அன்னை நியோமி அன்பு இல்லம்
இன்றைய நிலையில் வெளிநாட்டு நிதி பெறாமல் அனாதை இல்லம் நடத்த முடியாது . ஆனால் இந்த கூற்றை பொய்யாகும் விதமாக எட்டு ஆண்டுகளாக மதுரை சமயநல்லூரில் வெளிநாட்டு நிதி பெறாமல் , அரசு நிதியை எதிர்நோக்காமல் சிறப்பாக இயங்கி வருகிறது அன்னை நியோமி அன்பு இல்லம் .
இந்த இல்லத்தில் 35 பெண் குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர் . தன் இளவயதில் 18 ஆண்டுகாலம் பசியோடு, வறுமையோடு , பெற்றோர் அன்பு கிடைக்காமல் போராடி வளர்ந்தவர் சூசை பிரகாசம். இன்றும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் . பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத இவர் , ரயிலில் கழிவறையில் கிடந்த குழந்தையை காப்பற்றி வளர்த்து வருகிறார். தான் நோயுடன் பல ஆண்டுகளாக போராடி கொண்டிருந்தாலும், பல்வேறு பிர்ச்சனைகள் வந்தாலும் குழந்தைகள் இல்லம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக செயல் பட்டுவருகிறார்.
கிராமங்களில் பச்சிளம் பெண்குழந்தைகள் கள்ளி பால் கொடுத்து அவல நிலையை நேரில் கண்டு மனம் வெதும்பி இந்த அனாதை இல்லத்தை தொடங்கினார்.
தன் பசியோடு போராடிய நிலை எந்த குழந்தைக்கும் வர கூடாது என்று அன்னை நாமி அன்பு இல்லத்தை நடத்தி வருகிறார்.
மதுரையில் சிறப்பாக இயங்கி வரும் குழந்தைகள் இல்லம் என்ற நல்ல பெயர் எப்போதும் அன்னை நியோமி அன்பு இல்லத்துக்கு உண்டு.
இந்த இல்லத்தின் குழந்தைகளுக்கு உணவுக்கு , கல்விக்கு உதவ நினைப்போர் , தொடர்பு கொள்ளவும். சூசை பிரகாசம் , மொபைல் : 94433 01288
இந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒருநாள் (மூன்று வேளை) உணவளிக்க ரூபாய் 2000 மட்டுமே.
NAME OF THE ACCOUNT : MASHA TRUST
NAME OF THE BANK : INDIAN BANK
BRANCH: THALLAKULAM BRANCH
ACCOUNT NUMBER: 495948948
உங்களின் உதவி நூறு சதவிதம் சரியான குழந்தைகளுக்கு செல்லும் .....
No comments:
Post a Comment