Wednesday, September 12, 2012

அருணாச்சலா வில்லேஜ் ஸ்கூல் - சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி



அணுவுலை வந்தாதான் மின்சாரம் வரும்னு நம்புற அறிவாளிகளே , திருவண்ணாமலை மாவட்டம் வேடப்பனுர் கிராமத்தில்"அருணாச்சலா வில்லேஜ் ஸ்கூல்" உள்ளது.தமிழகத்திலேயே முதன் முறையாக சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி என்ற பெருமை இப்பள்ளிக்கே உண்டு.தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக் கொள்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல்,தமிழகத்திலேயே 1 ரூபாய் கூட வாங்காமல் இலவச ஆங்கிலவழிக் கல்வியைத் தரும் தனியார் பள்ளி என்ற பெருமையும் உண்டு.கிராமப்புற மாணவர்கள் மட்டுமே படிக்கும் இங்கு,ஒவ்வொரு மாணவருக்கும் 1 லட்சம் ரூபாய் வங்கியில் இன்சுரன்ஸ் செய்துள்ளது இப்பள்ளி நிர்வாகம்.மற்ற நாடுகளை விட நம் நாட்டில் சூரிய ஆற்றல் அதிகமாகவே கிடைக்கிறது.சூரிய வளத்தை பயன்படுத்தி குஜராத் போன்று மின்சாரம் தயாரிக்கலாமே?
 
 

 

No comments:

Post a Comment