riyadh@mea.gov.in
அதிகமதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோதரர்களே. முடிந்தால் பிரிண்ட் எடுத்து கொடுத்து உதவுங்கள். ஏறத்தாள 20 ஆயிரத்திற்கும் மேல் நம் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வல்ல இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக...
No comments:
Post a Comment