தமிழால் இணைவோம்
Sunday, October 12, 2014
சாளக்கிராமம் உருவான கதை: -
ke
சாளக்கிராமம் உருவான கதை: -
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடையவேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கூட அவள் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார்.
என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்ததாலும் கல்லாகப் போவாயாக என்று சாபமிட்டாள். அந்த கல்தான் சாளக்கிராம கல், உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி புன்ன
கை புரிந்தார் மஹாவிஷ்ணு அஞ்சாதே துளசி எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது க்ருஷ்ணஅவதாரத்தீன் போது கோபிகையாகக் இருந்ததவள் நீ என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.
என்னை கல்லாக மாறும்மாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான்,என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது, இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய் என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால் நான் சாளக்கிராமக் கற்களாக மாறபோகிறேன், நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன். அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாக்கும். சாளக்கிராமகாக நானே இருப்பதால் பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள் நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள், கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய் உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன், இங்கே வரமுடியாதவர்கள்துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும் துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன் என்றார்.
யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறரர்களோ அந்த வீட்டில் வைக்கப்பட்டுஇருக்கும் சிறு இடத்தையே தன் கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன் அந்த சாலகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன் அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது சாலகிரமம் இருக்கும் விடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோசம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன் என்று மஹாவிஷ்ணு கூறினார்
சாலகிராமம் எப்படி உருவாகின்றன : -
மகாவிஷ்ணு தங்கமயமான ஒளிஉடன் திகழும் வஜ்ர கிரீடம் என்னும் பூச்சியின் வடிவம்கொண்டு சாலகிரமகல்லை குடைந்து அதன் மையதயை அடைந்து அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும் தனது அவதரரூபங்களையும் பலவிதமகா விளையாட்டாக வரைகிறார் இவைதான் சாளகிராமமூர்த்திகள்.
எதுவும் வரையபடாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும் அதற்கு ஹிரண்ய கற்ப கற்கள் என்று பெயர் இவையும் பூஜைக்கு உகந்தது. இந்த சாளகிராமம் சங்கு, நத்தைகூடு, பளிங்குபோன்று பலவித வடிவங்களில், கிடைக்கிறன
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment