கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.
குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.
இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.
சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது
இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது
No comments:
Post a Comment