## முயன்றால் நம்மால் எதுவும் முடியும்.
## முயன்றால் நம்மால் எதுவும் முடியும்.
நான்கு வயதான போது அந்தப் பெண் குழந்தைக்கு நிமோனியா ஜுரம் வந்தது.
அடுத்த வாரமே இரண்டாம் முறை நிமோனியாவுடன் விஷக்காய்ச்சலும் வந்தது. மருத்துவமனையில் போராடிய அதன் தாயும், மருத்துவர்களும், குழந்தையை பிழைக்க வைத்தனர். ஆனால் போலியோவை தடுக்க முடியவில்லை . கால்கள் சூம்பிப்போயின .
அந்த சிறுமிக்கு ஒன்பது வயதாகி , விவரம் தெரிந்தபோது , கம்பிக்குள் செலுத்தப்பட்டு, ரப்பர் பட்டையால் கட்டப்பட்டிருந்த தன காலையே பார்த்துக்கொண்டிருந்தாள் . தாயிடம் சொன்னாள் .
"அம்மா, நானும் நடக்க வேண்டும். ஓட வேண்டும்."
தாய் சென்று மருத்துவரைக் கேட்டாள் . பெராலிசிஸ் பாதித்த நபர்கள் நடந்ததாய், ஓடியதாய் சரித்திரமில்லை . அவளால் ஒரு எட்டுகூட எடுத்து வைக்க முடியாது .
இரவும் பகலும் இந்த பதிலை யோசித்த அந்த ஒன்பது வயது சிறுமி, ரப்பர் பட்டையை அவிழ்த்து வீசிவிட்டு , சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி , மருத்துவர்களால் அவளால் எடுத்துவைக்க முடியாது என்று சொன்ன , முதல் அடியை எடுத்து தரையில் வைத்தாள்.
"அம்மா , நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்" சென்றாள் . பதின்மூன்று வயதானது.
"அய்யா , நான் விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டும்" - நின்ற இடத்திலிருந்து ஈட்டி எறிகிறாயா, ஷாட்புட் போடுகிறாயா அல்லது செஸ் விளையாடுகிறாயா என்று ஆசிரியர் கேட்டார் .
"அய்யா, நான் ட்ராக்கில் ஓடப் போகிறேன் " ஓடினாள் . எல்லோரும் ஓடி முடித்து , பரிசு வாங்கி வகுப்புக்கு சென்ற பின்னர், கடைசியாக வந்து எல்லையைத் தொட்டாள் . இரண்டு வருடங்களில் நடந்த அநேக ஓட்டப் பந்தயங்களில் அவள்தான் கடைசியாக வந்தாள் .
தன் பதினைந்தாவது வயதில் தன் பள்ளியில் மட்டுமல்ல, அனைத்து சர்வதேச போட்டிகளிலும் அவள் முதலாவதாக வந்தாள்.
1960 ஒலிம்பிக்ஸ் . உலகின் மிக மிக சிறந்த திறமையாளர்கள் மோதும் களம் . இதுவரை தோல்வியை கண்டிராத ஜீட்டா ஹெயின் என்ற பெண்ணை 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முந்திச் சென்று , முதல் தங்கத்தை வென்றாள் .
மதியம் அதே ஜீட்டா ஹெயினை முந்திச் சென்று 200 மீட்டர் ஓட்டத்தில் வென்று , தன் இரண்டாவது தங்கத்தை ஜெயித்தாள்.
மறுநாள் காலை ரிலே போட்டி , தனது அணியின் மூன்றுபேர் ஓடி முடித்து , குச்சியை நீட்டினர். இவள் குச்சி தவறி கீழே விழுந்தது !
அடுத்த முனையை பார்த்தாள். ஜீட்டா ஹெயின் தன் பேட்டன் குச்சியுடன் புயலென ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கீழே விழுந்த தன் பேட்டனை எடுத்துக்கொண்டு வெறியுடன் ஓடினாள்.
ஒலிம்பிக்சில் புதிய சரித்திரம் படைக்கப்பட்டது !
ஓட்டப்பந்தயத்தில் மூன்று தங்கம் வென்ற , உலகின் அதிவேகமான , பெராலிசிஸ் தாக்கிய, முதலும் கடைசியுமான அந்தப் பெண் , வில்மா ருடால் ஃப்
சிறு குறைகளையும் , சின்னச் சின்ன அசெளகர்யங்களையும் காரணம் காட்டி முடங்கி அமர்ந்திருக்கும் இளைஞர்களே, இளம் பெண்களே !
விம்லாவைப் போல ஒரு உயரிய கனவை உங்கள் மனக்கண்ணில் கண்டு , கீழே விழுந்துவிட்ட குச்சியை பற்றியெடுத்துக்கொண்டு, வெறிகொண்டு ஓடாதவரை, வாழ்க்கையில் எந்தவொரு வெற்றியும் உங்களை அணுகாது.
நன்றி : எண்ண சிதறல்கள்
No comments:
Post a Comment