நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களைஅனுபவித்துள்ளார்.
சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார். சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒருநாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.
அதன் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் அவர் சினிமாவில் நடிக்க வந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடங்களில் அவர் நடித்துள்ள போதிலும் இன்றும் திருவிளையாடல் படத்தில் அவர் நடித்ததருமி வேடம் எல்லோர் மனத்திலும் நீங்காத இடம்பெற்றது. பிழைப்புக்காகஅவர் ஓட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்துள்ளார் (பின்னாளில் இதுவே சர்வர் சுந்தரமானது).
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரது பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ். இடையில் சில காலம் இருவருக்கும் ஒரு பிரிவு வந்தாலும், மீண்டும் நாகேஷை அரவணைத்துக் கொண்டார் எம்ஜிஆர். மேக்கப் அறையில் எம்.ஜி.ஆர் தயாராக நேரம் தாமதமாவதால்கோபமடைந்த நாகேஷ் கிழவன் ரெடியா என்று கேட்க அது எம்.ஜி.ஆர் காதில் விழ அந்த மோதல் உருவானது. பின் உலகம்சுற்றும் வாலிபன் படத்தில் நாகே{க்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்கினார் அப்படத்தின் இயக்குநரான எம்ஜிஆர். குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி மிகவும் உடல் பாதித்த நிலையில் அவர் அதிலிருந்து மீண்டு வர உதவியவர் எம்ஜிஆர்.
அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் சேர்த்து இப்பவே குடிச்சேன். அதனால நான் பிழைப்பேனான்னே தெரியாத நிலை. ஆனால் மருத்துவர்களும் அண்ணன் எம்ஜிஆரும் எனக்கு புதுப்பிறவி கொடுத்துட்டாங்க என்று ஒரு முறை கூறியிருந்தார் நாகேஷ்.
எம்ஜிஆர், சிவாஜி (திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் விதிவிலக்கு!)படங்களில் காமெடியனாக நடித்துப் புகழ்பெற்றாலும், நடிகர் நாகேஷ் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜெலித்ததுகே. பாலச்சந்தர் மற்றும் சிறீதர் ஆகியோரது படைப்புகளில்தான்.
காதலிக்க நேரமில்லை படம், நாகேஷ் நகைச்சுவையில் ஒரு மைல் கல். ஒரு சாதாரண காட்சியை, வெறும் பாவனைகளில்,உச்சரிப்பின் மூலம் த்ரில்லர் காட்சியாக எப்படிக் காட்டுவது என திரைப்பட இயக்குநர்களுக்கே பாடம் நடத்தியிருப்பார் நாகேஷ் (ஸ்ரீதரின் கைவண்ணம்!).
கமல் ஹாசனின் பிற்காலப் படங்கள் அனைத்திலுமே நாகே{க்கு மறக்க முடியாத பாத்திரங்கள். அபூர்வ சகோதரர்கள் மூலம் ஒரு விதத்தில் நாகேஷின் பைனல் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தவரே கமல்தான் என்றாலும் மிகையில்லை.
மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர் என அந்தப் பட்டியல் தசாவதாரம் வரை தொடர்ந்தது. குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அவர் ‘நடித்த’ ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோனதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.
நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகே{க்குக்கிடைத்தது. நாகேஷ் நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார்.
அவருக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.
கிழவன் ரெடியா என்று எம்.ஜி.ரை கேலி செய்து தப்பி வந்த ஒரே நடிகர் நாகேஷ் !
மனைவி மரணமடைந்தபோது மரணத்தில் ஏற்பட்ட மர்மச் சிக்கலிலும் மீண்டவர் !
மகன் ஆனந்தபாபு தன்னைவிட பெரிய குடிகாரனானதை தாங்கிச் சிரித்தவர் !
புதிய காரை எடுத்துக் கொண்டு தாய்க்குக் காட்ட ஓடியபோது அங்கு தாயின் மரணத்தைக் கண்டவர் !
கிறீத்தவ பெண்ணை மணந்த காரணத்தால் குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட பிராமணர் !
திரையுலகில் உழைத்த பணத்தை நாசமாக்கிய நடிகர் வரிசையில் இடம் பெறுபவர் நாகேஷ் !
இலங்கைத் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் நாகேஷ் மரணமடைந்தார். வசந்தமாளிகை, திருவிளையாடல் போன்ற பிரபலமான திரைப்படங்களால் சரித்திரம் படைத்தவர் நாகேஷ்.
தமிழ் திரையுலகில் சந்திரபாபு நகைச்சுவையை உடலினால் காட்டுவதில் வெற்றி பெற்றார். அவருக்குப் பிறகு கே.ஏ.தங்கவேலு நகைச்சுவையை உரையாடலால் வெளிப்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்னர் வந்த நாகேஷ் சார்லி சாப்ளின் போல உடலினாலும், வசனத்தாலும் நடித்து சரித்திரம் படைத்தார்.
நகைச்சுவை நடிகராக இருந்த நாகேஷ் கே. பாலசந்தரின் படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது நகைச்சுவைக்கு அப்பால் குணசித்திர வேடங்களில் பெரிய முத்திரை பதித்தார். சர்வர்சுந்தரம், ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், தாமரை நெஞ்சம், மேஜர் சந்திரகாந்த் போன்ற படங்கள் நாகேஷின் குணசித்திர நடிப்பிற்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாக அமைந்தன.
நகைச்சுவை நடிகர்களில் சந்திரபாபுவிற்குப் பிறகு நடனத்தில் சாதனை படைத்தவர் நாகேஷ்தான். அவர் எடுத்த கடினமான நடனஅசைவுகளை அவருடன் நடித்த மற்றய நடிகைகளால் நெருங்கவே முடியாமல் இருந்த காரணத்தால் தனியான இவருடைய நடனங்களை படம் பிடித்தார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அதற்கு பின் வந்த ஜெய்சங்கர் – ரவிச்சந்திரன், அடுத்ததலைமுறையாக கமல் – ரஜினி பின்னர் வந்த தனுஷ் வரை பல தலைமுறை நடிகர்களோடு நடித்து 1000 திரைப்படங்களை தொட்டவர் நாகேஷ்.
அழகான முகமே திரைப்படத்தின் இலட்சணம் என்று கருதப்பட்ட காலத்தில் குன்றும் குழியுமாக இருந்த தனது முகத்தினால் சரித்திரம்படைக்க முடியுமென நிறுவினார்..!!
No comments:
Post a Comment