Thursday, October 16, 2014

மஹாபாரதம் என் பார்வையில் :


மஹாபாரதம் என் பார்வையில் :
விஜய் டிவி ( தமிழ் ), ஏசியாநெட்( மலையாளம்) , ஸ்டார் பிளஸ்
(ஹிந்தி), மற்றும் யு டியூப்இல் வரும் மகாபாரதம் ப்ரோக்ராமினை நான் எதாவது ஒரு டிவி இல் கதை தொடர்ச்சி விடாமல் பார்த்து வருகிறேன். அதற்கு சில நண்பர்கள் என்னை நாடகம் பார்கிறேன் என்று கிண்டல் செய்ததும் உண்டு. அதற்கு நான் சிரிப்பினை மட்டும் பதிலாக அளித்து திரும்பி வந்து இருக்கிறேன். காரணம் சில விஷயங்களில் பலர்,தனக்கு புரிந்தாலும் புரியாதது போல் ஒரு தடுப்பு சுவரினை உருவாக்கி கொண்டு நடிக்கிறார்கள் என்பதால்.
வரலாற்று பதிவுகளை அறிவதில் எனக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம். அதிலும் என் சொந்த நாடான இந்தியாவின், ஹரியானா - குருஷேத்ரத்தில் கி.மு.1500-க்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் இது. 18 நாள் + ஒரு இரவு நடந்த இந்த போரில், 3936600 படை வீரர்கள், அணைத்து குறுநில மன்னர்கள் என பாண்டவர்களில் 8, கவ்ரவர்களில் 4 பேரை தவிர அனைவரும் இறந்துள்ளனர்.
இந்த மஹா யுத்தத்திற்கான காரண கதையை புத்தகத்தில் படித்தாலும் கூட, நடந்ததை லைவ் இல் பார்ப்பதுபோல் இந்த ப்ரோக்ராம் அமைந்துள்ளது. இதை பார்க்கவேண்டாம் என்று தடுபவர்கள் அந்த சமையதில் என் கண்ணனுக்கு எதிரிகளாகவே தெரிங்கின்றனர்.
படைபலம் - ஒரு ஒப்பீடு:
கௌரவர்கள் - 11 அக்ஸௌஹிணி
பாண்டவர்கள் - 7 அக்ஸௌஹிணி
சே, இவ்வளவுதானா என்கிறீர்களா? ஒரு அக்ஸௌஹிணி என்பது என்ன தெரியுமா?
21870 தேர்கள் - இதில் ஒவ்வொரு தேருக்கும் ஒரு அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட குதிரை, தேரோட்டி மற்றும் ஒரு வீரர்
21870 யானைகள் - ஒரு யானைப்பாகன் மற்றும் ஒரு வீரர்
65610 குதிரைகள் - வீரர்கள்
109350 காலாட்படை (மனிதர்கள் - ஆண் )
இதை தவிர படை குழுத்தலைவர்கள், தளபதிகள், சேனாதிபதிகள், அரசர்கள், மந்திரிகள், ஆலோசகர்கள் என அதிகம் பேர் உள்ளனர்.
இதில் அனைவரும் இறந்தார்கள் என்றால், மீதம் நாட்டில் குறைந்த அளவு ஆண்கள், குழந்தைகளும், தாய்மார்கள்/ பெண்கள் மட்டுமே இருந்திருப்பார்கள். பாண்டவர்கள் வெற்றி அடைந்தாலும்
அப்படி என்ன ஆட்சி செய்திருக்க முடியும் ?
இயல்பு வாழ்க்கை திரும்ப எத்தனை வருடம் ஆகி இருக்க வேண்டும் ?
இவளவு பெரிய அழிவிக்கு என்ன காரணம் - சுயநலமா?
இல்லை பொது நலமா?
என பல கேள்விகள் எழுந்தாலும் அதர்மத்தை அளித்து தர்மத்தை நிலைநாட்ட, மனிதர்களை வைத்து கடவுள் நடத்திய விளையாட்டு என்றே நான் நினைக்கிறன்.
அதிகம் விவாதிக்க படுபவை :
1) காந்தாரி எப்படி100 பிள்ளைகளை ஈன்றாள் ?
2) பஞ்ச பாண்டவர்களின் பிறப்பு .
3) பாஞ்சாலி திருமணம்.
