Friday, February 22, 2013

பெற்ற மகள் சாட்சியாக ‘அப்பா அம்மா’ காதல் ஜோடிக்கு கல்யாணம் : சோழவந்தானில் சுவாரஸ்யம்

இரண்டு வயது குழந்தை முன்னிலையில் காதல் ஜோடி கல்யாணம் செய்துகொண்ட சுவாரஸ்ய சம்பவம் சோழவந்தானில் நடந்தது. குடும்ப உறவுகளால் பிரிக்கப்பட்ட காதல் 3 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு, சட்ட பணிகள் ஆணையத்தின் உதவியுடன் திருமணமாக கைகூடியுள்ளது. மதுரை கூடல்புதூரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (23). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி வைதேகியும் (21) கடந்த 2010ம் ஆண்டு ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இரு குடும்பமும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ளலாமா என்று ஆலோசித்துள்ளனர். வைதேகி அப்போது மைனர் என்பதால் சட்ட சிக்கல் ஏற்படலாம் என்று பயந்தனர்.

தங்களுக்கு குழந்தை பிறந்து விட்டால், பெற்றோர் கட்டாயம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என திட்டமிட்டனர். வைதேகி கர்ப்பமானார். இது வைதேகியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூடல்புதூர் போலீசில் புகார் செய்தனர். ராஜேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வைதேகி மைனர் என்பதால் பெற்றோருடன் அவரை அனுப்பி வைத்தனர். கர்ப்பத்தை கலைக்குமாறு பெற்றோர் கூறியும் வைதேகி மறுத்து விட்டார். பின்னர், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ‘ஜான்சிராணி’ என்று பெயர் வைத்தார். இதற்கிடையே, கடந்த மாதம் மதுரையில் சட்ட பணிகள் ஆணையக்குழு கூட்டம் நடந்தது. இங்கு வந்த வைதேகி, ஆணைய நீதிபதி ஜெசிந்தா மார்ட்டினை சந்தித்து, தன் பிரச்னையை எடுத்து கூறினார். 2 வயது குழந்தை ஜான்சிராணியுடன் பரிதவிக்கும் தன்னையும், காதலன் ராஜேசையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இருவரையும் சேர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தை கண்காணிக்க வக்கீல் பாக்கியலட்சுமியை நியமித்தார். மதுரை புறநகர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் உதவியுடன், இந்த குழுவினர் இரு குடும்பத்தினரையும் வரவழைத்து பேசினர். இதில், உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வக்கீல் பாக்கியலட்சுமி முன்னிலையில், வைதேகி ராஜேஷ் கண்ணனுக்கு சோழவந்தானில் நேற்று காலை திருமணம் நடந்து முடிந்தது. திருமண மேடையில் 2 வயது குழந்தை ஜான்சிராணி அருகே இருந்து மழலைச் சிரிப்பால் ‘வாழ்த்த’ இரு வீட்டார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அட்சதை போட.. வைதேகி கழுத்தில் தாலி கட்டினார் ராஜேஷ் கண்ணன். பெற்ற மகள் முன்னிலையில், காதல் ஜோடி கல்யாணம் செய்துகொண்ட சம்பவம் சோழவந்தானில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment