கேரளாவில் காவல் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்ட 'குட்டி போலீஸ்' திட்டம், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அது என்ன குட்டி போலீஸ்?
ஆர்வம் உள்ள 14 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் போலீஸாக செயல்பட வகை செய்வதுதான் 'மாணவர் போலீஸ் படை' திட்டம். இதில் அங்கம் வகிக்கும் சுட்டிகளையே 'குட்டி போலீஸ்' என்று செல்லமாக அழைக்கின்றனர். இத்திட்டத்தில் சேரும் சுட்டிகள், நிஜப் போலீஸைப் போல யூனிஃபார்ம் அணிந்துகொண்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பும், மாலை வேளைகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பள்ளிகளுக்கு அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, பெண்களைக் கிண்டல் செய்பவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது, புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது போன்ற பணிகளை அவர்கள் செய்துவருகிறார்கள்.
...
கடந்த 2010- ஆம் ஆண்டில் கோழிக்கோடு கமிஷனர் பி.விஜயனின் முயற்சியால் குட்டி போலீஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது கேரளாவில் 127 பள்ளிகளைச் சேர்ந்த 11,000 சுட்டிகள் வலுவான 'மாணவர் போலீஸ் படை'யாக வலம் வருகிறார்கள்!
நன்றி விகடன்!

No comments:
Post a Comment