இப்படியும் ஒரு தலைவன் இருந்தான்...
கப்டன். தாமஸ் சங்கரா
ஆபிரிக்காவின் சே குவாரா
(டிசம்பர் 21 , 1949 - அக்டோபர் 15 , 1987)
ஆபிரிக்காவின் சே குவாரா
(டிசம்பர் 21 , 1949 - அக்டோபர் 15 , 1987)
ஆகஸ்ட் 4 , 1983 ஒரு இராணுவ புரட்சியின் மூலம் தனது 33 வது வயதில் மேற்கு ஆப்ரிக்க நாடான அப்பர் வோல்டாவின் ஆட்சியை கைபற்றினார்.
பதவிக்காக, எதிர்காலத்தில் தேசத்தை காட்டிக்கொடுக்கபோகும் தன நண்பர்களினாலேயே சுட்டுகொல்லபடும் வரை (அக்டோபர் 15 , 1987 ) 4 ஆண்டுகள் 2 மாதம் 12 நாட்கள் ஆட்சிபொறுப்பில் இருந்தார்.
இந்த குறுகிய காலத்தில் அவர் செய்தவை
##################################
##################################
* அப்பர் வோல்டா என்று அழைக்க பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரெஞ்சு காலனியான தங்கள் தேசத்துக்கு புர்கினபாசோ என்று பெயர் மாற்றினார் - பொருள்: தலை நிமிர்ந்து வாழ்பவர்களின் தேசம்.
* பெண் சிசுக்கொலை , பெண்களுக்கு கட்டாய திருமணம் மற்றும் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணம் புரிவதற்கு தடை விதித்தார்.
* உயர் அரச பதவிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் மெர்செடீஸ் வகை கார்களை விற்றுவிட்டு இருப்பதிலேயே விலை குறைந்த ரெனால்ட் 5 வகை கார்களை வழங்கினார்.
* தனது ஊதியம் உட்பட உயர் அரச பதவியில் இருக்கும் அனைவரது மாத ஊதியங்களும் குறைக்கபட்டன.
* எந்த அரசாங்க அமைச்சரோ அதிகாரியோ விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்யக்கூடாது. அரசாங்கத்தால் வழங்கப்படும் கார்களுக்கு வாகனவோட்டிகளை அரசு வழங்காது.
* பெரும் நிலக்கிழார்களின் அளவுக்கு அதிகமான நிலங்கள் அதில் வேலை செய்த விவசாய கூலிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 ஆண்டுகளில் ஹெக்டேருக்கு 1700 கிலோவாக இருந்த கோதுமை உற்பத்தி 3800 கிலோவாக உயர்ந்தது.
* அதுவரை பெற்றுவந்த எல்லா வெளிநாட்டு உதவிகளுக்கும் அனுமதி மறுக்கபட்டது. உனக்கு உணவிடுகிறவன் உன்னை கட்டுப்படுத்துகிறான் - எங்கள் மக்களுக்கு நீங்கள் உதவவும் வேண்டாம் எங்களை சுரண்டவும் வேண்டாம் என்பது அவரின் கொள்கை.
* உயர் பதவிகளில் உள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை மக்கள் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
* ஆபிரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கு குரல் கொடுத்தார். ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமித்திருந்த காலனிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
* ஆப்ரிக்க நாடுகளுக்கு காலனிய சக்திகள் வழங்கிய கடனை திருப்பிதரவேண்டியதில்லை என்றும். முறைப்படி அவர்கள் தான் சுரண்டப்படும் ஆப்ரிக்க நாடுகளுக்கு பணம் தரவேண்டும் என்றும் பரப்புரை மேற்கொண்டார்.
* தனது அலுவலகத்திலோ வீட்டிலோ காற்றுச்சீரமைப்பிகளை (Air conditioner) பயன் படுத்த மறுத்துவிட்டார்.
* அவர் சுட்டுக்கொல்லப்படும் போது அவரிடமிருந்த மொத்த சொத்து - ஒரு பழைய கார், 4 மோட்டார் சைகிள்கள், 3 கிட்டார், 1 குளிர் சாதனப்பெட்டி (Refrigirator)
* இவை அனைத்தையும் விட முக்கியம் எந்த அரசாங்க அலுவலகத்திலோ பொது இடங்களிலோ தன புகைப்படத்தை வைக்ககூடாது என உத்தரவிட்டிருந்தார் ....
இன்று புர்கினபாசொவில் சுமார் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் தங்க படிமங்கள் மற்றும் ஏராளமான துத்தநாக (Zinc ) படிமங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கபட்டு சுரங்கங்களை அமைத்துள்ளது பன்னாட்டு நிறுவனங்கள். ஆனால் சுமார் 55 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள் - கல்வி அறிவு 30 % க்கும் கீழ், 10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை தொடர்கிறது .
தாமஸ் சங்கராவை நய வஞ்சகமாக கொலை செய்த அவரது நண்பன் பிளைஸ் கம்பாவோயே 1987 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அதிபராக தொடர்ந்து நீடிக்கிறார்...
No comments:
Post a Comment