Wednesday, April 3, 2013

தமிழ் சினிமா-முடியல



1. யாரவது படத்தோட முதல் சீன்ல சாகும் போது, சொல்ல வந்த ரகசியத்தை சொல்லாம செத்துடுவாங்க.. இதுவே கடைசி சீனா இருந்தா எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டு தான் சாவாங்க..

2. சாகும் போது கண்ணை திறந்திட்டேதான் சாவாங்க, நம்ம ஹீரோ கண் இமைகளை தடவி மூடுவார்.

3. நீங்க எல்லாம் தொண்டை கிழிய பேசி கிளாஸ் எடுத்தாலும் கடைசில இருக்கற Studentsக்கு கேக்குமான்னு சந்தேகம் தான்.. ஆனா ஹீரோ பாடறது நாலு கிலோமீட்டர் சுத்தளவுல எல்லோருக்கும் கேக்கும்.

4. ரேப் சீனை தடுக்கவரும் நம்ம ஹீரோ, வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார். ஆனா அந்த பொண்ணு ஹீரோயினா இருந்து அதுவே அடுத்த சீன்ல அரைகுறையா ஆடும் போது நம்மாளு கண்டுக்க மாட்டாரு..

5. கிளைமாக்ஸ் பைட்டுல நிராயுதபாணியா நிற்கிற ஹீரோவை வில்லன் குத்தவோ/சுடவோ வரும் போது அவரை யாரவது பின்னாடி இருந்து குத்திடுவாங்க.. வில்லன் மெதுவா சரிய பின்னாடி யாருன்னு பார்த்தா செகன்ட் ஹீரோயினோ, கடைசியா திருந்தின வில்லியோ இருப்பாங்க.





தமிழ் சினிமா-முடியல

No comments:

Post a Comment