Monday, October 27, 2014

அழகான வாழ்க்கை !

இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ...
கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன்
மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ...
மலர்ந்த
முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும்
மனைவியிடம் ....
" நீ சாப்பிடவில்லையா ?" என்று கணவன் கேட்க ....
" எனக்கு பசியாக இருந்தது . அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன்
" என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன்....
என்ன செய்வான் ?
சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும்
கணவனிடம்" இப்போதானே வந்தீங்க.
திரும்பவும் எங்க போறீங்க ? "
என்று கேட்டவளுக்கு ...
" ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன்"
என்று கூறிவிட்டு ...
சற்று தூரம் அலைந்து நல்ல ஹோட்டலில் ருசியான
உணவு வாங்கி வந்து ...
" இந்தா சாப்பிடு... "
என்று சொல்லும்போது
அவள் கண்கள் லேசாக கசிய...
உண்ணுவாளே....
அதற்குப் பெயர்தான்
அழகான வாழ்க்கை !

குறைந்த கட்டணம் ரூ.8, அதிகபட்ச கட்டணம் ரூ.23 பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

குறைந்த கட்டணம் ரூ.8, அதிகபட்ச கட்டணம் ரூ.23 பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் சேவை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான பறக்கும் பாதையில் ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

அடுத்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி முறையாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. இதற்கான கட்டணம் தற்போது தற்காலிக அடிப்படையில் தயாரிக்கப்பட்டு பரிசீலித்து வருகிறோம். பின்னர் முறையாக அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அரசு ஆய்வு செய்து, மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதில் சில மாற்றங்களை செய்து முறையான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

மாதிரி கட்டணம் விவரம்

மாதிரி கட்டணம் விவரம்:- முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.8-ம், 2 முதல் 4 கிலோ மீட்டர் வரை ரூ.10-ம், 4 முதல் 6 கிலோ மீட்டர் வரை ரூ.11-ம், 6 முதல் 9 கிலோ மீட்டர் வரை ரூ.14-ம், 9 முதல் 12 கிலோ மீட்டர் வரை ரூ.15-ம், 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை ரூ.17-ம், 15 முதல் 18 கிலோ மீட்டர் வரை ரூ.18-ம், 18 முதல் 21 கிலோ மீட்டர் வரை ரூ.19-ம், 21 முதல் 24 கிலோ மீட்டர் வரை ரூ.20-ம், 27 கிலோ மீட்டருக்கு ரூ.23-ம் கட்டணமாக வசூலிக்க மாதிரி கட்டண விவரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண விவரம் டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் தமிழக அரசு இதனை முறையாக பரிசீலித்து விரைவில் அறிவிக்க உள்ளது.

சுரங்கம் தோண்டும் எந்திரம்

மெட்ரோ ரெயில் சேவையில் வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், மேதின பூங்கா முதல் சென்டிரல், மே தின பூங்கா முதல் ஏஜி-டி.எம்.எஸ், சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ், நேரு பூங்கா முதல் எழும்பூர், ஷெனாய் நகர் முதல் திருமங்கலம், பச்சையப்பன் கல்லூரி முதல் ஷெனாய் நகர் இடையே தலா இரண்டு மார்க்கத்திலும் 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் மிஷின்) வீதம் 14 எந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பச்சையப்பன் கல்லூரியிலிருந்து, நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் இடையே தலா ஒன்று வீதம் 2 எந்திரங்களும், கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா வரை உள்ள பகுதிகளில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதில் கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா மற்றும் மேதின பூங்கா முதல் சென்டிரல் வரை உள்ள பணிகள் தொடங்கப்படவில்லை. மீதம் உள்ள அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி 21 கிலோ மீட்டர் தூரம் அதாவது 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

முதல் எந்திரம் சாதனை

முதல் சுரங்கம்தோண்டும் எந்திரம் ஷெனாய் நகரிலிருந்து அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர் மற்றும் திருமங்கலம் ஆகிய 4 ரெயில் நிலையங்களின் இடையே உள்ள 2 ஆயிரத்து 797 மீட்டர் தூரத்தை கடந்து வெற்றிகரமாக திருமங்கலம் ரெயில்நிலையத்தை அடுத்துள்ள வளைவு வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இமயமலையைவிட வயதில் மூத்த மேற்கு தொடர்ச்சி மலை அழியும் அபாயம் - கட்டுரை

இமயமலையைவிட வயதில் மூத்த மேற்கு தொடர்ச்சி மலை அழியும் அபாயம் - கட்டுரை

News

மேற்குத் தொடர்ச்சி மலை | கோப்புப் படம்: கே.கே.முஸ்தஃபா

மேற்குத் தொடர்ச்சி மலை | கோப்புப் படம்: கே.கே.முஸ்தஃபா
இயற்கையைப் பேணுவதில் வனம், தாவர உயிரினங்கள் மற்றும் விலங்கினங்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செலுத்துகின்றன. ஆனால், மனிதர்கள் மட்டும் தங்களது பேராசையால்- வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கையை வரன்முறையின்றி அழிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர்வு, வற்றாத ஜீவநதிகளும் பாலைவனமாயின, சுனாமி, புவிவெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என பல்வேறு பிரச்சினைகள் தீவிரமடைந்து, எதிர்காலத்தை நினைத்து மனிதர்களை அச்சமடையச் செய்துள்ளன. இதற்கு உதாரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையைக் கூறலாம்.
யுனெஸ்கோ அறிவிப்பு
இமயமலையைவிட வயதில் மூத்தது மேற்கு தொடர்ச்சி மலை. உலகில் அனைத்து வன உயிரினங்கள், வன வளங்கள் மிகுந்த 32 இடங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் முக்கிய 50 அணைக்கட்டுகள், 126 முக்கிய ஆறுகள், 29 நீர்வீழ்ச்சிகள், கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி, மூணாறு உள்ளிட்ட சர்வதேச கோடைவாசஸ்தலங்கள், பழநி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்கள், ஆண்டு முழுவதும் மும்மாரி மழைப்பொழிவைக் கொடுக்கும் முள்புதர் காடுகள், புல்வெளிப் பிரதேசம், சோலைக்காடுகள், பசுமைமாறா காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னையின் அனைத்து அதிசயங்களையும் பெற்று மனிதர்கள், வன உயிரினங்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையை, 2012-ம் ஆண்டு உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஆனால் மனிதர்களின் ஆடம்பர, மேலைநாட்டு கலாச்சார மோகத்தால் உலக பாரம்பரியமிக்க இந்த மேற்கு தொடர்ச்சி மலை மெல்ல மெல்ல அழிந்து பாரம்பரியத்தை இழந்துவருகிறது.
இடது: டி.வெங்கடேஷ் | வலது: மேற்கு தொடர்ச்சி மலை
தென்னிந்தியாவின் பாதுகாப்பு அரண்
இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் `தி இந்து'விடம் கூறியது: குஜராத் மாநிலத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம் வழியாக தமிழகத்தில் கன்னியாகுமரி வரை 6 மாநிலங்களில் சங்கிலித்தொடர் போல் 1,600 கி.மீ. தொலைவு வரை பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. இந்த மலைத்தொடர், அரபிக்கடலில் இருந்துவரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து தென்மாநிலங்களுக்கு நல்ல மழையைத் தருகிறது. இந்த மலைத்தொடர், வெப்ப காலத்தில் அதிகம் வெப்பம் தாக்காதவாறும், குளிர்காலத்தில் அதிக குளிர் தாக்காதவாறும் தென்னிந்தியாவின் பருவகால நிலையை சமன்படுத்துகிறது.
80 மில்லியன் ஆண்டு பழமை
7,402 பூக்கும் தாவரங்கள், 1,814 பூக்காத தாவரங்கள், மூலிகைச்செடிகள், 10 வகை காட்டுத் தேனீக்கள், 6,000 பூச்சிகள், 508 பறவையினங்கள், 179 நீர், நில வாழ்வன, 288 மீன் வகைகள், பல்வகை வனவளம், கனிமவளம், மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டிக் கிடக்கிறது. 14 தேசிய பூங்காக்கள், 44 வன உயிரின சரணாலயங்கள், 11 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில்தான் அதிகளவு யானைகள் உள்ளன. இதுதவிர, புலி, சிறுத்தை, ஆடு உள்ளிட்ட 139 வகை பாலூட்டி விலங்குகள் உள்ளன. 35 சிகரங்கள் உள்ளன.
முற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்துள்ளன. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால் அந்த நிலப்பரப்புகளில் இருந்து பிரிந்து தென்னிந்திய பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம்பெயர்ந்தது. 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலையாகக் கருதப்படுகிறது.
126 முக்கிய ஆறுகள் உற்பத்தி
கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரவருணி உள்ளிட்ட பெரிய ஆறுகள், மணிமுத்தாறு, தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு, வைகை, பெரியாறு உள்ளிட்ட சிற்றாறுகள் போன்ற தென்னிந்தியாவின் 126 முக்கிய ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வங்காள விரிகுடா, அரபிக் கடலில் கலக்கின்றன. தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய நிலங்கள், குடிநீர் தேவை இந்த ஆறுகளையே நம்பியுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையில் குற்றாலம், அகஸ்தியர், சுருளி, வெள்ளிநீர் வீழ்ச்சி, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த நீர்வீழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. ஊட்டி ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, லிட்சினி யானை ஏரி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் செயற்கை ஏரிகள் உள்ளன.
அதிகரிக்கும் கட்டிடத்தால் ஆபத்து
தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் 60 சதவீதம் பகுதியானது புலிகள் காப்பகம், யானைகள் காப்பகம், சரணாலயங்கள், தேசியப் பூங்கா உள்ளிட்டவை அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. மனிதனுடைய வாழ்வுக்கு இயற்கையாகவும், செயற்கையாகவும் அரிய பொக்கிஷங்களை வழங்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைக்கு மனிதர்களாலேயே தற்போது பல்வேறு ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன.
வன வளங்கள் ஆக்கிரமிப்பு, உணவு பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாட்டால் வனவிலங்குகளுடைய சராசரி வாழ்நாள் குறைந்து வருகிறது. பணக்காரர்கள், இளைஞர்கள் பெரும் நட்சத்திர விடுதிகளில் அறை எடுத்து தங்குவதைக் காட்டிலும், அடர்ந்த காடுகளில் கட்டப்படும் பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகளில் தங்குவதை ரசிக்கின்றனர். இவர்களைக் குறிவைத்து கடந்த அரை நூற்றாண்டுகளாக வணிக ரீதியில் கொடைக்கானல், மேகமலை, மூணாறு, நீலகிரி, ஊட்டி உள்ளிட்ட கோடைவாசஸ் தலங்களில் `மாஸ்டர்' பிளான் மற்றும் வனத்துறை சட்டங்களை மீறி புல்வெளி, சோலை காடுகளை அழித்து, ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், காபி, டீ எஸ்டேட்டுகள் புற்றீசல்போல பலமடங்கு பெருகிவிட்டன. ஊருக்குள் வசிக்கும் மனிதர்கள் காடுகளை நோக்கியும், மனிதர்கள் ஆக்கிரமிப்பால் காடுகளில் வசிக்கும் யானைகள், சிறுத்தைப்புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊர்களை நோக்கி படையெடுப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுகளால் நிலச்சரிவு அபாயம்
தண்ணீர் தேவைக்காக கோடைவாசஸ்தலங்களில் உருவாக்கப்படும் ஆழ்துளை கிணறுகளால் பாறைகளிடையே இடைவெளி அதிகரித்து அடிக்கடி மண்சரிவு ஏற்படுகிறது. இந்த மலையின் இயற்கை நீர் ஆதாரம், பாறை வளம், மண் வளம் சுரண்டப்படுவதால் பருவநிலை மாறி மழை பொய்த்து தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு சதவீதத்துக்கு குறைவான உப்புத் தன்மை கொண்ட நீரே நன்னீர் எனப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும், ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் முழுமையும், நன்னீராகவே கிடைக்கின்றன. பெருகிவரும் கட்டிடத்தால் இந்த நன்னீர் மாசு அடைந்துள்ளதால் மீன், நத்தை, தவளை, தட்டான் உள்ளிட்ட 1,146 நன்னீர் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், பாரம்பரியமிக்க இந்த மலையை 24 மணி நேரமும் பாதுகாத்தால் மட்டுமே நாமும், நமது சந்ததியினரும் உயிர் வாழ முடியும்.
கஸ்தூரிரங்கன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதால் இப்போது உள்ள விவசாய நிலங்கள் பறிக்கப்படாது, மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றார்.
நன்றி,
தி இந்து ( தமிழ் நாளிதழ்  ) சிந்தனைக் களம் / செய்தியாளர்கள் 

தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதல் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்கிறார்.

தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதல் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்கிறார். 



சென்னை: தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதல் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31. தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒரு நீதிபதி மட்டும் பெண் நீதிபதியாவார். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூத்த வக்கீல் உதய் உமேஷ் லலித், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபுல்ல சந்த் பாண்டே, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் மனோகர் சபேரே, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பானுமதி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். 

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி ஆர்.பானுமதி தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர்.  தனது 33வது வயதில் 1988ல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சியில் நீதிபதியாக பணியாற்றியபோது நாட்டையே உலுக்கிய பிரேமானந்தா சாமியார் வழக்கை விசாரித்தார். அந்த வழக் கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்த பிரிவுகளில் சாமி யார் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும் ரூ.67 லட்சம் அபராதம் விதித்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி மிகவும் பிரபலமானவர்.

இவர் கடந்த 2003 ஏப்ரல் 3ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2013 நவம்பர் 12ல் ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற தலை மை நீதிபதியாக பொறுப்பேற்றார். தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி பானுமதி தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். இவர் உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றவுள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நீதிபதி பானுமதிக்கு இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அனைவருக்கும் தெரிய வேண்டிய முக்கியச் செய்தி...







அன்பு மகனுக்கு,
அன்பு மகளுக்கு,

*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.

*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

*ரகசியங்களைக் காப்பாற்று.

*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.

*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி

*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.

*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.

*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

*'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே.


லட்சுமி கடாஷ்சம் வர செய்ய பகுதி-2

காலை பூஜைகள் முடித்து விட்டு சுமங்கலி பெண்கள் .
நெற்றி நடுக்கோட்டில் திலகம் இட வேண்டும்

காரணம்: லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் அந்த பகுதியும் உண்டு.

2.திருமாங்கலத்தை வணங்க வேண்டும்.
திருமாங்கல்யம்
மஞ்சள் தடவிய கயிற்றால் மட்டும் இருக்க வேண்டும்.
பல பேர் திருமாங்கலத்தை தாலி என்று கூறி இற்பொழுது சரடு என்ற அளவுக்கு வந்து விட்ட
து.
(முக்கிய நிபந்தனை:
கழுத்து வலிக்கிறது என்று கழற்றி வைக்க கூடாது.இன்றைய பல அலுவலங்களில்
திருமாங்கல்யம் அணிந்து வர தடை உள்ளது.

3.தூடைப்பங்களை சரியாக வைக்கபட வேண்டும் அதனின் உள்ளே ஒரு பெண் தெய்வம் இருக்கிறது.

4, மதிய நேரங்களில் உறங்க கூடாது.

5, தலை வாருவது எல்லாம் மாலை 5 மணிக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

லெனின் இன்று தேவையா?

லெனின் இன்று தேவையா?
லெனின் 1918-ல் எழுதிய ‘ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம்’ புத்தகத்தைப் படித்தால் பதில் கிடைக்கும். ஏகாதிபத்தியத்தின் ஐந்து முக்கியக் கூறுகளை இந்நூலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
1. ஏகபோக முதலாளித்துவம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறுவது.
2. நிதி நிறுவனங்களின் கை ஓங்குவது.
3. நிதி ஏற்றுமதியின் முக்கியத்துவம் அதிகரிப்பது.
4. ஏகபோக முதலாளிகள் உலகப் பொருளாதாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது.
5. உலக நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது.
இவற்றில், கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பங்கீடு முதல் உலகப் போருக்குப் பின் நடந்தது என்பது உண்மை. ஆனால், முதலாளித்துவ நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்களால் நடந்த இரண்டாவது உலகப் போரின் விளைவாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடந்த தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளைவாலும் நேரடியாகப் பங்கிட்டுக்கொள்ளப்பட்ட நாடுகளுக்குப் பெயரளவில் விடுதலை கிடைத்தது.
ஏகாதிபத்தியம் லெனின் கூறிய மற்றைய அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் மக்களுக்கு என்ன கேடு என்று சிலர் கேட்கலாம்.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம் நேற்று கனவாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று அது முற்றிலும் சாத்தியமானது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி அதைச் சாத்தியமாக்குகிறது. இவை வளர்ந்ததற்கு முதலாளித்துவம் முக்கியமான காரணம் என்பது முற்றிலும் உண்மை. ஆனால், வளர்ச்சியின் பயனை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்ய வேண்டும் என்ற கொள்கைப்பிடிப்பு அதனிடம் இல்லை. இருந்தால் அது முதலாளித்துவமாக இருக்காது.
இதனாலேயே இன்று உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. போர்கள் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மதவாதிகளும் பழமைவாதிகளும் தூக்கி நிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் எவரும் ஏகாதிபத்தியம் இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்ல மாட்டார்கள்.

கூகுள் இணைய தளத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர்! சுந்தர் பிச்சை


கூகுள் இணைய தளத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர்!
----------------------------------------
‘கூகுள்’ இணைய தளம் உலகமெங்கும் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் தமிழரான சுந்தர் பிச்சை (வயது 42), கடந்த 2004–ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இப்போது அவரை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ், மிக முக்கிய பொறுப்பில் அமர்த்தி உள்ளார். அதாவது, தேடல், வரைபடங்கள், கூகுள் பிளஸ். வர்த்தகம், விளம்பரம், உள்கட்டமைப்பு ஆகிய 6 பிரிவுகளின் ஒட்டுமொத்த தலைமை பொறுப்பை சுந்தர் பிச்சை கவனிப்பார்.

இதுவரை இந்த பிரிவுகளை தனித்தனியே கவனித்து வந்தவர்கள், லாரி பேஜின் கீழ் செயல்பட்டு வந்தனர். இனி அவர்கள் சுந்தர்பிச்சையின் கீழ் செயல்படுவார்கள்.

எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்கிற தகுதி படைத்தவர் என்று சுந்தர் பிச்சையை இணைய தள வல்லுனர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் இணைய தளத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர்!
----------------------------------------
‘கூகுள்’ இணைய தளம் உலகமெங்கும் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் தமிழரான சுந்தர் பிச்சை (வயது 42), கடந்த 2004–ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
இப்போது அவரை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ், மிக முக்கிய பொறுப்பில் அமர்த்தி உள்ளார். அதாவது, தேடல், வரைபடங்கள், கூகுள் பிளஸ். வர்த்தகம், விளம்பரம், உள்கட்டமைப்பு ஆகிய 6 பிரிவுகளின் ஒட்டுமொத்த தலைமை பொறுப்பை சுந்தர் பிச்சை கவனிப்பார்.
இதுவரை இந்த பிரிவுகளை தனித்தனியே கவனித்து வந்தவர்கள், லாரி பேஜின் கீழ் செயல்பட்டு வந்தனர். இனி அவர்கள் சுந்தர்பிச்சையின் கீழ் செயல்படுவார்கள்.
எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்கிற தகுதி படைத்தவர் என்று சுந்தர் பிச்சையை இணைய தள வல்லுனர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

சிறுநீரகக் கல்...
இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?

நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?
1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..
3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..
4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..
6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..
7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும்,
சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாகஇருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..
8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..
9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .
இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?
இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள் ...

மைக்கேல் மதன காமராஜன்

பெருமைமிகு தமிழ் சினிமா வரலாற்றில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்துக்கு மிக முக்கியமான பங்குண்டு.இப்படம் கொண்டிருக்கும் சிறப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல,அவற்றை பட்டியல் இட்டு முடிப்பது எளிதும் அல்ல.நான் எத்தனையோ முறை இப்படத்தை 24 வருடங்களில் பல வயதுகளில் அதன் கண்ணோட்டத்தில் பார்த்திருந்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கையிலும் எனக்கு அது ஃப்ரெஷ்ஷாக இருக்கும், ஏதாவது புதிதாக புலப்படும்,அவ்வப்போது அவற்றை இங்கே அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன்.
இந்திய சினிமாவில் மைக்கேல் மதனகாமராஜன்[1990] படத்தில் தான் முதன் முதலாக ஆப்பிள் லேப்டாப் காட்டப்பட்டது என்னும் பெருமையையும் கமல்ஹாசன் தான் தக்க வைத்திருக்கிறார் இம்மாடல் 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரிலீசாகியுள்ளது,
பென்ஸ் காரில் நாகேஷுடன் தன் மதன் மெஹல் [அப்படித்தான் ஸ்டைலாக சொல்லுவார்]செல்லும் போது அவினாஷி தன் அப்பாவிடம் கையாடிய 25 லட்சத்தை இதில் தான் கணக்குப் பார்த்து அவருக்கு கிடுக்கிப் பிடி போடுவார்.
கஜினி படத்தில் சூர்யா செய்த பிஸ்னஸ் மேன் வேடம் எல்லாம் மதனகோபால் கதாபாத்திரத்துக்கு முன் ஜுஜூபி என்றால் மிகையில்லை,
சிறு குறிப்பு:- ஜுஜூபி என்பது ஒரு பழமாம்,அது இலந்தைப் பழம் போல இருக்கிறது, http://en.wikipedia.org/wiki/Jujube
இன்று வரை காமெடி ஜானரில் தமிழில் இப்படி ஒரு தரமான படம் வரவில்லை என்று அடித்துச் சொல்லலாம்,செம படம் இது, எத்தனை வெரைட்டியான கதாபாத்திரங்கள் செய்திருப்பார் கமல்ஹாசன், ஒவ்வொருவருக்கும் டூயட் உண்டு [மைக்கேல் தவிர்த்து],குறிப்பாக ஊர்வசியுடன் கமல் பாடும் சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் பாடல் இந்திய சினிமாவில் முதன் முதலாக படமாக்கப்பட்ட முழுநீள ஸ்லோமோஷன் பாடலாகும், இதற்கு நேர்மாறாக மிக வேகமான பாணியில் கதைகேளு,கதைகேளு என்னும் ஐந்தே நிமிட ஆரம்பப் பாடலில் நால்வர் பிறப்பும் சகோதரர்களின் பிரிவும் விவரிக்கப் பட்டிருக்கும்,
அப்பாடலில் ஃப்ளாஷ்பேக் காட்சியை கதைகேளு பாடலுக்குள் நறுக்கென்ற பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளுக்குள் அடக்க வேண்டி,ஃபாஸ்ட் ஃபார்வர்ட் யுத்தியிலும் [16 frame per second] ,கருப்பு வெள்ளையிலும் படம் பிடித்திருப்பார்கள்.
கதைகேளு பாடலில் வரும் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் [இப்பொது 82 வயது], பல திறமைகளை தன்னுள் கொண்ட அஷ்டாவதானி,தேர்ந்த ஒளிப்பதிவாளரும் கூட,அவர் தெலுங்கில் இயக்காத ஜானர் படங்களே இல்லை,அவர் இயக்கிய புஷ்பக் [பேசும் படம்] இன்றளவில் இந்திய சினிமாவின் முக்கிய சாதனை,அதன் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அளிக்கப்பட்ட இயக்குனர் வாய்ப்பு இப்படம்,இதிலும் கமல்ஹாசனின் தலையீடு இல்லாமல் இருக்குமா என்ன?படம் டைட்டில் போட்டு முடித்தவுடன்,மதன் கமலின் போட்டோ சுவற்றில் மாட்டப்படும்,அங்கே இயக்கம் என்று சிங்கீதம் சீனிவாசராவின் பெயர் போடுவார்கள்,அது கமல்ஹாசன் இயக்கத்தில் அளித்த பங்கை சூசகமாக நமக்கு விளக்கிவிடும்.
படத்தில் சிங்கீதம் சீனிவாசராவ் ஃப்லிம் சுருளுக்குள் இருந்து முதலில் தோன்றி கதைகேளு பாடலில் கதை சொல்வார்,அவர் அங்கே கொண்டுவரும் கருவியின் பெயர் கைனடாஸ்கோப்http://en.wikipedia.org/wiki/Kinetoscope ,அதில் நாம் சிறுவயதில் நிச்சயம் நம் பள்ளிவாசலிலோ,வீட்டின் தெருக்களிலோ 25 காசு கொடுத்து படம் பார்த்திருப்போம்,நான் அதில் சார்லி சாப்ளின் படம் ஏதோ ஒன்று ஐந்து நிமிடம் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது,
படத்தில் ஒவ்வொரு கமல்ஹாசனுக்கும் தனித்தன்மையுடன் கூடிய தீம் இசை உண்டு, பாடல்கள் எதுவுமே இடைச்செருகல் போலத் தோன்றாது,என பல சிறப்புகள் உண்டு. படத்தின் அதிரடிப் பட்டாசு போன்ற காமெடி வசனங்களை திரைக்கதையை கிரகித்து உள்வாங்கி எழுதியது கிரேசி மோகன் , இவர் மளிகைக் கடைக்காரராக கேமியோ ரோலும் செய்திருப்பார்.இவர் பாலக்காட்டு காமேஸ்வரனுக்கு எழுதிய வசனங்கள் தத்ரூபமாக இருக்கும்,எல்லா க்ளாஸ் ஆடியன்ஸுக்கும் புரிய வேண்டும் என்னும் சமரசம் எதுவும் செய்யப்பட்டிருக்காது,உதாரணமாக இறுதிக்காட்சியில் குஷ்பு சுடும் இரட்டைக்குழல் துப்பாக்கியை காமேஸ்வரன் தோக்கு[மலையாளத்தில் துப்பாக்கி] என்றே சொல்வார்.அதே போன்றே ஷமிக்கனும்,[மன்னிக்கனும்] என நிறைய சொல்லலாம்.
இதில் சாம்பாரில் மீன் விழும் [கருவாடு] காமெடி எத்தனை பிரசித்தி பெற்றதோ?,அதே போன்றே பின்னாளில் சிங்காரவேலன் படத்தின் கருவாடு காமெடியும் மிகவும் பேசப்பட்டது.
இதில் மதனகோபால் கதாபாத்திரம் வளர்ப்பால் ஹைலி எஜுக்கேட்டட், சோஃபிஸ்டிக் என்பதால் அவர் லாஜிக்காக அடியாட்களுடன் சண்டை போட மாட்டார், அந்த சர்ச் காட்சிக்கு பின்னர் வரும் டாய்லெட் சண்டைக்காட்சியை கவனித்தால் புரியும்.அதிலும் ஒரு டாய்லெட் காட்சியில் மதன் தன் கால்களை சுவற்றில் அழுத்தி, மனோரமாவையும்,ரூபினியையும் தன் கால்களின் மீது அமர்த்தியபடி தாங்குவார்.அது மட்டும் சிறு விதிவிலக்கு.
மதன் சிறுவயது முதலே மூளையால் பலசாலி,அதனால் தான் அவரின் சிறு வயது முதலே அவருக்கு உற்ற துணையாக உடல்ரீதியான பலசாலியாகிய பீம் [Praveen kumar Sobti]http://en.wikipedia.org/wiki/Praveen_Kumar_%28actor%29
உடன் இருப்பார்,
இதை கடைசிக் காட்சியில் மதனின் அப்பா [ ஆர்.என்.கிருஷ்ணபிரசாத்] பீமைப் பார்த்து என்னடா பீம்கண்ணா இப்படி இளைச்சுப் போயிட்டே? என்று சொல்லுகையில் உணரலாம்.[அப்போது தூர்தர்ஷனில் 1988ல் வெளியான மஹாபாரதம் பீமன் கதாபாத்திரத்தில் இவரைப் பார்த்துவிட்டு மிகவும் பிடித்ததால் கமல் இதில் அவரை நடிக்க வைத்தார்.]இதில் தூர்தர்ஷனையும் கமல் சந்தடிசாக்கில் கலாய்திருப்பார்.பீம் தூர்தர்ஷன் பார்க்கிறேன் என மதனிடம் சொல்கையில் முகத்தை கோணுவாரே பார்க்க வேண்டும்.
படத்தில் அப்பாவாக வந்த ஆர்.என்.கிருஷ்ணபிரசாத் கன்னட சினிமாவின் முக்கியமான கேமராமேன்,அவரின் பேராசைக்கார தம்பியாக நடித்த ஆர்.என்.ஜெயகோபால் அவரின் தம்பியும் ஆவார்.
அதே போன்றே படத்தில் மைக்கேலின் வளர்ப்பு அப்பாவான சந்தான பாரதியும் படத்தில் கூலிப்படை புரோக்கராக வரும் ஆர்.எஸ்.சிவாஜியும் அண்ணன் தம்பி கூட்டணி,என்பதும் மற்றொரு ஒற்றுமை.
மேலும் கமலுடன் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் கிளுகிளுப்பாக நெருங்கி நடித்த ஜெயபாரதி,பின்னாளில் 4 கமல்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டிவரும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இதிலும் எத்தனை டல் மேக்கப் போட்டாலும்,அவரின் சொச்ச இளமையை மறைக்க முயன்று தோற்றது தெரியும்.
படத்தில் ஆபத்தான சாகசங்களை செய்யவே ராஜு கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும், அத்தனை ரியாலிட்டியாக அமைந்திருக்கும் அந்த 7 நிமிட டாய்லெட் சண்டைக் காட்சி. அதே போன்றே பெங்களூர் ஹைவேயில் காண்டெஸாவின் ப்ரேக் லைனிங்கை ராஜு கமல் கார் ஓடுகையிலேயே எக்கி சரி செய்யும் காட்சியையும் குறிப்பிட வேண்டும்.
படத்தில் வரும் பட்டானி ஃபைனான்ஸியர் போன்ற ஆட்கள் 90 வரை அதே போன்றே உடை அணிந்து கையில் கோலுடன் திரிந்தனர்.இப்போது அவர்களை சென்னையில் காண்பது மிக அரிது
அதே போல படத்தில் கமல்ஹாசனின் frequent colabarator ஆன எஸ்.என்.லட்சுமி பாட்டியை அவசியம் குறிப்பிட வேண்டும்,இதில் ஊர்வசியின் திருட்டுப்பாட்டியாக அதகளம் செய்திருப்பார்,அருமையாக பாலக்காடு பிராமண பொல்லாத்தனம் கொண்ட அத்தைப் பாட்டியாகவே அவர் உருமாறியிருப்பார்.குஷ்பூவைப் பார்த்து அவர் சொல்லும் கருநாக்குத் துக்கிரி என்னும் வசவு மிகவும் புகழ்பெற்றது ,http://en.wikipedia.org/wiki/S._N._Lakshmi என்ன அற்புதமான காலம் சென்ற மூத்த நடிகை அவர்?அவர் கமலின் அடுத்தடுத்த படைப்புகளான தேவர் மகன் [பாட்டி] , மகாநதி [மாமியார்], விருமாண்டி[பாட்டி] என மிகச் சிறப்பாக பங்காற்றியதை ஒருவர் மறக்க முடியுமா?!!!
காமேஸ்வரனின் வளர்ப்பு அப்பா பாலக்காடு மணிஐயராகவே வாழ்ந்த டெல்லி கணேஷின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, கமல்ஹாசனை விட 10 வயது மூத்தவர்,அவரின் அநேகமான எல்லா படங்களிலுமே இவர் frequent colabarator என்றே சொல்லலாம்,புன்னகை மன்னன் படத்திலும் கமல்ஹாசனின் குடிகார தந்தையாக நடித்திருப்பார்.இதில் தன் வளர்ப்பு மகன் காமேஸ்வரனுக்காக திருமணமே செய்து கொள்ளாமல்,கண்ணியமாக சமையல் தொழில் செய்யும் ஒரு ஆச்சாரமான பிராமண சமையல்காரர்.
இவரின் கையப் பிடுச்சு இழுத்தியா டயலாக் நாம் இன்றும் வாழ்வில் ஏதாவது தருணத்தில் கிண்டலாக பயன்படுத்துவோம்,அத்தனை அருமையான கதாபாத்திரம் அவருடையது. இவர் ஹேராம் படத்தில் பைரவ் என்னும் ஒரு தீவிர இந்துத்வா கதாபாத்திரம் ஏற்றிருப்பார்,ஷாரூக்கானை பெரிய சம்மட்டி கொண்டு அடித்து மண்டையை உடைக்கும் பாத்திரம்,அதுவும் நன்கு பேசப்பட்ட கதாபாத்திரம்.
ஃப்ரேமுக்குள் முதலில் ராஜுவும் மதனும் சந்திப்பர்,பின்னர் காமேஸ்வரன் ,அதன் பின்னர் மைக்கேல் என படிப்படியாக ஒரே ஃப்ரேமுக்குள் நான்கு கமலை ப்ரில்லியண்ட்டாக எந்த சந்தேகமும் வராத படிக்கு திரையில் தோன்ற வைத்து எங்கும் ஒட்டுப் போட்டது தெரியாமல் அசத்தியிருப்பார்கள். ஒளிப்பதிவாளர் பி.சி.கெளரிஷங்கரும் எடிட்டர் வாசுவும்.
கடைசி மலை உச்சி வீட்டையும் மினியேச்சர் என சொல்ல முடியாதபடி படமாக்கியிருப்பார் கபீர்லால் என்னும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கேமராமேன்,அங்கே டீமின் ஒட்டுமொத்த ப்ரில்லியன்ஸியும் வெளிப்பட்டிருக்கும்.
படத்தில் மிகவும் கண்ணியமாக போர்த்தி நடித்த ஊர்வசியின் உடை கூட அங்கே அந்த மரவீட்டில் இருந்து கயிற்றில் இறங்குகையில் வார்ட்ரோப் மால்ஃபங்ஷன் ஆகியிருக்கும்,அதே போலவே ரூபினிக்கும் மிக அதிகமாக வார்ட்ரோப் மால்ஃபங்ஷன் ஆகியிருக்கும்.ஆனால் குஷ்பூ ஜீன்ஸில் இருந்ததால் ரசிகர் ஆர்வக் கண்களில் இருந்து தப்பியிருப்பார்.
ஒவ்வொரு கமலுக்க்கும் அவர் துறை சார்ந்த ஸ்பெஷாலிட்டி வசனங்கள்,சிறு குறிப்புகள் subtle ஆன காமெடி இழையோடக் கொடுத்திருப்பார்,அதில் ராஜு தன்னை ஆள்மாறாட்டத்தின் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு ஃபைர் என்பதும்,
காமேஸ்வரன் தான் ஒரு வெஜிட்டேரியன் குக் என்பதை ஆள்மாறாட்டத்தின் போது மதன் மெஹல் சமையல்காரனிடம் வெகுளியாக வெளிப்படுத்துவதும்,என மிக அற்புதமாக சிருஷ்டிக்கப்பட்ட படம்.
இதில் அசைவப் பிரியரான கமல்ஹாசன் சைவ சாப்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை காமேஸ்வரன் கமல் கடைசியில் சொல்வதாக வைத்திருப்பார்.அந்த மரவீட்டில் இருந்து காமேஸ்வரன் பள்ளத்தாக்கை நோக்கி தொங்கும் வேளையில்,மைக்கேல்,மற்றும் மதன் கமலைப் பார்த்து நான் வெஜிட்டேரியன்,எனக்கு ஏறிவரத் தெம்பில்லை,பாடி வீக்காக்கும், என் மனைவி திரிபு,பாட்டி,வளர்ப்பு அப்பா மணிஐயர் எல்லோரையும் பார்த்துக்கோங்கோ,என சொல்லிவிட்டு விழப்போவார்.ஆனால் கமல் தன்னையும் அறியாமல் பீம் கதாபாத்திரத்தின் மூலம் அவன் சைவம் சாப்பிட்டாலும் பலசாலி என்றிருப்பார். [படத்தில் பீமை ஒரு சைவப் பிரியனாகத் தான் சித்தரிப்பார்]
படத்தின் திரைக்கதை மட்டுமே கமல்ஹாசன்,படத்தின் மூலக்கதை பாலிவுட்டின் பிரபல கதாசிரியரான காதர் கஷ்மீரி ,இவருக்கு 24 வருடங்கள் கழிந்தும் சம்பள பாக்கியான 11 லட்சத்தை கமல்ஹாசன் தரவில்லை என்னும் வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து ,நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளும் படி தீர்ப்பானதாம்,ஆனால் பணம் தந்தாரா எனத் தெரியாது.கஷ்மீரி என்னும் குடும்பப் பெயரை தன் விஸ்வரூபம் படத்திலும் உபயோகித்திருப்பார் கமல்.
http://freepressjournal.in/kader-kashmiris-case-against-kamal-haasan/
மேக் போர்டபிள் லேப்டாப் பற்றி படிக்க

தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது? குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது?


குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்
 குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்? நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் சேலம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ப.அருள் மற்றும் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் குணா.
தடுப்பூசி

நோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும்போது அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள்தான். சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு, மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலில் இருந்து என்று விழிப்புடன் நம்மைப் பாதுகாக்கிறது.
சில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்துகளும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவைதான் தடுப்பூசிகள்!  இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது. முதன் முதலில் பெரியம்மைக்குத்தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன.
தடுப்பூசிகள் போடுவதற்கான காரணங்கள்
தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும்கால தலைமுறையைப் பாதுகாக்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்படுத்துகிறது.
ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப்பட்டன! குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள்தான் தற்காக்கின்றன.
தடுப்பூசி அட்டவணை
ஒரு காலத்தில் உலக அளவில் தட்டம்மை, ரண ஜன்னி, காச நோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அழற்சி போன்ற நோய்களால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 10 குழந்தைகள் இறந்தனர். ஆனால் இன்றோ, பிறந்த உடனேயே இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால், இந்த நோயால் குழந்தைகள் இறப்பு இல்லை என்ற அளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது!
இந்திய அரசு குழந்தைப் பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசி, சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளுடன் சேர்த்து கூடுதலாக மேலும் சில தடுப்பூசி மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.
 என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்? பிறந்தவுடன்...
குழந்தைப் பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோவுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப்படுகின்றன. குழந்தை பிறந்ததும் மருத்துவமனைகளே குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை அளித்துவிடுவதால் கவலையில்லை.
பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)
பி.சி.ஜி.(BCG - Bacille Calmette-Guerin) - குழந்தைக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி. குழந்தையின் இடது கையில் தோள்பட்டைக்கு அருகில் (புஜத்தில்) போடப்படும். இது நோயை முற்றிலும் தடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே இது வேலை செய்யும்.
எச்சரிக்கை: தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சிறு வீக்கம் உண்டாகலாம். அது உடைந்து புண்ணாகி லேசான நீர்க்கசிவுகூட ஏற்படலாம். இதில் பயம் ஒன்றும் இல்லை. சில நாட்கள் வரை இருந்துவிட்டு பின்னர் அதுவாகவே சரியாகி அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். புண் ஆறாமல் இருந்தால் அல்லது அதிகமான வீக்கம் இருந்தால் குழந்தை நல மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. புண் ஆற வேண்டும் என்று எந்த ஒரு மருந்தையும் அதன் மீது தடவக்கூடாது.
இளம்பிள்ளைவாதத்துக்கு ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)
போலியோ கிருமி, குழந்தையின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கால்கள் சூம்பிப்போகச் செய்யக்கூடியது. இதனால் நிரந்தர ஊனம் ஏற்படும். இதைத் தவிர்க்க பல கட்டமாக அரசாங்கமே இலவச மருந்தை அளிக்கிறது.
குழந்தைப் பிறந்தவுடன் வாய் வழியாக ஓ.பி.வி. (OPV- oral polio vaccine)  மருந்து அளிக்கப்படும். இதை 'ஜீரோ டோஸ்’ என்பர். போலியோ நோய்த் தடுப்பில் சொட்டு மருந்து / ஊசி என்று இரண்டு இருக்கின்றன. பொதுவாக நம் ஊரில் போலியோ சொட்டு மருந்துதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஹெபடைடிஸ் பி (எச்.பி.வி.) தடுப்பூசி (விருப்பத்தின் பேரில்)

உலக அளவில் பொதுவாகக் காணப்படும் நோய்த் தொற்று 'ஹெபடைடிஸ் பி’. இது கல்லீரலைப் பாதிக்கிறது. எதிர்காலத்தில் கல்லீரல் சுருக்கம் (லிவர் சிரோசிஸ்), கல்லீரல் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். இதைத் தவிர்க்க பிறந்ததும் 'ஹெபடைடிஸ் பி முதல் டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியைப் பரிந்துரைக்கவில்லை. ஆனால், இதைப் போட்டுக்கொள்வது நல்லது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆறு வாரங்களுக்குப் பிறகு...
டி.பி.டி. (DPT) எனப்படும் முத்தடுப்பு ஊசி, போலியோ தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து இரண்டாவது டோஸ், ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ், ரோட்டா வைரஸ், பி.சி.வி. முதல் டோஸ், எச்.ஐ.பி. முதல் டோஸ் அளிக்கப்படும்.
முத்தடுப்பு ஊசி (டி.பி.டி.) (கட்டாயம்)
'டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக்கு எதிரான மருந்து இது.
எச்சரிக்கை: டி.பி.டி. தடுப்பூசி போடப்பட்ட சில மணி நேரத்தில், சில குழந்தைக்கு காய்ச்சல் வரலாம். அது சாதாரணமான காய்ச்சல்தான். பயப்படத் தேவையில்லை. ஒரே நாளில் குணமாகிவிடும். காய்ச்சல் ஒரு நாளுக்கும் மேலாகத் தொடர்ந்தால் உடனடியாக குழந்தையை டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது.
ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)
போலியோவுக்கு அளிக்கப்படும் மருந்தின் இரண்டாவது டோஸ் இது. வாய் வழி சொட்டு மருந்தாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
ரோட்டா வைரஸ் தடுப்பூசி  முதல் டோஸ்
(விருப்பத்தின்பேரில்)
வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கும் கொடிய கிருமி ரோட்டா வைரஸ். ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே இது அதிகம் பாதிக்கிறது. இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால் இந்தநோய் வராமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.
எச்.ஐ.பி (ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி) தடுப்பூசி
(விருப்பத்தின்பேரில்)
ஹிமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி நோய்த்தொற்று ஏற்பட்டால் குழந்தைகளுக்கு மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகள் பாதிக்கப்படும். அதைத் தடுக்கவே இந்த தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.
கவனம்: இந்த ஊசி போட்ட இடத்தில் சிவந்துபோதல், வீக்கம் அல்லது வலி இருக்கலாம். ஆனால், கவலைப்படத் தேவையில்லை.
பென்டாவேலன்ட் தடுப்பூசி
முத்தடுப்பு ஊசி என்பது மூன்று நோய்களுக்கு எதிராக அளிக்கப்படுகிறது. தற்போது அதற்குப் பதிலாக ஐந்து நோய்களைத் தடுக்கும் 'பென்டாவேலன்ட்’ என்ற ஊசியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை... உள்ளிட்ட ஐந்து நோய்களுக்கான ஒரே தடுப்பூசிக்கு பென்டாவேலன்ட் என்று பெயர். இந்தத் தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, மஞ்சள் காமாலை பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஏற்கெனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்குப் பதிலாக பென்டாவேலன்ட் என்ற ஒரே தடுப்பூசியே சிறப்பாகச் செயல்படுகிறது.
10வது வாரம்
முத்தடுப்பு ஊசி, போலியோ, எச்.ஐ.பி., ரோட்டா வைரஸ், பி.சி.வி. இரண்டாவது டோஸ்... ஆகியவை குழந்தை பிறந்த 10-வது வாரத்தில் அளிக்கப்படும். இதில், முத்தடுப்பு ஊசி மற்றும் போலியோ மருந்தைத் தவிர மற்றவை விருப்பத்தின்பேரில் மட்டுமே போடப்படும்.
14வது வாரம் (மூன்றரை மாதம்)
இந்தக் கால கட்டத்தில் போலியோ, முத்தடுப்பு ஊசி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். இதுதவிர, ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.பி. ரோட்டா வைரஸ், பி.சி.வி மூன்றாவது டோஸ் போன்றவைகளும் அளிக்கப்பட வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு...
வாய்வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் இந்தக் கால கட்டத்தில் அளிக்க வேண்டும். இன்ஃபுளுவென்சாவுக்கான தடுப்பூசி இந்த மாதம் முதல் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். இதன்பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்ற வகையில் இன்ஃபுளுவென்சாவுக்கு மருந்தும் கொடுக்க வேண்டும்.
ஒன்பதாவது மாதம்
போலியோ சொட்டு மருந்து, மற்றும் ஹெபடைடிஸ் பி 3-வது டோஸ் அளிக்கப்பட வேண்டும்.
தட்டம்மைத் தடுப்பூசி (கட்டாயம்)
குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மைக்கான தடுப்பூசி போட வேண்டும். இதை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம். ஒன்பதாவது மாதத்தில் இந்தத் தடுப்பூசி போடப்படாத குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பின் எம்.எம்.ஆர் போடலாம்.
மேலும், 5 அல்லது 12 வயதிலும்கூட இந்தத் தடுப்பூசியைப் போடுமாறு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒரு வயதுக்குப் பிறகு
இந்த காலகட்டத்தில் ஹெபடைடிஸ்- ஏ வைரஸுக்கான தடுப்பூசி முதல் டோஸ் அளிக்கப்பட வேண்டும். இதுவும் விருப்பத்துக்கு உட்பட்டது. ஹெபடைடிஸ் ஏ-வில் கொல்லப்பட்டது, உயிரோடு இருக்கக்கூடியது என இரண்டு வகையான டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இரண்டாவது (இறுதி) டோஸ், முதல் டோஸ் போட்டதில் இருந்து ஆறு முதல் 18 மாதங்களில் போடவேண்டும்.
காலரா தடுப்பூசி (விருப்பத்தின்பேரில்)
ஒரு வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு இந்த ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. காலரா என்பது 'விப்ரியோ காலரே’ என்ற கிருமியால் ஏற்படுகிறது. இந்தக் கிருமி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உடலில் உள்ள நீரை வெளியேற்றிவிடும். நீருடன் சேர்ந்து உடலில் உள்ள உப்புக்களும் வெளியேறிவிடுவதால் நீர் இழப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம். இந்த நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால், இளநீர் போன்றவற்றைக் கொடுக்கலாம். அல்லது உப்பு- சர்க்கரைக் கரைசல் கொடுக்க வேண்டும்.
எச்சரிக்கை: குழந்தை வாந்தி எடுக்கிறது என்று தாய்ப்பால், இளநீர், உப்பு-சர்க்கரைக் கரைசல் கொடுக்காமல் இருந்துவிடக்கூடாது.
15வது மாதத்தில்
எம்.எம்.ஆர். தடுப்பூசி முதல் டோஸ், வேரிசெல்லா தடுப்பூசி, பி.சி.வி. பூஸ்டர் தடுப்பூசி இந்தக் காலக்கட்டத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.  
எம்.எம்.ஆர். தடுப்பூசி (கட்டாயம்)
மீசல்ஸ், மம்ஸ் மற்றும் ரூபெல்லா எனப்படும் தட்டம்மை, புட்டாலம்மை (பொன்னுக்கு வீங்கி) மற்றும் ஜெர்மன் அம்மையை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி இது.  
எச்சரிக்கை: இந்தத் தடுப்பூசி போட்டதும் குழந்தைக்கு காய்ச்சல்போல உடல் சூடாகும், மூட்டு வலி அல்லது உடலில் விரைப்புத்தன்மை ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
 வேரிசெல்லா தடுப்பூசி
(விருப்பத்தின்பேரில்)
வேரிசெல்லா சோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் சின்னம்மை ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக வேரிசெல்லா தடுப்பூசி 15-வது மாதத்தில் போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒருவரை ஒருவர் தொடுவதன்மூலமும், சுவாசம், இருமல், தும்மல் மூலமும் காற்றில் பரவக்கூடியது. சிலருக்கு இந்தக் கிருமியால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், சில குழந்தைகளுக்கு இது வலிப்பு நோயை ஏற்படுத்தி உயிரிழப்பைக்கூட உண்டாக்கலாம். சின்னம்மை வந்து சென்றபிறகும்கூட இந்தக் கிருமி உடலிலேயே இருந்து எதிர்காலத்தில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. 12 முதல் 15 மாதக் குழந்தைகளுக்கு இது அளிக்கப்பட வேண்டும்.
16 முதல் 18வது மாதங்களில்
டி.டி.பி., ஐ.பி.வி., ஹெச்.ஐ.பி. முதலாவது பூஸ்டர் அளிக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு இந்த நோய்க் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டிருக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தக் கிருமிகளுக்குரிய நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில் மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு 'பூஸ்டர் தடுப்பூசி’ என்று பெயர்.
முத்தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி (கட்டாயம்)
'டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், பெர்டூசிஸ் எனப்படும் கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக் எதிரான பூஸ்டர் தடுப்பு மருந்து இது.
எச்சரிக்கை: குழந்தைக்கு சிறிய அளவில் காய்ச்சல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம் இருக்கலாம். கவலைப்படத் தேவையில்லை.  
போலியோ பூஸ்டர் மருந்து
போலியோ தடுப்பு மருந்து. வாய் வழியே எடுத்துக்கொள்ளக்கூடியது.
குறிப்பிட்ட காலத்தில் போட்டுவிட்டோமே என்று இருந்துவிட வேண்டாம். போலியோ ஒழிப்பு தினத்தன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அரசு சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. அந்தநேரத்திலும் குழந்தைக்கு இந்தச் சொட்டு மருந்தை அளிக்கலாம்.
எச்.ஐ.பி. பூஸ்டர் (விருப்பத்தின்பேரில்)
எச்.ஐ.பி. பூஸ்டர் தடுப்பூசி போடும்போது ஊசிபோடும் இடத்தில் வலி, சிவந்துபோதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்.
18வது மாதம்
ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி இரண்டாவது தவணை (விருப்பத்தின்பேரில்)
இதை அரசு பரிந்துரைப்பது இல்லை என்றாலும், இந்திய குழந்தைகள் மத்தியில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று பரவலாகக் காணப்படுவதால் 'இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு’ இதனைப் பரிந்துரைக்கிறது. முதல் தவணைபோலவே, வைரஸ் கிருமி உயிருடன் உள்ளது, இறந்தது என இரண்டு டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இரண்டு வயது
இந்த வயதில் டைஃபாய்ட் மற்றும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதில் டைஃபாய்டு தடுப்பூசி மட்டும் கட்டாயம் போடப்படவேண்டும்!
டைஃபாய்டு காய்ச்சல் தடுப்பூசி (கட்டாயம்)
டைஃபாய்டு பாசிலஸ் என்ற கிருமி மூலம் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்தக் கிருமியானது பாதுகாப்பற்ற உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவும். பொதுவாக சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதிகளில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. வளர்ந்த நாடுகளில் டைஃபாய்டு மிகவும் அரிதான நோய். ஆனால், இன்னும் வளரும் நாடுகள் சுகாதாரச் சீர்கேடு காரணமாக ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நான்கரை முதல் ஐந்து வயது வரை
இந்த வயதில் டி.டி.பி இரண்டாவது பூஸ்டர், ஓ.பி.வி. மூன்றாவது தவணை, எம்.எம்.ஆர். மற்றும் வேரிசெல்லா தடுப்பூசிகள் இரண்டாவது தவணை, டைஃபாய்டுக்கான தடுப்பூசி, மெனிங்கோக்கல் தடுப்பூசி போன்றவை அளிக்கப்பட வேண்டும்.
எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை (கட்டாயம்)
எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை தடுப்பூசி என்பது மீசல்ஸ், மம்ஸ், ரூபெல்லா நோய்க் கிருமிகளுக்கு எதிரானது.
எச்சரிக்கை: தடுப்பூசி கொடுத்ததும் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்படலாம்.
ஓ.பி.வி. பூஸ்டர் (கட்டாயம்)
இது போலியோவுக்காக அளிக்கப்படும் வாய்வழிச் சொட்டு மருந்து.
டி.டி.பி. பூஸ்டர் இரண்டாவது தவணை(கட்டாயம்)
இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போட்ட பிறகு காய்ச்சலும், ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம் இருக்கலாம்.
தேவையெனில் போட வேண்டியது
ஷப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி
குறிப்பிட்ட பகுதியில் ஜப்பான் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி பரவுகிறது என்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும் 'ஜப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி’ போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. அதுவும், எட்டு மாதங்கள் பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்பப்பைவாய் புற்று தடுப்பூசி
பெண்களுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தது ஒன்பது வயது முதல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மூன்று தவணைகளில் (0-2-6 மாதங்களில் அல்லது 0-1-6 மாதங்களில்) இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கானது என்றாலும் ஆண்களும் 11 அல்லது 12 வயதுக்கு மேல் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.
தேசியக் குடும்ப நலத்துறை மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் 43.5 சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே 12 மாதங்களுக்குட்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பெறுகின்றனர். அரசு பரிந்துரைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்.
இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைக்கும் மற்ற மருந்துகளை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதைச் செய்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த முடியும்.
இயற்கை நோய்த் தடுப்பு
பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. குழந்தைக்கு தாய்ப்பாலே முழு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்.
பிரசவத்துக்குப் பிறகு முதன்முதலில் சுரக்கும் சீம்பால் குறைவாகவே இருக்கும். ஆனால் இதில் அடங்கியுள்ள சத்துகளும், அது தரக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியும் அளவிட முடியாதது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு சீம்பாலைப் புகட்டாமல் இருக்க வேண்டாம்!
குழந்தையின் எடை...
குழந்தைப் பிறந்த முதல் ஒரு வாரத்துக்கு எடை குறையும். பிறகு சரியானபடி பால் கொடுத்து, சரியான நேரக்கணக்குக்கு குழந்தை தூங்கி விழித்தால் வாரத்துக்கு 200 கிராம் வீதம் எடை கூடும்.
கவனிக்கவேண்டிய முக்கியமான விஜயங்கள்
சில தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலைகாட்டலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் போதும்.  
 தடுப்பூசி போடவேண்டிய காலகட்டத்தில் குழந்தைக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் அல்லது வேறு எதாவது உடல் நலப் பிரச்னை இருந்தால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். தடுப்பூசியைத் தள்ளிப்போடவும்வேண்டாம். குழந்தைக்கு உள்ள உடல் நலப்பிரச்னைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பதே நல்லது.
  குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து போடவேண்டாம். அதேபோல் கடுமையான காய்ச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம்! டாக்டரின் ஆலோசனையைப் பெற்று, முதலில் அவற்றைச் சரிபடுத்திய பிறகு தடுப்பூசி அளிக்க வேண்டும்.
  மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடைவெளி மிகவும் முக்கியமானது. அதிலும் நான்கு வார இடைவெளியில் டி.பி.டி. தடுப்பூசி மற்றும் ஓ.பி.வி. சொட்டு மருந்து போடவேண்டும் என்பது அவசியம்.
  எல்லா தடுப்பூசியும் முழுதாகப் போடப்பட்ட குழந்தைகளுக்கு சிறு சிறு காயங்களுக்கு டிடி (டெட்டனஸ் டாக்ஸாய்ட்) கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. டி.பி.டி. பூஸ்டர் மீதம் இருக்கும்போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே போடப்பட்ட பூஸ்டர் டோஸ் டெட்டனசில் இருந்து உங்கள் குழந்தைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கும்.
  குழந்தைக்கு ஊசி போட புட்டத்தை விட தொடையே சிறந்த இடம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்துதல் கூடாது. பெற்றோர்கள் இதை உறுதிப்படுத்துவது நல்லது. ஊசிப் போட்ட இடத்தில் சில குழந்தைகளுக்கு சிறு வீக்கம் தென்படும். இது பிரச்னையும் இல்லை. அதற்கு க்ரீம், மருந்து போடத்தேவையும் இல்லை.