அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை.அவருடன் வாதிட்டான்.கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார்.அர்ஜுனனை அழைத்து,''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால்,நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,''என்றார்.
அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து,ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை. அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே,கண்ணன் அவனை அழைத்து,''கர்ணா,இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.கர்ணனும்,''இது என்ன பெரிய வேலையா?''என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த ஊர் பெரியவர் ஒருவரை அழைத்தான்.
அவரிடம் ,''உங்களிடம் இந்த தங்க மலையை தானமாக அளிக்கிறேன்.நீங்கள் உங்களுக்கு ஒரு பங்கை எடுத்துவிட்டு ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் இதை வெட்டி பிரித்து கொடுத்துவிடுங்கள் ,''என்று கூறியபடியே,சென்று விட்டான்.அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார்,''இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா?உனக்கு உன் கையால் தான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது , அதன்மூலம் அந்த பெயர் உனக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அனால் கர்ணனோ தானே எல்லோருக்கும் கொடுத்தேன் என்ற புகழுக்கு கூட ஆசைபடாமல் அந்த பெரியவரிடம் கொடுத்து எல்லோருக்கும் பங்கிட்டு கொடுத்துவிடுங்கள் என்று கூறி சென்றுவிட்டான். இப்பொழுது சொல் பெயருக்கு கூட ஆசைபடாத அவன் தானே உன்னை விட பெரிய வள்ளல் என்றான். அர்ஜுனன் தலைகுனிந்து நின்றான்.
No comments:
Post a Comment