'இந்திய சினிமாவின் 25 மிகச் சிறந்த நடிப்பு'
சிவாஜி கணேசன், தேங்காய் சீனிவாசன், ரஜினிகாந்த், ரேவதி மற்றும் கமல்ஹாசன்!
இந்திய சினிமா 100 வயதை எட்டியதை ஒட்டி, சமீபத்தில் 'இந்திய சினிமாவின் 25 மிகச் சிறந்த நடிப்பு' என்ற தலைப்பிலான சிறப்புக் கட்டுரைத் தொகுப்பை 'ஃபோர்ப்ஸ் இந்தியா' வெளியிட்டது. அதில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர். அந்த ஐந்து பேர்தான் இங்கே தலைப்பில் உள்ளவர்கள்.
'பராசக்தி' படத்தில் சிவாஜி கணேசன், 'தில்லு முல்லு' படத்தில் தேங்காய் சீனிவாசன் மற்றும் ரஜினிகாந்த், 'மெளனராகம்' படத்தில் ரேவதி மற்றும் 'மகாநதி' படத்தில் கமல்ஹாசன் ஆகியோரின் நடிப்பாற்றலை வெகுவாகப் பாராட்டி இருக்கிறது, ஃபோர்ப்ஸ் இந்தியா.
-Cinemavikatan
No comments:
Post a Comment