பசியின் கோரத்தை அறிமுகப்படுத்தியதும் சென்னைதான். மாம்பலம் ரயில்நிலையத்திற்கு பின்புறம் பால்பேரின்பம் மேன்ஷனில் தங்கியிருந்தேன். தெருவில் இறங்கி லேண்ட்லைன் போன் விற்கும் வேலை. ஏதோ ஒரு தைரியத்தில் கடைசி பத்து ரூபாயோடு அறையில் இருந்து கிளம்பினேன். அன்று வேலையை விட அன்றைய நாளை நகர்த்துவதுதான் இலக்காக இருந்தது. நடந்தே தி.நகரிலிருந்து வள்ளுவர் கோட்டம் வந்தடைந்தபோது 11 காலை மணியாகிவிட்டது. பசி. ஒருவேளை பணம் இருந்திருந்தால் அந்நேரத்திற்கு பசித்திருக்காது. ஏனெனில் காலை உணவை முற்றிலும் துறந்து சுற்றிய காலம் அது. அன்று 11 மணிக்கே பசிக்க ஆரம்பித்துவிட்டுது. சாலையோரத்தில் விற்கப்படும் லெமன் ஜுஸ் 2 ரூபாய் 50 பைசாதான். ஜில்லுனு குடிச்சாச்சு. ஸ்டெர்லிங் ரோடு, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் ரோடு வழியாக அமைந்தகரையை வந்தடைந்தேன் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கியபடி. பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு வந்தபோது இன்னொரு லெமன் ஜுஸ் அதே இரண்டரை ரூபாய்க்கு. விஜயகாந்த் திருமண மண்டபத்தை இடித்துக்கொண்டிருந்தார்கள். வடபழனி 100அடி ரோட்டில் அம்பிகா எம்பையர் வாசலில் சற்று ஒய்வு. தலை சுற்றியது. வெம்பிப்போயிருந்தேன். ஹோட்டலிலிருந்து வெளிவரும் வெளிநாட்டவர்களிடம் 'என்னிடம் பாஸ்போர்ட் உள்ளது. உங்கள் ஊருக்கே கூட்டிச்சென்று ஏதாவது வேலையும்', இப்போதைக்கு கொஞ்சம் உணவும் கேட்க திட்டம். மீண்டும் லெமன் ஜுஸ். பல முறை மனதிற்குள்ளேயே ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன் எப்படி உதவி கேட்க என. யாருமே வெளிவரவில்லை. பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. கிளம்பிட்டேன். கடைசி பத்து ரூபாயின் கடைசி 2.50ம் காலி. 8 மணியிருக்கும் மேன்ஷன் வந்தாச்சு. எந்த யோசனையும் இல்லை. காலையில் எப்படியாவது சாப்பாடு கிடைக்கும் என போர்வையை இழுத்து போர்த்தி படுத்தேன். ம்ஹும். நாள் முழுவதும் நடந்ததால் கால் வலி பின்னியெடுத்தது. பசியும். இரவு பத்தரை மணி. வாசலில் காத்திருந்தேன் யாரிடமாவது கேட்டுவிட வேண்டும்.
11 மணிக்கு லட்சுமணன் அண்ணன் வந்தார். (நெல்லைக்காரர். அங்காடித்தெருவில் இருவரும் ஒன்றாக வேலை பார்த்திருந்தோம்.) சட்டை மாற்றிக்கொண்டிருந்தவரிடம் 'அண்ணே'.. 'என்னல' என்றார்.
'பசிக்குது' என்றேன் கண்ணீர் முட்ட குனிந்துகொண்டே.
பசியை விட பசி உண்டாக்கும் இயலாமையும் அவமானமும் இருக்கே, அது சொல்லில் அடங்காது. கையைப் பிடித்து தரதரவென இழுத்துபோய் ஹோட்டலில் விட்டார். சாப்பிட்டு முடிக்கும்வரை கூடவே இருந்துவிட்டு ஹோட்டல் ஓனரிடம் 'இவன் என் தம்பிதான். எப்ப வேணாலும் வருவான். என்ன வேணாலும் குடுங்க. என் கணக்குல எழுதிக்குங்க'னு சொல்லிவிட்டு அழைத்து வந்தார். அந்த இரவு எவ்வளவோ உணர்த்தியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நெல்லையில் அண்ணனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பார்த்ததும் கட்டிப்பிடித்துக்கொண்டார். கூட இருந்த வைரத்திடம் (Vairam Sivakasi) அறிமுகப்படுத்தி வைத்தேன். எங்களை வழியனுப்பும் வடை சிரித்துக்கொண்டே இருந்தார் மனுஷன்.
அந்தப் பட்டினி மறுநாளும் தொடர்ந்திருந்தால் ஒன்று தற்காலிகமாக பிச்சையெடுத்திருப்பேன் அல்லது திருடியிருப்பேன். இல்லை சென்னையை விட்டே ஓடியிருப்பேன். :-)
((படத்தில் பச்சை நிற சட்டையில் இருப்பவர் லட்சுமணன், நீல சட்டையில் இருப்பவர் இதை எழுதிய முத்துராம்))
Thanks - பிரபல எழுத்தாளர் முத்துராம்

No comments:
Post a Comment