Wednesday, February 27, 2013

அன்னை நியோமி அன்பு இல்லம்

இன்றைய நிலையில் வெளிநாட்டு நிதி பெறாமல் அனாதை இல்லம் நடத்த முடியாது . ஆனால் இந்த கூற்றை பொய்யாகும் விதமாக எட்டு ஆண்டுகளாக மதுரை சமயநல்லூரில் வெளிநாட்டு நிதி பெறாமல் , அரசு நிதியை எதிர்நோக்காமல் சிறப்பாக இயங்கி வருகிறது அன்னை நியோமி அன்பு இல்லம் .

இந்த இல்லத்தில் 35 பெண் குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர் . தன் இளவயதில் 18 ஆண்டுகாலம் பசியோடு, வறுமையோடு , பெற்றோர் அன்பு கிடைக்காமல் போராடி வளர்ந்தவர் சூசை பிரகாசம். இன்றும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் . பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத இவர் , ரயிலில் கழிவறையில் கிடந்த குழந்தையை காப்பற்றி வளர்த்து வருகிறார். தான் நோயுடன் பல ஆண்டுகளாக போராடி கொண்டிருந்தாலும், பல்வேறு பிர்ச்சனைகள் வந்தாலும் குழந்தைகள் இல்லம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக செயல் பட்டுவருகிறார்.

கிராமங்களில் பச்சிளம் பெண்குழந்தைகள் கள்ளி பால் கொடுத்து அவல நிலையை நேரில் கண்டு மனம் வெதும்பி இந்த அனாதை இல்லத்தை தொடங்கினார்.
தன் பசியோடு போராடிய நிலை எந்த குழந்தைக்கும் வர கூடாது என்று அன்னை நாமி அன்பு இல்லத்தை நடத்தி வருகிறார்.

மதுரையில் சிறப்பாக இயங்கி வரும் குழந்தைகள் இல்லம் என்ற நல்ல பெயர் எப்போதும் அன்னை நியோமி அன்பு இல்லத்துக்கு உண்டு.

இந்த இல்லத்தின் குழந்தைகளுக்கு உணவுக்கு , கல்விக்கு உதவ நினைப்போர் , தொடர்பு கொள்ளவும். சூசை பிரகாசம் , மொபைல் : 94433 01288

இந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒருநாள் (மூன்று வேளை) உணவளிக்க ரூபாய் 2000 மட்டுமே.

NAME OF THE ACCOUNT : MASHA TRUST

NAME OF THE BANK : INDIAN BANK

BRANCH: THALLAKULAM BRANCH

ACCOUNT NUMBER: 495948948

உங்களின் உதவி நூறு சதவிதம் சரியான குழந்தைகளுக்கு செல்லும் .....

உங்களின் ரூ 100 க்கும் அவர்களிடம் மதிப்பு உண்டு

யாரோ ஒருவர் இந்த குழந்தைகளுக்கு தன்னால் முடிந்ததை உதவினால் அதில் நம்பங்கும் உண்டு என்ற சந்தோசத்தில் மட்டுமே எழுதுகிறேன்...

ஒருநிமிடம் நமக்கு உறவுகள் என்று யாருமில்லை என்று கற்பனை செய்து பார்த்துவிட்டு பிறகு படியுங்கள்...

எங்கள் திருமணநாள் அன்று ஒரு ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஒரு வேலை அன்னதானம் வழங்கலாமென்று முடிவெடுத்து இன்று சென்றிருந்தோம். அங்கு இருந்தவர்கள் எல்லாம் தன்னை பெற்றவர்கள் யாரென்றே தெரியாத குழந்தைகளும், தான் பெற்ற குழந்தைகளால், உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர்கலுமே (இதில் ஊனமுற்ற குழந்தைகளும் முதியவர்களும் உண்டு). இதை ( மத்திய அரசின் அனுமதியுடன் ) நிறுவி, 9 வருடங்களாக தனது சொந்த ஆர்வத்தால் நடத்தி வருபவர் * P . சக்திவேல்* எனும் தனி மனிதர்...

பணமிருந்தால் ஒருமாதத்திற்கு கூட நாம் அன்னதானம் அளிக்கலாம் ஆனால் மனமிருந்தால்தான் இதுபோல அமைப்புகளை நடத்தமுடியும் .( தற்போது 50 குழந்தைகள், 20 வயதானவர்களும் இந்த இல்லத்தில் இருகின்றனர்) குழந்தைகளின் அடிப்படை வசதி, பள்ளிக்கு அனுப்புவது, முதியவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் இவரே கவனிக்கிறார் . சில மனிதநேயங்களின் உதவியுடன்...

இது பெரிய ஆசிரமமோ , தொண்டு நிறுவனமோ கிடையாது ஒரு லிட்டர் பால் கூட தானமாக ஏற்கிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் இதுபோல் அமைப்புக்கு உதவ நிறைய பேர் இருகிறார்கள் கண்டிப்பாக நிறையபேர் உதவிருப்பீர்கள்...

எனக்கு இது புது அனுபவம் அதனால் உங்களுடன் பகிர்கிறேன் இதை படிக்கும் ஏதோ ஒரு மனிதநேயம் உதவநினைதால் கீழுள்ள முகவரியை, அலைபேசியை தொடர்புகொள்ளலாம் . உங்களின் ரூ 100 க்கும் அவர்களிடம் மதிப்பு உண்டு(சமையல் பொருள்கள், ஆடைகள் அனைத்தையும் பெறுகிறார்கள்...)

NOCOME TRUST"
#18, THENKARAI STREET, VADAMATTAM ROAD,
KARAIKAL - 609609
TEL: O4368- 266714, CELL 9047281743 ( Mr. P.SAKTHIVEL)

நன்றி : காரை செந்தில் குமார்.
இது லைக் , கமென்ட்க்காக எழுதி tag செய்யவில்லை. விருப்பமிருந்தால் ஷேர் செய்யுங்கள்...

Tuesday, February 26, 2013

உங்களுக்கு தெரியுமா..?

  • வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

    குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
    ...
    புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

    ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

    சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

    தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

    கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

    8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

    சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

    இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

    திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

    கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

    எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

    40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

    சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

    பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

    வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

    பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

    நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

    லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

    15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

    குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

    எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

    வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

    சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

    கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்..
    See More
    உங்களுக்கு தெரியுமா..?

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

இளம் சாதனையாளர் விருது பெறும் நடிகை ஹன்சிகாவின் அரிய செயல்..........!!

  • நடிகை ஹன்சிகா மோத்வானி இளம் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பணம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் நடிகர், நடிகையர் மத்தியில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர் போல் தெரிகிறது.
    ...
    21 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து பராமரித்து வரும் அவருடைய அரியச் செயலுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

    இவர் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையைத் தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான செலவுகளைச் செய்து வருகிறார்.

    இந்த அரியச் செயலால் இதுவரை 21 அனாதை குழந்தைகள் அவருடைய பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இதுவன்றி சமூகசேவைகள் செய்வதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    இளம் வயதிலேயே சமூக நோக்கோடு அவர் செய்துவரும் இந்த அரியச் செயலை பாராட்டி, பிரபல பெண்கள் இதழான JFW (just for women) ஹன்சிகாவை இளம் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்துள்ளது.

    அடுத்த மாதம் மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் விழாவில் ஹன்ஷிகாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

    இளம் சாதனையாளர் விருது பெறும் நடிகை ஹன்சிகாவின் அரிய செயல்..........!!

நடிகை ஹன்சிகா மோத்வானி இளம் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பணம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் நடிகர், நடிகையர் மத்தியில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர் போல் தெரிகிறது. 

21 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து பராமரித்து வரும் அவருடைய அரியச் செயலுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

இவர் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையைத் தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான செலவுகளைச் செய்து வருகிறார். 

இந்த அரியச் செயலால் இதுவரை 21 அனாதை குழந்தைகள் அவருடைய பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இதுவன்றி சமூகசேவைகள் செய்வதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இளம் வயதிலேயே சமூக நோக்கோடு அவர் செய்துவரும் இந்த அரியச் செயலை பாராட்டி, பிரபல பெண்கள் இதழான JFW (just for women) ஹன்சிகாவை இளம் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்துள்ளது. 

அடுத்த மாதம் மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் விழாவில் ஹன்ஷிகாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

via - சங்கை ரிதுவான் (பக்கம்)

எச்சரிக்கை...!

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
... யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?

பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே
கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’

‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.
இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

Monday, February 25, 2013

ஒரு தடவை ஒருத்தர் ,கலைவாணர்கிட்டே வந்து...
ஐயா... என் குழந்தை செத்துப் போச்சு! ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து “இந்தாங்க... அடக்கம் செய்யுங்க!ன்னு சொல்லி அனுப்பிவைச்சார்.
ஒரு வருசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். இவறு மறந்திருப்பார்ங்கற நினைப்பிலே “ அண்ணே...
என் குழந்தை இறந்து போச்சண்ணே! ன்னார் இவரு மறுபடியும் நூறு ரூபாய் கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

ஏழெட்டு மாசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். அவரு வாயைத் திறக்கறதுக்க முன்னாடியே இவரு நூறு ரூபாயை அவரு கையில வெச்சு
“போன ரெண்டு தடவைதான் குழந்தை செத்துப்போச்சு“
இந்தத் தடவையாவது சாகாமக் காப்பாத்திடுங்க! ன்னார்.
அதுக்கப்பறம் அந்த ஆள் வர்றதே இல்லையாம் .

Thanks - Chandran Veerasamy

நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.

அது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.

அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தார்.

சிறிது நேரம் கழித்து நாராயணசாமி தன் மனைவிக்கு போன் செய்து கேட்டார்,

"உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?"

"ஆம்" என்று மனைவி சொல்ல

நாராயணசாமி சொன்னார்,

"போனை பூனையிடம் கொடு...எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை".

ஒரு உயிர் காக்க……ஒரு நிமிடம் படியுங்கள்

ஈரோடு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் த.செல்வி (வயது 41) என்பவர் அவசர இதய சத்திர சிகிச்சைக்காக சென்னை “Madras Medical Mission” hospital இல் அனுமதிக்கப்பட்டுள்ளார் 5 குழந்தைகளுக்கு தாயான இவரின் இதய சிகிச்சைக்காக 250,000 /= செலுத்துமாறு Hospital நிர்வாகம் கோரியுள்ளது. இவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி MMM இல் இயங்கிவரும் Social service அமைப்பினர் 120,000 /= உதவுவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர் மீதமுள்ள 130,000 /= தொகையை குடும்பத்தினரை செலுத்துமாறு கோரியுள்ளனர். நாளாந்த செலவுகளுக்கே சிரமப்படும் இந்த குடும்பத்தினருக்கு இந்த பெரிய தொகை (130,000 /=) எட்டா கனியாக உள்ளது. கலைஞர் காப்பீடு திட்டத்துக்கு தொடர்பு கொண்டபோது காப்பீடுத்திட்டத்தின் உதவி வந்தடைய 3 மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். ஆனால் Hospital நிர்வாகம் அதிகபட்சம் 1-3 வாரத்துக்குள் கண்டிப்பாக சத்திர சிகிச்சை செய்யவேண்டுமென அறிவுறித்தியுள்ளனர்..... செய்வதறியாது தவித்துநிக்கும் இந்த குடும்பத்திற்க்கு தயவு செய்து உதவி கரம் நீட்டுங்கள்.... முடியாதவர்கள் தயவுசெய்து உங்கள் நண்பர்களிடம் இந்த அவசர தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள் ....
குடும்ம்ப விபரம் -
தங்கவேல் (வ-55)
செல்வி (வ-41)
பிள்ளைகள் -
மனோஜ்(வ-20)
தேவப்ரியன் (வ-18)
ஜீவநேசன் (வ-16)
பியுலா (வ-13)
ப்ரின்சி (வ-09)
Hospital தொடர்புக்கு
Madras Medical Mission (MMM)
Address: 4-A, Dr. J. Jayalalitha Nagar,
Mogappair, Chennai - 600 037,
Ph no: +91 44 26565961 , 26565801, 26565991
Web: www.madrasmedicalmission.org
(Hospitalக்கு தொடர்புகொள்பவர்கள் Social service இன் தொலைபேசி இணைப்பை கேளுங்கள்)
குடும்பத்தினர் தொடர்புக்கு
Thangavel ,
No- 63 , CR Camp, muthukoundar palayam,
Eenchampalli, erode.
Pho: +91 7502743524

தகவல் : Arul Romesh

Sunday, February 24, 2013

பசியின் கோரம்

பசியின் கோரத்தை அறிமுகப்படுத்தியதும் சென்னைதான். மாம்பலம் ரயில்நிலையத்திற்கு பின்புறம் பால்பேரின்பம் மேன்ஷனில் தங்கியிருந்தேன். தெருவில் இறங்கி லேண்ட்லைன் போன் விற்கும் வேலை. ஏதோ ஒரு தைரியத்தில் கடைசி பத்து ரூபாயோடு அறையில் இருந்து கிளம்பினேன். அன்று வேலையை விட அன்றைய நாளை நகர்த்துவதுதான் இலக்காக இருந்தது. நடந்தே தி.நகரிலிருந்து வள்ளுவர் கோட்டம் வந்தடைந்தபோது 11 காலை மணியாகிவிட்டது. பசி. ஒருவேளை பணம் இருந்திருந்தால் அந்நேரத்திற்கு பசித்திருக்காது. ஏனெனில் காலை உணவை முற்றிலும் துறந்து சுற்றிய காலம் அது. அன்று 11 மணிக்கே பசிக்க ஆரம்பித்துவிட்டுது. சாலையோரத்தில் விற்கப்படும் லெமன் ஜுஸ் 2 ரூபாய் 50 பைசாதான். ஜில்லுனு குடிச்சாச்சு. ஸ்டெர்லிங் ரோடு, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் ரோடு வழியாக அமைந்தகரையை வந்தடைந்தேன் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கியபடி. பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு வந்தபோது இன்னொரு லெமன் ஜுஸ் அதே இரண்டரை ரூபாய்க்கு. விஜயகாந்த் திருமண மண்டபத்தை இடித்துக்கொண்டிருந்தார்கள். வடபழனி 100அடி ரோட்டில் அம்பிகா எம்பையர் வாசலில் சற்று ஒய்வு. தலை சுற்றியது. வெம்பிப்போயிருந்தேன். ஹோட்டலிலிருந்து வெளிவரும் வெளிநாட்டவர்களிடம் 'என்னிடம் பாஸ்போர்ட் உள்ளது. உங்கள் ஊருக்கே கூட்டிச்சென்று ஏதாவது வேலையும்', இப்போதைக்கு கொஞ்சம் உணவும் கேட்க திட்டம். மீண்டும் லெமன் ஜுஸ். பல முறை மனதிற்குள்ளேயே ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன் எப்படி உதவி கேட்க என. யாருமே வெளிவரவில்லை. பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. கிளம்பிட்டேன். கடைசி பத்து ரூபாயின் கடைசி 2.50ம் காலி. 8 மணியிருக்கும் மேன்ஷன் வந்தாச்சு. எந்த யோசனையும் இல்லை. காலையில் எப்படியாவது சாப்பாடு கிடைக்கும் என போர்வையை இழுத்து போர்த்தி படுத்தேன். ம்ஹும். நாள் முழுவதும் நடந்ததால் கால் வலி பின்னியெடுத்தது. பசியும். இரவு பத்தரை மணி. வாசலில் காத்திருந்தேன் யாரிடமாவது கேட்டுவிட வேண்டும்.

11 மணிக்கு லட்சுமணன் அண்ணன் வந்தார். (நெல்லைக்காரர். அங்காடித்தெருவில் இருவரும் ஒன்றாக வேலை பார்த்திருந்தோம்.) சட்டை மாற்றிக்கொண்டிருந்தவரிடம் 'அண்ணே'.. 'என்னல' என்றார்.
'பசிக்குது' என்றேன் கண்ணீர் முட்ட குனிந்துகொண்டே.
பசியை விட பசி உண்டாக்கும் இயலாமையும் அவமானமும் இருக்கே, அது சொல்லில் அடங்காது. கையைப் பிடித்து தரதரவென இழுத்துபோய் ஹோட்டலில் விட்டார். சாப்பிட்டு முடிக்கும்வரை கூடவே இருந்துவிட்டு ஹோட்டல் ஓனரிடம் 'இவன் என் தம்பிதான். எப்ப வேணாலும் வருவான். என்ன வேணாலும் குடுங்க. என் கணக்குல எழுதிக்குங்க'னு சொல்லிவிட்டு அழைத்து வந்தார். அந்த இரவு எவ்வளவோ உணர்த்தியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நெல்லையில் அண்ணனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பார்த்ததும் கட்டிப்பிடித்துக்கொண்டார். கூட இருந்த வைரத்திடம் (Vairam Sivakasi) அறிமுகப்படுத்தி வைத்தேன். எங்களை வழியனுப்பும் வடை சிரித்துக்கொண்டே இருந்தார் மனுஷன்.

அந்தப் பட்டினி மறுநாளும் தொடர்ந்திருந்தால் ஒன்று தற்காலிகமாக பிச்சையெடுத்திருப்பேன் அல்லது திருடியிருப்பேன். இல்லை சென்னையை விட்டே ஓடியிருப்பேன். :-)

((படத்தில் பச்சை நிற சட்டையில் இருப்பவர் லட்சுமணன், நீல சட்டையில் இருப்பவர் இதை எழுதிய முத்துராம்))

Thanks - பிரபல எழுத்தாளர் முத்துராம்

மரபுகளை உடைத்த சந்துரு...

நீதிபதிகள் நீதிமன்றத்துக்குள் வரும்போதும் போகும்போதும் அவர்களுக்கு முன், வெள்ளைச் சீருடை அணிந்த ஊழியர்கள், செங்கோலை ஏந்தி யபடி 'உஷ்’ என்று சப்தம் எழுப்பிக்கொண்டு செல் வார்கள். இது, நீதிமன்ற நடைமுறை. நீதிபதி சந்துரு பொறுப்பேற்றதும் செய்த முதல்வேலை, 'எனக்கு செங்கோல் ஏந்திய ஊழியர்கள் தேவைஇல்லை’ என்று எழுதிக் கொடுத்ததுதான். இதுபற்றிய கேள்வி எழுந்தபோது, 'இந்த நடைமுறை நீதிபதிகளின் டாம்பீகத்துக்காக மனித ஆற்றலை வீணடிக்கும் செயல். செங்கோல் ஏந்திச் செல்லும் வேலையை மட்டும் இந்த டவாலிகளுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மக்கள் பணத்தில் ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதனால், மக்களுடைய வரிப் பணமும் அந்த டவாலிகளின் மனித ஆற்றலும் வீணடிக்கப்படுகிறது’ என்று விளக்கம் அளித்தார்.

தனக்கும் தனது வீட்டுக்கும் அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பையும் ஏற்க மறுத்த நீதிபதி சந்துரு, 'நீங்கள் இதுபோல் 60 நீதிபதிகளின் வீடுகளுக்கு 300 காவலர்களை நியமித்துள்ளீர்கள். இவர்களுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. இந்த 300 காவலர்களையும் நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், ஒட்டுமொத்த தென்சென்னையின் பாதுகாப்பையே சரிசெய்து விடலாம்’ என்று காவல் துறைக்கு ஆலோசனையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் நீதிபதிகளுக்குப் பிரிவு உபசார விழா நடத்துவது வழக்கம். இந்த விழாவில், ஓய்வுபெறும் நீதிபதியை அனைவரும் வாழ்த்திய பிறகு, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் விருந்து நடைபெறும். இந்த விழாவும் தனக்கு வேண்டாம் என்று மறுத்து, உயர் நீதிமன்றத் தற்காலிகத் தலைமை நீதிபதிக்கு நீதிபதி சந்துரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், 'என்னுடைய கடமையைத்தான் நான் செய்தேன். அதற்கு விழா தேவைஇல்லை. மக்களுடைய பணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்தில் விரயம் ஆக்குவது தவறு’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மரபுகளை உடைத்த சந்துரு... 

சங்கடங்கள் தீர்க்கும் சனி பிரதோஷ விரத கதை

வளர்பிறையில் ஒரு பிரதோஷம், தேய்பிறையில் ஒரு பிரதோஷம் என மாதத்திற்கு இருமுறை பிரதோஷ காலம் வருகிறது. பிரதோஷ காலம் என்பது சரியாக ஏழரை நாழிகை மட்டும்தான். திரியோதசி தினத்தன்று சூரியன் மறையும் மாலைப் பொழுதில், சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள ஏழரை நாழிகை காலம் தான் பிரதோஷ காலமாகும். 

மாதம் இருமுறை திரியோதசி நாளில் பிரதோஷம் வந்த போதிலும் சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது. முன் ஒரு காலத்தில் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அசுர குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடுமையான போர் மூண்டது. இந்த போரில் இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். 

இதன் காரணமாக இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. இப்படியே போனால், போர் முடிவுறும்போது தேவலோகத்தில் தேவர்கள் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் இதனை நினைத்து கலக்கம் கொண்டனர். பின்னர் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டி தேவர்கள் அனைவரும் இந்திரதேவன் தலைமையில் பிரம்மதேவரை சந்தித்து, தங்கள் கலக்கம் குறித்து எடுத்துரைத்தனர். 

இதையடுத்து பிரம்மதேவரும், தேவர் களுடன் சேர்ந்து இறவா நிலையில் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்தார். நெடிய சிந்தனைக்கு பின் மகா விஷ்ணுவிடம் தான், தங்களின் கலக்கத்திற்கு தகுந்த விடை கிடைக்கும் என்று பிரம்மதேவர் ஆலோசனை வழங்கினார். 

இதையடுத்து தேவர்கள் அனைவரும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள விஷ்ணு பகவானை சந்தித்து தங்களின் கலக்கத்தை தெரிவித்து, இறவா நிலையை அடைய வழி கூறும்படி வேண்டி நின்றனர். தன்னிடம் முறையிட்டு நின்ற தேவர்களை நோக்கிய விஷ்ணு, `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்' என்று உபாயம் கூறினார். 

இந்த வார்த்தையை கேட்டதும் தேவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. மாறாக, கவலையே மேம்பட்டது. பாற்கடலை கடைவதா? அது எப்படி முடியும் என்று கவலை கொள்ளத் தொடங்கினர். அதற்கான வழியையும் தாங்களே கூறும்படி மகாவிஷ்ணுவை பணிந்தனர். 

`மந்தாரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு, பாம்பின் தலைப் பகுதியில் அசுரர்களும், வால் பகுதியில் தேவர்களும் நின்று பாற்கடலை கடையும்போது அமிர்தம் கிடைக்கும்' என்று வழியையும் தெரிவித்தார் மகாவிஷ்ணு. பாற்கடலை கடைய அசுரர்கள் உதவி அவசியம் என்றால், அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு தர வேண்டும். 

அப்படி கொடுத்தால் அவர்களும் சாகா வரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் தேவர்களின் கலக்கம் நீடித்தது. தேவர்களின் கலக்கத்திற்கான காரணத்தை அறிந்துகொண்ட மகாவிஷ்ணு, `கவலை வேண்டாம். உரிய நேரத்தில் உதவுவோம்' என்று கூறியதை அடுத்து பாற்கடலை கடையும் பணி தொடங்கிற்று. 

இந்த பணி ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்தாரகிரி மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மந்தாரகிரி மலையை தாங்கிப்பிடித்தார். பின்னர் மீண்டும் பாற்கடலை கடைவது தொடர்ந்தது. 

இதற்கிடையில் தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் மாறி, மாறி இழுத்ததன் காரணமாக வாசுகி பாம்பின் உடல் புண்ணாகி விட்டது. இதனால் ஏற்பட்ட வலியை பொறுக்க முடியாத ஆயிரம் தலைகளை கொண்ட வாசுகி, தனது ஆயிரம் வாய்களில் இருந்தும் விஷத்தை கக்கியது. அதே நேரத்தில் பாற்கடலை கடைந்ததன் காரணமாக கடலில் இருந்தும் விஷம் பொங்கி வெளியேறியது. 

இவ்வாறு பாம்பினால் கக்கப்பட்ட `காளம்' என்ற நீல விஷமும், கடலில் இருந்து பொங்கிய `ஆலம்' என்ற கருப்பு விஷமும் சேர்ந்து கடுமையான வெப்பத்தையும், கடும் புயலையும் ஏற்படுத்தியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் அச்சத்தில் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினர். பின்னர் தேவர்கள் அனைவரும் கயிலைக்கு விரைந்தனர். 

அங்கு கயிலை வாயிலில் காவலுக்கு நின்ற நந்தி தேவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே சென்று ஆபத்து காலங்களில் எல்லாம் உலகை காத்து அருள்புரியும் சிவபெருமானிடம், அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகருமான அணுக்கத் தொண்டர் சுந்தரரை அழைத்து, `அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!' என்று உத்தரவிட்டார். 

சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக மாற்றி கொண்டு வந்தார். உலகையே அச்சுறுத்திய கொடிய விஷத்தை ஒரு துளியாக மாற்றி, சுந்தரர் கொண்டு வந்ததை பார்த்து தேவர்கள் அனைவரும் அதிசயித்து நின்றனர். அந்த விஷத்தை வாங்கிய ஈசன், அதனை அருந்தினார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பார்வதிதேவி பதற்றம் கொண்டாள். 

`கடும் விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே' என்று கருதிய பார்வதி, சிவபெருமான் உண்ட விஷத்தை அவர் கழுத்திலேயே நிற்கும்படி தனது கரங்களால் கழுத்தை இறுக்கமாக பிடித்தார். இதனால் விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி அந்த பகுதி நீல நிறமாக மாறியது. `கண்டத்தில்' விஷத்தை நிறுத்தியதால் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார். 

விஷம் கொண்டுவந்த சுந்தரர், `ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் விஷத்தை சாப்பிட்ட தினம் கார்த்திகை மாதம் ஏகாதசி தினமாகும். அபாயம் நீங்கியதும் அன்று மாலை பொழுதில், தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய தொடங்கினர். மறுநாள் துவாதசி திதியன்று பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது. 

மகாவிஷ்ணுவின் தந்திரத்தால் அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. அதன் மூலமாக அவர்கள் இறவா நிலையை அடைந்தனர். ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியின் காரணமாக, அதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து கடும் விஷத்தை உட்கொண்ட சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர். 

தேவர் களின் இந்த தவறை அவர்கள் உணரும்படி பிரம்மதேவர் எடுத்துரைத்தார். குற்ற உணர்ச்சியால் வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலையை அடைந்து, கயிலைநாதனை தரிசித்து தங்களை மன்னித்து அருள வேண்டினர். 

இதனால் உளம் கனிந்து மகிழ்ச்சி அடைந்த ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அவர் புரிந்த நடனத்திற்கு `சந்தியா நிருத்தம்' என்று பெயர். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், மேலும் எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர். 

ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஆகும். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது..

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது

*4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்

*தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்
 — 

நடைப் பயிற்சியின் பயன்கள்:

தினம் ஒரு தகவல்

தெரியாததை தெரிந்து கொள்வோம் 
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

தமிழில் சில செய்திகள் உங்களுக்காக :

நடைப் பயிற்சியின் பயன்கள்:

"நடையால் ஆரோக்கியமா?
ஆரோக்கியத்தால் நடையா!"
1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.
2) பிராணசக்தி அதிகரிப்பதால் இரத்தம் சுத்தம் பெறுகிறது. சுழற்சி வேகம் அதிகரிக்கிறது & அளவும் அதிகரிக்கிறது.
3) தேவையற்ற இரத்தக் கழிவுகள் வெளியேறுகிறது. வியர்வை மூலம் கொழுப்புக்கழிவுகள், உப்புகள் வெளியேற்றப்படுகிறது. உடல் துர்நாற்றம் குறைகிறது.
4) நுரையீரல், அதில் உள்ள சிற்றரை திசுக்கள், நல்ல நலம் பெறுகின்றன. சுவாசம் சீர்படுவதுடன் மேம்படுகிறது.
5) இதயத்தின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இதயத் திசுக்கள் வலிமை பெறுகின்றன.
6) பசியின்வேகம், பசித்தன்மை, தாகம் ஜீரணம் இவைகள் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்படுகிறது. தன் மயமாதல் சிறப்படைந்து எலும்பு, திசுக்களில் சேரும் சத்துக்கள் அதிகரிக்கின்றன.
7) எலும்புகள், தசைகளில் திசைவுகள் குறைந்து புதிய வலுவும், வனப்பும் பெறுகின்றன.
8) அதிக உடல் எடை, பருமன், சதைக் கோளங்கள் இலகுவாக, இயல்பாக, ஆபத்தில்லாமல், இணக்கமாக, எளிமையாக குறைய நடைப் பயிற்சியில் மாத்திரமே சாத்தியம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
9) அதிக தேவையில்லாத கொழுப்பை குறிப்பாக எல்.டி.எல் லிஞிலி கொலஸ்ராலை குறைத்து சீர்படுத்தி ஹச்.டி.எல். பிஞிலிஐ அதிகரித்து இதயத் திசுக்களுக்கு ஓய்வுதர துணைபுரிகிறது. நமது இரத்தத்தில் எல்.டி.எல் அளவு 100 மி.கி. மேல் இருக்கக் கூடாது.
10) நமது முதுமை, திசு அழிவு குறைந்து புதிய செல்கள் உருவாகி இளமை மேம்படுகிறது.
11) தொப்பை, தொங்கு சதை, பிதுங்கு சதைகள், இடுப்புச் சதைகள் மெதுவாக குறைய ஆரம்பிக்னிற்ன. உடல் கட்டழகு அடைகிறது.
12) நீரழிவு அன்பர்களுக்கு நடைபயிற்சிதான் ஒப்பற்ற மருந்து எனலாம். எந்த அளவு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளதோ அதற்கேற்ற தூரம் தினமும் நடந்திட வேண்டும்.
13) பொதுவாக அனைத்துப் பிணிகளும் நடைப்பயிற்சியால் மட்டுப்படுவதுடன் கட்டுப்படுகிறது. மருந்து மாத்திரைகளின் தேவைகளை உடனடியாகக் குறைக்கிறது.
14) நமது மெட்டாபாலிசம் அளவு சிறப்புற்று உடலில் வெப்பசக்தி (கலோரி) உற்பத்தி, பயன்பாடு மிகவும் அதிசயதக்க அளவில் கூடுகிறது.
15) கால்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கால்வலி, பாதவலி குறைந்து நரம்பு முறுக்கு, இரத்த அழுத்த தடைநீங்கி புதுசக்தியைப் பெறுகிறது.
16) தினமும் காலையில் நீர் குடித்து பின் சிறிது தூரம் நடந்தாலே எப்படிப்பட்ட கடின மலச்சிக்கலும் விலிகிவிடும். மூலநோயும் குறைய ஆரம்பிகிறது.
17) சுவாச அடைப்பை சரிசெய்கிறது. சைனஸ், ஒற்றை தலைவலி, சரியாகி நுரையீரலில் காற்று சென்று வரும் அளவை பல மடங்கு பெருக்குகிறது.
18) நடக்கும்போது பசியின்மை விலகுகிறது. உணவின் ருசி மிகுந்திடும்.
19) இரத்த அழுத்தம், மாரடைப்பு அன்பர்களும் சுகம் அடைகின்றனர்.
20) மனச்சுமை, மனஅழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றில் இருந்து இலகுவாக, இயல்பாக, இனியமைகா நிவாரணம் கிட்டுகிறது.
21) மனதில் ஒரு இணக்கம், இயல்புநிலை, ஆனந்தம், உற்சாகம், உத்வேகம் பீறிட்டு வரும் அற்புத சுகத்தை அறிந்திட, அனுபவிக்க நீங்களும் நடங்கள் & பிறருடன் சேர்ந்து நடங்கள். தினமும் நடங்கள். விரும்பி நடங்கள். மகிழ்ச்சியாக நடங்கள்.
ஆதாரம் தேவையா?
ஆதாரம் இருக்கா என எகத்தாளம் இடுவோர் பலர். நம்மில் பலர் சந்தேகப் பார்வை. சிந்தனையுடன் நடைப் பயிற்சியைத் தொடங்குவர். உடனடியாக நோய்கள் நீங்குமா என கேட்டவண்ணம் இருப்பார்கள். ஆர்வத்தில் ஆரம்ப நிலையில் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சியை மேற்கொண்டாலும் நம்மில் பலர் தொடர்ந்து நடைபயணம், பயிற்சியை மேற்கொள்வதில்லை. எதையும் விரும்பினால் உறுதியாக நம்மால் முடியும். எதையும் வருந்திச் செய்தால் வலியிலே முடியும். பாதியில் நிற்கும். நடப்பது நல்லது. அதையும் தொடர்ந்து செய்ய வேண்டும். செய்ய இயலும். அதையும் பயிற்சியாக, பயணமாக இல்லாமல் வாழ்வின் தினசரி, அங்கமாக, இயன்றபோது இயல்பாக, விரும்பி, இணக்கமாக நடக்க, நடந்திட உதவிட இந்நூலில் பல உத்திகள் ஆங்காங்கே தரப்படுகின்றன & விரைவில் நமது பழக்கமாகி நல்ல நலம் பெறுவோம். பிறருக்கும் வழிகாட்டி வாழ்வில் வளம் பெறுவோம். சந்தேகத்துடன் ஆதாரம் தேடும் முன் நடந்து நீங்களே ஆதாரமாகி விடுங்கள்.

Friday, February 22, 2013

புத்தர் வாழ்க்கையின் அனுபவம்

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.

“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.

“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.

உலக தாய் மொழி தினம்..!

தமிழ்மொழி:

எமது தாய் மொழி தமிழ். தமிழ் என்பதன் பொருள் இனிமை. உலகில் காலத்தால் மூத்த மொழிகள் பல உள்ளன. அவற்றுள் தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன் முதலியன சிலவாகும்.

சமஸ்கிருதமும், இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் மொழி பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்து வருகின்றது. தமிழ் மொழி தான் பிறந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இளமையும் எழிலும் குன்றாமல் இருந்து வருகின்றது.
தமிழ் மொழி ஆரம்பத்தில் இந்திய துணை கண்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களிடையே வழங்கி வந்தது. தமிழ் மொழியை பேசிய இனத்தோர் தமிழர் எனப்பட்டனர். தமிழ் மொழி வழங்கிய தேசம் தமிழகம், தமிழ் நாடு, திராவிடம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டது.

தமிழ் நாட்டை பண்டைய நாளில் சேர சோழ பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சி புரிந்தனர். இவர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதில் அரும்பாடுபட்டனர். தமிழ் மொழியை கற்று உணர்ந்த புலவர்களை பொன்னும் பொருளும் தந்து வாழ்த்தினர்.

தமிழ் நாட்டில் அன்று பிறந்து வளர்ந்த தமிழ் இன்று மலேசியா, சிங்கபூர், இலங்கை, தென்னாபிரிக்கா,.. போன்ற பல நாடுகளில் வழங்கி வருகின்றது. தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் விரிவடைந்து விட்டது.
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது. இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழ் இசையுடன் இணைந்தது. நாடக தமிழ் கதை, கூத்து என்பன கலந்து வருவது.

பண்டைத்தமிழ் மன்னர்கள் மூன்று சங்கங்களை அமைப்பித்தனர். அவை, முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பனவாகும். இதன் மூலம் பல தமிழ் நூல்களை இயற்றினார்கள். இலங்கை நாட்டவரான ஈழத்துப்பூதன் தேவனார் கடைச்சங்க புலவருள் ஒருவர் ஆவர். அவர் நக்கீரர், கபிலர், பரணர் போன்று அறிய பாடல்களை எழுதிஉள்ளார்.

தமிழ் நூல் பரப்பு மிகவும் பறந்து பட்டது. "திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம்" என்பன அவற்றுள் சிலவாகும். பாரதியார்

"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் எங்காயினும் கண்டதில்லை"

என அறுதியிட்டு கூறியுள்ளார்.

மிக பிற்காலத்திலே நாவலர் பெருமான், பாரதியார் போன்ற சான்றோர் பலர் தோன்றி தமிழ் மொழிக்கு பெரும் தொண்டாட்டினர்.

"நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே?"

என்று சொல்லும் அளவிற்கு நாவலரின் தொண்டு அமைந்திருந்தது.
பாரதியார் புதுமை புரட்சிக்கு வழிவகுத்தார்.

