ஜெயித்த கதை....
பத்தாம் வகுப்பில் பெயில் அப்புறம் 2 முறை அட்டம்ட் பண்ணி ஒரு வழியா 35 மார்க் எடுத்து பாஸ்பண்ணிட்டேன்
அப்புறம் 12ம் வகுப்பிலும் பெயில் வேதியியலில் அதையும் 2 முறை அட்டம்ட் பண்ணி பாஸ் பண்ணிட்டேன்
அப்புறம் டிகிரி பிஎஸ்சி மேக்ஸ் 3 வருஷபடிப்ப 6 வருஷம் படிச்சு ஒரு வழியா முடிச்சேன்
இப்படி மோசமாதான் போய்ட்டிருந்தது நம்ம வாழ்க்கை இவன் எல்லாம் எதிர்காலத்துல என்ன பண்ணப் போறான்னு நம்ம காதுபட பேசினவங்க பலபேர்..
அப்புறம்தான் ஒரு அரசுப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் பகுதிநேர ஆசிரியப்பணிக்கு போனேன்
நம்ம தகுதிய பார்த்து தலைமை ஆசிரியர் ஸ்கூல்ல சேர்த்துக்கவே மாட்டேன்னுட்டாரு ( வாத்தியாரதாங்க)
அந்த உள்ளுர் கிராம முக்கியஸ்தர் எனக்கு ஸ்ட்ராங் ரெக்கமன்டேஷன்
இவருக்கு சம்பளமே கொடுக்கவேண்டாம் சும்மாவே பசங்களுக்கு சொல்லித்தருவாருன்னு சொல்லி ஸ்கூலில் வாத்தியாரா சேர்த்துவிட்டாரு
கொஞ்சம் தயக்கத்தோடதான் தலைமை ஆசிரியர் சேர்த்துக்கிட்டாரு
மாசம் 400 ருபாய் சம்பளம் தரேன்னு பெருந்தன்மையா சொன்னாரு
அப்புறம்தாங்க படிக்க ஆரமிச்சேன் மற்ற மற்ற ஆசிரியர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு வகுப்பெடுக்கணும்னு முடிவு பண்ணேன்
அதற்காகவே நிரைய படிக்க துவங்கினேன் (நிஜமாதாங்க)
நாமதான் படுமக்கு ஸ்டுடன்ட்டாச்சே அதனால ஒரு மக்குஸ்ட்டுடன்ட்டுக்கு படிக்கறதுல என்னன்ன பிரச்சனைகள் உள்ளது நமக்கு அத்துபடி (அதையெல்லாம் சந்திச்சுதானே வந்தோம் ஒரு மக்குவோட பிரச்சனை இன்னோர் மக்குக்கதானே புரியும் )
அதனால வகுப்பெடுக்கபோகும் முன் நன்கு தயார் செய்து கொள்வேன்
அதனால நான் எடுத்த பாடங்களில் மாணவர்கள் அதிகமதிப்பெண் பெற்றார்கள் தலைமைஆசிரியருக்கு தலைகால் புரியவில்லை
என்னை மிகவும் அவருக்கு பிடித்துபோனதில் எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை
பசங்களுக்காக படிச்சதில எனக்கும் கொஞ்சம் அறிவு உண்டாகி
2000 டிஎன்பிஎஸ்சி தேர்வில் தொகுதி 4ல் முதல் முறையாக வெற்றிபெற்று அரசுபணியில் சேர்ந்தேன் அடுத்தஆண்டு நடைபெற்ற தேரிவிலும் வெற்றி பெற்று மறுபடி இரண்டாவது அரசுப்பணி
அதுக்கப்புறம் 2007ல் நடைபெற்ற குருப் 2 போட்டிதேர்வில் மாநில அளவில் 11வது இடம் ( என்னாலேயே நம்ப முடியலைங்க) சார்பதிவாளராக பணியில் சேர்ந்தேன்
அதுக்கப்புறம் கூட 3 முறை குருப் 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றும் 3முறையும் முதன்மை தேர்வில் தோல்வி ஒருவேலை அதில் வெற்றி பெற்றிருந்தால் டெபுடி கலக்ட்டராவே ஆயிருக்கலாம்
இத எதுக்காக சொல்றேன்னா என் பெருமைக்காக சத்தியமா சொல்லலீங்க இப்போ கூட +2 ல பெயிலான நம்மள மாதிரி ஸ்டுடன்ட்டுக்கு கவலைப்படவேணாம்னு சொல்றதுக்குதான்
அவ்ளோ பெரிய மக்கான நானே 3 அரசு வேலை வாங்கமுடிஞ்சுதுன்ன உங்களால முடியாதா என்ன
கவலைய விடுங்க பாஸ் நாம பெயிலாவரதெல்லம் சகஜம்தானே இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ணமுடியுமா..
- Rvenkat Alappakkam.
No comments:
Post a Comment