விவசாயிகளுக்கு எஸ்.எம்.எஸ்!
விவசாயம் மற்றும் விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் வேளாண்மை துறை அமைச்சர் எஸ்.தாமோதரன்!
அவருடைய அறிவிப்புகளில் சில...
* மண்வளத்தை பாதுகாக்க, மகசூல் இழப்பை தடுக்க மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மண்பரிசோதனை மேற்கொண்டு, புவி விவர அடிப்படையில் மண்வரைபடங்கள் கம்ப்யூட்டர் மூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* கரும்பு அறுவடைக்குப் பிறகு மண் ஈரம் காத்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட கரும்புச்சோகையை தூளாக்கி நீர்போர்வை அமைக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.800 வீதம் 12,500 ஏக்கர் பரப்புக்கு பின்னேற்பு மானியமாக ரூ.1 கோடி வழங்கப்படும்.
* விவசாய குழுக்களுக்கு ரூ.5ரு கோடி செலவில் விளைபொருள் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கி அதன் மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகளை மதிப்புக்கூட்டி கூட்டுறவுத்துறை மூலம் நல்ல விலைக்கு கொள்முதல் செய்யப்படும்.
* விவசாயிகள் நிலையான வருமானம் பெறுவதற்கு தரமான விதைகளும், நடவுக்கன்றுகளும் அவசியம் என்பதால் ரூ.15 கோடி செலவில் தோட்டப்பண்ணைகளிலேயே சான்றுபெற்ற தரமான தோட்டக்கலை நடவுக்கன்றுகள் மற்றும் விதைகள் உற்பத்தி செய்யப்படும்.
* வெங்காயங்களை தரம் குறையாமல் சேமிக்கும் வகையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 12 மாவட்டங்களில் 2 முதல் 12 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள விஞ்ஞான சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
* வானிலை, சாகுபடி திட்டங்கள், வேளாண்மை விற்பனை வாய்ப்புகள் குறித்து எஸ்.எம்.எஸ். மற்றும் குரல்வழி செய்தி மூலம் விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

No comments:
Post a Comment