இன்று பல்கலைகழகங்களும், ஆதீனங்களும், தமிழ் மன்றங்களும் தமிழ் மொழியை பேணுவதில் ஈடுபட்டு வருகின்றன.

எளிமை, இனிமை, தொன்மை படைத்த தமிழ் மொழியை சான்றோர் தமிழ் தாய் என்றும் தமிழ் தெய்வம் என்றும் போற்றுவர். எங்கள் தமிழ் தாய் தமிழ் பேசும் பல கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றாள் என்று கூறினால் அது மிகையாகாது.

****வாழ்க தமிழ் அன்னை****

நன்றி: எழுத்து வலைத்தளம்

பெற்ற மகள் சாட்சியாக ‘அப்பா அம்மா’ காதல் ஜோடிக்கு கல்யாணம் : சோழவந்தானில் சுவாரஸ்யம்

இரண்டு வயது குழந்தை முன்னிலையில் காதல் ஜோடி கல்யாணம் செய்துகொண்ட சுவாரஸ்ய சம்பவம் சோழவந்தானில் நடந்தது. குடும்ப உறவுகளால் பிரிக்கப்பட்ட காதல் 3 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு, சட்ட பணிகள் ஆணையத்தின் உதவியுடன் திருமணமாக கைகூடியுள்ளது. மதுரை கூடல்புதூரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (23). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி வைதேகியும் (21) கடந்த 2010ம் ஆண்டு ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இரு குடும்பமும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ளலாமா என்று ஆலோசித்துள்ளனர். வைதேகி அப்போது மைனர் என்பதால் சட்ட சிக்கல் ஏற்படலாம் என்று பயந்தனர்.

தங்களுக்கு குழந்தை பிறந்து விட்டால், பெற்றோர் கட்டாயம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என திட்டமிட்டனர். வைதேகி கர்ப்பமானார். இது வைதேகியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூடல்புதூர் போலீசில் புகார் செய்தனர். ராஜேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வைதேகி மைனர் என்பதால் பெற்றோருடன் அவரை அனுப்பி வைத்தனர். கர்ப்பத்தை கலைக்குமாறு பெற்றோர் கூறியும் வைதேகி மறுத்து விட்டார். பின்னர், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ‘ஜான்சிராணி’ என்று பெயர் வைத்தார். இதற்கிடையே, கடந்த மாதம் மதுரையில் சட்ட பணிகள் ஆணையக்குழு கூட்டம் நடந்தது. இங்கு வந்த வைதேகி, ஆணைய நீதிபதி ஜெசிந்தா மார்ட்டினை சந்தித்து, தன் பிரச்னையை எடுத்து கூறினார். 2 வயது குழந்தை ஜான்சிராணியுடன் பரிதவிக்கும் தன்னையும், காதலன் ராஜேசையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இருவரையும் சேர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தை கண்காணிக்க வக்கீல் பாக்கியலட்சுமியை நியமித்தார். மதுரை புறநகர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் உதவியுடன், இந்த குழுவினர் இரு குடும்பத்தினரையும் வரவழைத்து பேசினர். இதில், உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வக்கீல் பாக்கியலட்சுமி முன்னிலையில், வைதேகி ராஜேஷ் கண்ணனுக்கு சோழவந்தானில் நேற்று காலை திருமணம் நடந்து முடிந்தது. திருமண மேடையில் 2 வயது குழந்தை ஜான்சிராணி அருகே இருந்து மழலைச் சிரிப்பால் ‘வாழ்த்த’ இரு வீட்டார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அட்சதை போட.. வைதேகி கழுத்தில் தாலி கட்டினார் ராஜேஷ் கண்ணன். பெற்ற மகள் முன்னிலையில், காதல் ஜோடி கல்யாணம் செய்துகொண்ட சம்பவம் சோழவந்தானில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

இன்று உலகையே கலக்கி கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தை முதன் முதலில் தொடங்கியவர் இறக்கும் தருவாயில் கூறிய‌ கடைசி வார்த்தைகள்.

இது தான் உன் கடைசி தினம் என்பது போல் தினமும் நீ வாழ்ந்தால்,வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரலாம்.சிறு வயதில் நான் படித்த‌ இந்த‌ வாக்கியம் என் மனதில் ஆழ‌ பதிந்து விட்டது.நீங்கள் இறப்பது முன்னாலேயே தெரிந்து விடும்போது இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை என்பது புரிந்து விடுகிறது.நிர்வாணமாக‌ இருப்பதை போல் உணர்கிரோம்.

உங்கள் வாழ்க்கை மிகச்சிறியது உங்களுக்காகவே அதை வாழுங்கள்.துருபிடித்த‌ சித்தாந்தங்களுக்காக‌ வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.அடுத்தவர்களின் கருத்துச்சத்தங்கள் உங்கள்
உள்ளுணர்வின் சத்தத்தை நீர்த்துபோக‌ செய்ய‌ அனுமதிக்காதிர்கள்.முட்டாள்தனத்திலிருந்துதான் புத்திசாலித்தனம் பிறக்கிறது.அதனால் எப்போதும் பசியோடு இருங்கள்.எப்போதும்

முட்டாளாக‌ இருங்கள்.உங்கள் இதயமும் உள்ளுணர்வும் உங்களை வழி நடத்தட்டும்.

நன்றி குமுதம்

விவேகானந்தர்

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பார்த்ததும்
திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்
மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..