4) குருஷேத்ரத்தில் நடந்த போரினை அரண்மனையில் இருந்து பார்ப்பது.
1,2) இந்த காலத்தில் நாம் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்கிறோமே அதில் இரண்டு முறைகளை ( vitro fertilisation - IVF , Test tube baby )
கி.மு 1500 இல் இருந்த என் இந்திய முன்னோர் என்று அழைக்கப்படும் விஞ்ஞானிகள் அப்பொழுது சர்வ சாதரணமாக அன்றே செய்துள்ளனர் என்பதை நான் உங்களிடம் சொல்வதில் பெருமை படுகிறேன்.
http://www.medicalnewstoday.com/articles/262798.php
இந்த லின்கில் இதற்கான சில விளக்கங்கள் இருகின்றது புரியாதவர்களுக்கு இன்பாக்ஸ் இல் விளக்கம் கிடைக்கும்.)
3) பாஞ்சாலி திருமணம் இயல்பு வாழ்கையில் சாத்தியம் இல்லை என்று நினைபவர்களுக்கு ஒன்று கூறுகிறேன். இந்தியாவில் கூர்கா என்ற இனத்தவர் வாழும் பகுதி உண்டு. அந்த மக்கள் தன் இனத்தில் மட்டுமே திருமணம் செய்வார்கள். ஆனால் அங்கு பெண் விகிதாசாரம் குறைவு என்பதால். சகோதரர்கள் அனைவரும் ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்வர். அந்த பெண் ஒரு வருடம் ஒரு ஆணுடனும் அடுத்த வருடம் அடுதானுடனும் வாழ்வால் இடையில் குழந்தை கிடைக்குமேயானால், குழந்தை பிறகும் வரை அவருடனே இருப்பாள் என்பது இன்றும் நடந்துதான் வருகிறது.
4) தற்பொழுது வெறும் 12% மூளையை மட்டுமே பயன்படுத்தும் மனிதனால் skype, viber, whatsup, wechat, facebook போன்றவற்றின் உதவியுடன் உலகில் எந்த இடத்திலும் நடப்பதை வீடியோ கான்பிரன்ஸ் செய்ய முடிகிறது என்றால்,
ஒருவேளை என் முன்னோர்கள் 100% -ல் ஒரு 50 % மூளையை பயன்படுத்தி இருந்தாலும் இந்த செயல் சாதாரன விஷயம் என்றே நான் நம்புகிறேன்.
( தற்பொழுது நாம் பார்த்து ரசித்த ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த இந்திரன் என்ற படத்தில் கூட ஒரு சில விர்ச்சுவல் டிஸ்ப்ளே என்ற காட்சிகள் உண்டு.
இந்த விர்ச்சுவல் டிஸ்ப்ளே யினை தான் அப்பொழுதைய மக்கள் நியான கண் என்றுள்ளனர் )
மேலும்,
இந்த குருஷேத்திர மஹா யுத்தம் நடந்த இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியில் சில அதிசயிக்கும் அளவில் மனித எலும்பு கூடுகளும், கல்வெட்டுகள், அரண்மனை அடையாளங்கள் இன்னமும் உண்டு என்பது கூகுல் முலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம் நண்பர்களே. அதில் ஒரு சில படங்களையே நான் இந்த பதிவில் இணைத்துள்ளேன்
குருஷேத்ரம் பற்றி படித்து தெரிந்துகொள்ள இந்த லின்கினை சொடுக்கவும் :
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
மகாபாரதம் விஜய் டிவி ப்ரோக்ராமிற்கு இந்த லின்கினை
சொடுக்கவும் :
http://www.youtube.com/watch?v=92ldmM3XDpY&list=PL1VQxma9iCy0AyCqu2QZTeDtqTPCNnjHH

No comments:

Post a Comment