Tuesday, April 2, 2013

புற்றுநோய்க்கான ‘க்ளிவெக்’

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனம், குறிப்பிட்ட வகை புற்றுநோய்க்கான ‘க்ளிவெக்’ என்ற மருந்தை இந்தியாவில் ஒரு லட்சம் ரூபாய் விலைக்கு விற்று வந்தது (இது ஒரு மாதத்திற்கு வரக்கூடிய அளவுக்கான விலை.) அதை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க முன்வந்தபோது, அந்த மருந்து தனது சொந்தக் கண்டுபிடிப்பு என்றும், அதற்கான காப்புரிமை வேண்டும் என்றும், வேறு யாரும் தயாரிக்கக் கூடாது என்றும் அடாவடி செய்தது. வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.

ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கிற ஒரு மருந்தில் சிறு மாற்றம் செய்துவிட்டு, பழைய தயாரிப்புக்கும் புதிய தயாரிப்புக்கும் அவற்றின் மருத்துவ ஆற்றலில் எவ்வித வேறுபாடும் இலலாத நிலையில், அது தனது சொந்தக் கண்டுபிடிப்பென்று கதைப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நேற்று (ஏப்.1) அதிரடித் தீர்ப்பை அளித்திருக்கிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் இந்த மருந்தை ஏராளமாகத் தயாரிக்க முடியும். 30,000 ரூபாய் விலையில் நோயாளிகள் அதைப் பெற முடியும்.

சமூக அக்கறை உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருந்துத் துறையினர், மனிதநேயர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறார்கள். நோவார்ட்டிஸ் நிறுவனம், இனிமேல் நாங்கள் இந்தியாவில் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு முதலீடு செய்யப்போவதில்லை என்று கடுப்புடன் அறிவித்திருக்கிறது.

via - Kumaresan Asak

No comments:

Post a Comment