பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (பாந்திரா-வொர்லி கடற்பாலம் பிறகு) ஆகும்.
இப்பெயரில் தரைப்பாலம், தொடருந்துப் பாலம் இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர். இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ. இரண்டு ஏற்ற ஓடுபாதைகளைக் கொண்ட தரைப்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.
No comments:
Post a Comment