வாந்தியை கட்டுப்படுத்தும் இலவங்கம்
இலவங்கத்தை நீர்விட்டு மைய அரைத்து நெற்றி மீதும் மூக்குத் தண்டு மீதும் பற்றாகப் போட்டு வைக்க தலை பாரம், தலையில் நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன குணமாகும்.
* இலவங்கத்தை லேசாக வதக்கி வாயிலிட்டுச் சுவைப்பதால் தொண்டைப் புண் ஆறும். ஈறுகள் கெட்டிப்பட்டு பற்கள் உறுதி பெறும்.
* 100 மி.லி. வெந்நீரில் 8 முதல் 10 கிராம் இலவங்கத்தை தூள் செய்து போட்டு அரை மணிநேரம் மூடி வைத்திருந்து பின்னர் வடிகட்டி வேளைக்கு 4ல் ஒரு பங்கு அளவு உள்ளுக்கு கொடுப்பதால் பசியைத் தூண்டும், கழிச்சலை (பேதி)ப் போக்கும். அத்தோடு கர்ப்பிணிப்பெண்களின் வாந்தி நிற்கும்.
* இலவங்கமும் நிலவேம்பும் சமன் எடுத்து தூளாக்கி தீநீர் தயாரித்துக் கொடுக்க பசி உண்டாகும். அயர்ச்சி (சோர்வு) நீங்கும், கடுஞ்சுரத்துக்குப்பின் வந்த களைப்பும் போகும்.
* இலவங்க எண்ணெய் 2 அல்லது 3 துளி எடுத்துக் கொண்டு அத்துடன் போதிய சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு சாப்பிட மயக்கம், பேதி, வாந்தி, செவிநோய், சிவந்த மச்சம், கறுத்த மச்சம் ஆகியன போகும்.
* பல்சொத்தை கண்ட போது பஞ்சில் சிறு அளவு இலவங்க எண்ணெய் தேய்த்து மேலே சிறிது நேரம் வைத்திருக்க பல்வலி உடனே குணமாவதுடன் சொத்தையும் நாளடைவில் குணமாகும். பற்களின் இடையே வசிக்கும் புழுக்கள் வெளியேறும்.
* இலவங்கத்தை விளக்கில் கொளுத்தி அதனின்று வருகிற புகையை வாயினுள் கொள்வதால் தொண்டைக் கம்மல், தொண்டைப் புண் முதலியன குணமாகும்.
* சிறிது சமையல் உப்புடன் இலவங்கம் சேர்த்து மென்று சுவைத்து விழுங்க தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு நீங்கும்.
* சிறிது கிராம்பு தூளோடு தேன் சேர்த்து சாப்பிட வாந்தி உடனே கட்டுப்படும்.
* 4 கிராம் கிராம்பை 3லி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட செய்து வடிகட்டி வைத்துக் கொண்டு மூன்று வேளை பருக காலரா என்னும் வாந்தி பேதி குணமாகும்.
* கிராம்பு எண்ணெய் 3 துளியோடு தேனும், பூண்டுச் சாறும் சேர்த்து உள்ளுக்கு சாப்பிட ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு, சுவாச நாள சுழற்றி குணமாகும்.
* இலவங்கத்தை மருந்தாகப் பயன்படுத்துகையில் 3 முதல் 5 கிராம் வரை வெந்நீரோடு எடுத்துக் கொள்ளலாம்.
* பல நல்ல குணங்களை இலவங்கம் பெற்றுள்ள போதும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட போதும் ரத்தம் உறையும் தன்மை குறைவாக இருக்கும் போதும் இலவங்கத்தை தவிர்ப்பது நல்லது.

No comments:
Post a Comment