Wednesday, May 8, 2013

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது!

பொ.பி கக ஆம் (கி.பி 11ஆம்) நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்!

மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பிராமணர் பரம்பரையில் வந்தவர். முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவடிவத்தில் எழுதிவைத்து பாடுகிறார்கள்.

முடிசூட்டுவிழாவில் மாத்திரமன்றி, இன்றும் வருடாந்தம் டிசம்பரில் (நம் மார்கழி மாதம்) நிகழும் அரச ஊஞ்சல் விழாவிலும் தேவாரம் - பாவைப்பாடல்கள் அவர்களால் பாடப்படுவதுண்டு!

மேலதிக விளக்கங்களுக்கு பின்வரும் காணொளியைப் பாருங்கள்! :
https://www.youtube.com/watch?v=ExGjxXY49Gg

(சோழர் போற்றியது சைவத்தையே! எனினும் வைணவத்தையும் பேதமின்றி வளர்த்தார்கள். ஆனால், காணொளியை உற்றுப்பாருங்கள்! 1:20 இற்குப் பின் காட்டப்படும் கற்பொறிப்பில் குறிப்பிட்ட இந்திய சமயத்தை "சைவம்" அல்லது "வைணவம்", ஏன், "இந்து" என்றுகூடக் காட்டாமல் “பிராம்மணியம்” (Brahmanism) என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பது நெருடலாக இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்து சீயத்திற்கு, சோழர் காலத்தில், “பிராம்மணியம்” என்று ஏதும் மதம் பரப்பப்பட்டிருக்கிறதா, என்ன? இது யாரையும் புண்படுத்த அல்ல; சற்று சிந்தித்துப் பாருங்கள்!)

இது தஞ்சை ஆய்வாளர் திரு. கோ. கண்ணன் அவர்களது காணொளி:
https://www.youtube.com/watch?v=5IYV_YoTrHk
https://www.youtube.com/watch?v=qAX_y-mFQho

முதற்காணொளியில் காட்டியபடி, கடந்தவருடம் ஈழத்து சைவத்தமிழ் அறிஞரான மறவன்புலவு சச்சிதாந்தன் அவர்கள், கிரந்தம், தமிழ், தாய், வரிவடிவங்களில் திருவெம்பாவையை அச்சிட்டு, ஆங்கில மொழிபெயர்ப்புடன் அவர்களுக்கு வழங்கியிருந்தார். போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரிய பணி!

இது, சச்சிதானந்தன் அவர்கள் தமிழகத்திற்கு வழங்கும் செய்தி!:

“தமிழ்நாட்டுத் தொடர்புகளைத் தேடுகிறார்கள். வேர்களைத் தேடுகிறார்கள். ஆகம அறிவைத் தேடுகிறார்கள். குறைகளைக் களைந்து முறைகளைப் பேண விழைகிறார்கள். தமிழ்நாட்டுக்கு ஆர்வம் உண்டா? அவர்களது உறவுகளைப் பேண விழைவு உண்டா? உடனே தொலைபேசியில் அழையுங்கள் . 0061 815526646 தவத்திரு புராணசிறீயுடன் பேசுங்கள். காலை வேளைகளில் அழைத்தால் பேசலாம். உங்கள் நண்பர்களையும் பேசச் சொல்க. உறவுகளை மீட்டெடுங்கள். நன்றி”8807767656

No comments:

Post a Comment