Tuesday, September 4, 2012

பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்



இலண்டனில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில், கிரிஷா ஹோசாநகரா நாகராஜிகௌடா வெள்ளிப் பதக்கம் வென்றார். கர்நாடகாவைச் சேர்ந்த 24 வயது கிரிஷா, இடது கால் இயலாதவர். இவர் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் 1.74 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

No comments:

Post a Comment