Wednesday, February 6, 2013

குழந்தைகளுக்கு கதை சொல்வது கடினம்..
--------------------------------------------------------------------

தினமும் இளமாறனுக்கு நான் ரெண்டு கதையும் எனக்கு அவன் ரெண்டு கதையும் சொன்னதுக்கப்புறம் தூங்குவோம்.

இளமாறன் எனக்குக் கதை சொல்வதில் அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவன் கதை சொல்ல ஆரம்பிச்சா கற்பனை குதிரை எங்கெங்கோ பயணிக்கும். எங்கவீட்டு பல்லி வரைக்கும் கதைல வந்து எட்டிப் பார்த்துட்டுப் போவாங்க..

நமக்குத் தான் பிரச்னை. குழந்தையாக இருக்கும்போது எவ்வளவோ கதை படிச்சிருக்கேன். ஆனா ஒண்ணும் ஞாபகம் வராது. அந்த நேரத்துக்கு சூனியக்காரி.. பறக்கும் குதிரை.. பறக்கும் கம்பளம்.. ஏழு மலை கடல்.. தவளை ராணினு ஏதாவது அடிச்சு விடுவேன்.

கதை சொல்வதே ஒரு தனிக்கலை. அதுவும் குழந்தைகளை கவரும் விதமாக கதை சொல்லுவது பெரும்கலை. அதனால இளமாறனுக்குக் கதை சொல்லுறதுக்காகவே குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்களைத் தேடுவேன்.

நான் சிறுவனாக இருக்கும்போது குழந்தைகளுக்கென ஏகப்பட்ட புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இன்றைய தலைமுறையினரிடம் தமிழ் தொலைந்துப் போய்விட்டதால் அவர்களுக்கான புத்தகங்களும் தொலைந்துவிட்டது.

குழந்தைகளுக்கான நல்ல புத்தகங்கள் இல்லாத சூழலில் பத்திரிகையாளர் பெ.கருணாகரன் எழுதிய `அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?’ என்ற புத்தகம் வாசிக்கக்கிடைத்தது.

பொதுவாகவே பெரியவர்களுக்குக் கதை எழுதுவது எளிது. ஆனால் குழந்தைகளுக்கான கதையும் அவர்களைக் கவரும் மொழிநடையும் அவ்வளவு எளிதானது அல்ல.

ஆனால் இந்தப் புத்தகத்தில் `தவளையார் கொடுத்த பர்த்டே பார்டி..’ என்ற முதல் கதையிலிருந்து `காட்டில் மிஸ்டர் ஃபாரஸ்ட் யார்’ என்ற கடைசிக் கதைவரை ஒவ்வொரு கதைகளும் படிக்க அவ்வளவு சுவராஸ்யமாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் இன்னொரு கூடுதல் சிறப்பு உண்டு.

இந்தக் கதைகளுக்கான படங்கள் அனைத்தும் குழந்தைகள் வரைந்தது. அப்பாடக்கர் ஓவியர்களை வைத்து வரையாமல் குழந்தைகளை வைத்து வரைந்திருக்கும் இந்தத் திட்டமே அருமையான ஒன்று.

பெ.கருணாகரன் அவர்களைக் குமுதத்தில் ஒன்றாகப் பணிபுரிந்த நாட்களிலிருந்தே தெரியும். நல்ல சிறுகதை எழுத்தாளர் என்பதும் தெரியும். ஆனால் இவ்வளவு பிரமாதமான குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதுவார் என்பது புதிதாக இருக்கிறது.

வாழ்த்துகள் கருணாகரன் சார்..
இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க கதையை வச்சு தான் இளமாறன்கிட்ட சீன் போடணும்.. நன்றி.. :)

(இந்தப் புத்தகத்தை நீங்களும் படிக்கலாம். குழந்தைகளுக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுக்கலாம்.

புத்தகத்தைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள:

புத்தகத்தின் விலை 100 ரூபாய். புத்தகத்தை ஆன்லைனில் பணம் கட்டிப் பெற meesaipathippu@gmail.com என்கிற முகவரிக்கு உங்கள் ஆர்டரை புக் செய்யுங்கள்.

கூரியரில் பெற
பெ. கருணாகரன்,
புதிய தலைமுறை வார இதழ்,
25ஏ (என்பி) திருவிக இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை - 32 என்ற முகவரிக்கு உங்கள் தெளிவாக வீட்டு விலாசம் குறிப்பிட்டு மணியார்டர் அனுப்புங்கள்.)
 
No comments:

Post a Comment