நடிகை
ஹன்சிகா மோத்வானி இளம் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
பணம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும்
நடிகர், நடிகையர் மத்தியில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர் போல் தெரிகிறது.
...
21 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து பராமரித்து வரும் அவருடைய அரியச் செயலுக்காக
இவ்விருது வழங்கப்படுகிறது.
இவர் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை
குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையைத் தத்தெடுத்து அவர்களின்
வாழ்க்கைக்குத் தேவையான செலவுகளைச் செய்து வருகிறார்.
இந்த அரியச் செயலால்
இதுவரை 21 அனாதை குழந்தைகள் அவருடைய பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இதுவன்றி
சமூகசேவைகள் செய்வதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவவும் அவர்
திட்டமிட்டுள்ளார்.
இளம் வயதிலேயே சமூக நோக்கோடு அவர் செய்துவரும் இந்த
அரியச் செயலை பாராட்டி, பிரபல பெண்கள் இதழான JFW (just for women) ஹன்சிகாவை இளம்
சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்துள்ளது.
அடுத்த மாதம் மார்ச் 1-ஆம்
தேதி சென்னையில் நடக்க இருக்கும் விழாவில் ஹன்ஷிகாவுக்கு இந்த விருது
வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment