Tuesday, October 16, 2012

‘மேங்கோ பைட்’ உஷார்!




‘மேங்கோ பைட்’ எனும் பெயரில் வரும் பார்லே நிறுவனத்தின் மிட்டாயை, திரும்பப் பெற வேண்டுமென்று மகாராஷ்டிர மாநில உணவு, மருந்து பாதுகாப்பு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள அதன் தயாரிப்பு நிலையங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மேங்கோ பைட் மிட்டாயில் அளவுக்கு அதிகமாக லாக்டிக் அமிலம் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 'இது உண்ண
ுவதற்கு உகந்ததல்ல' என்பதை அடுத்தே... இப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 'மேங்கோ பைட்' மிட்டாய்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment