Tuesday, February 5, 2013

உறவினர்களை பிரிந்த நிலையில் தவித்து வந்த தாய் பத்திரமாக தன உறவினர்களிடம் சேர்க்கபட்டுள்ளார்.....அந்த தாயை அவரின் உறவினர்களிடம் சேர்ப்பதற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி..
திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தோழர்கள் கவனத்திற்கு !!

சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகில், அழுக்கு உடையுடன், வெற்றிலை பாக்கின் "காவி' நிறம் படிந்த ஒரு சில பற்களுடன், கண் பார்வை குறைந்த நிலையில் அங்கும் இங்கும் தடுமாறி கொண்டிருந்தார் 60 வயதை கடந்த மூதாட்டி.

என் பேரு முல்லையம்மாள். வயசு 60 லேர்ந்து 70 இருக்கும். என் சொந்த ஊரு, திருத்துறைப்பூண்டி நீர்வழி ஓடாத்தெரு. கணவர் பெயர் லட்சுமணன். என் மகன்களில் மூத்தவன் ராஜா. அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். இளையவன் ஜெயசங்கர். அவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.என் மகன்கள் என்னைய ரொம்ப பாசமா பார்த்துகிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெத்தலை பாக்கு வாங்க கடைத்தெருவுக்கு வந்தேன், கண்ணு சரியா தெரியலையா, எந்தப் பக்கம் போகணுமுன்னு தெரியலை; இப்ப இங்க இருக்கேன். நான் வந்த ரோட்ல ஒரு சிலை இருக்கும்; அங்கதான் என் மூத்த மகன் வீடு இருக்கு.

மேற்கண்ட தகவலை தன்னிடம் விசாரிக்கும் அனைவரிடத்திலும், அவர் கூறுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளோர் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதமாக அவர் அங்கிருப்பது தெரிய வந்தது.

திருத்துறைபூண்டியை சேர்ந்த உறவுகள் யாராவது இந்த தாயை அவரின் உறவினர்களிடம் சேர்த்துவிட முயற்சியுங்கள்......அவரின் இறுதிகாலம் நின்மதியுடன் இருக்க உதவுங்கள்...

-dinamalar
திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தோழர்கள் கவனத்திற்கு !!

சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகில், அழுக்கு உடையுடன், வெற்றிலை பாக்கின் "காவி' நிறம் படிந்த ஒரு சில பற்களுடன், கண் பார்வை குறைந்த நிலையில் அங்கும் இங்கும் தடுமாறி கொண்டிருந்தார் 60 வயதை கடந்த மூதாட்டி.

என் பேரு முல்லையம்மாள். வயசு 60 லேர்ந்து 70 இருக்கும். என் சொந்த ஊரு, திருத்துறைப்பூண்டி நீர்வழி ஓடாத்தெரு. கணவர் பெயர் லட்சுமணன். என் மகன்களில் மூத்தவன் ராஜா. அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். இளையவன் ஜெயசங்கர். அவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.என் மகன்கள் என்னைய ரொம்ப பாசமா பார்த்துகிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெத்தலை பாக்கு வாங்க கடைத்தெருவுக்கு வந்தேன், கண்ணு சரியா தெரியலையா, எந்தப் பக்கம் போகணுமுன்னு தெரியலை; இப்ப இங்க இருக்கேன். நான் வந்த ரோட்ல ஒரு சிலை இருக்கும்; அங்கதான் என் மூத்த மகன் வீடு இருக்கு.

மேற்கண்ட தகவலை தன்னிடம் விசாரிக்கும் அனைவரிடத்திலும், அவர் கூறுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளோர் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதமாக அவர் அங்கிருப்பது தெரிய வந்தது.

திருத்துறைபூண்டியை சேர்ந்த உறவுகள் யாராவது இந்த தாயை அவரின் உறவினர்களிடம் சேர்த்துவிட முயற்சியுங்கள்......அவரின் இறுதிகாலம் நின்மதியுடன் இருக்க உதவுங்கள்.

No comments:

Post a Comment