உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.
இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.
இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.
உலக மக்கள் தொகையில் முத்லிடத்தை பிடித்த சீனாவின் கிழக்கில்ஷான்ஹாயில் தொடங்கி லோப்நூர் வழியாக மேற்க்கில் சென்று தெற்க்கெ மங்கோலியாவின் உட்ப்பகுதிவரை செல்கிறது சீனப்பெருஞ்சுவர், வானுயர்ந்த மலைகள் மணல் பாலைவனங்கள் பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும் சுவரின் நீளம் 6400கிலோமீட்டர்கள்,எந்தவொர ு தொழில்நுட்ப்பமும் இல்லாத இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்படுள்ளது மிகப்பெரும் அதிசயம்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீனவிற்க்கு அச்சுறுத்தல்கள் அதிகம் திடீர் திடீரென்று அண்டை நாடுகள் சீனாவின் மீது படையெடுத்து வந்தன இது சீன அரசர்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வந்தது, இதை எப்படி தீர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்து இறுதியாக சீனாவின் எல்லைப்பகுதியில் மாபெரும் சுவர் ஒன்றை கட்டுவது என்று முடிவெடுத்து உடனடியாக வேலையில் இறங்கினார்கள், அதாவது கி.பி 206 இல் முதல் சின்வம்சத் அரசன் இதை கட்டத்தொடங்கினான் பதினைந்து வருடங்கள் இந்த பெருஞ்சுவரை கட்டினார்கள்
குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,கிட்டத் தட்ட மொத்த மக்கள் தொகையில் 70 % பேர் இப்பணியில் ஈடுபட்டனர், கி.பி 221ல் 5000 கிலொமீட்டர் தூரம்வரை கட்டினர் இதற்க்கு வான்-லி-குவான்ங்-கெங் என்று பெயர் வைத்தனர், 4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை இதன் அகலம் இருந்தது, இவ்வளவு பெரிய சுவரை கட்டியும் ஏனோ அவர்களுக்கு திருப்தி ஏற்ப்படவில்லை, சுவரின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்து கி.பி 1368 லிருந்து 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர்கள் மீண்டும் சுவர் கட்டும் வேலையை தொடங்கினார்கள், மொத்தம் 6400 கிலொமீட்டர் வரை கட்டினார்கள், பின்பு இந்த சுவரில் மறு சீரமைப்பு பணியை தொடங்கினார்கள் இதுவெ 200 ஆண்டுகள் வரை நீடித்தது , சுவரில் குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் தங்குவதற்க்கும் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுவதற்க்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன, ஆபத்து காலங்களில் அந்த அறைகளில் இருந்து புகை போட்டு படை வீரர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.கி.பி1987ல் சீனப்பெருஞ்சுவர், உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது,மனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடம்சீனப்பெருஞ்சுவர்.
இந்த சுவர் சீனாவின் அடையாளமாக உள்ளது, தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கிலொமீட்டர் தொலைவில் இருக்கும் சைமைதாயு மற்றும் மடியான்யு என்ற இரண்டு இடங்களில் மட்டும் இப்போது சுற்றுலாப் பயணிகள் சுவரை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்
சீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்
சீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. நீளம் 7500 கிலோ மீட்டர். சுவர்களுக்கு மத்தியில் உள்ள பாதையின் அகலம் 20 அடி. இது சில இடங்களில் 15 அடியாக உள்ளது. மேலும், இதுவரையிலான உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் இதுவே மிகப் பெரியதாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
Posted by venkatesh at 10:35 AM
சீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?
சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளத்தைக் கண்டுபிடிக்க, ஏப்ரல் திங்களில் பிரம்மாண்ட அளவீட்டுப் பணி தொடங்கியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்று, சீனப் பெருஞ்சுவர். பகைவர்களின் படை எடுப்பிலிருந்து சீனாவின் வட பகுதியைக் காப்பாற்ற, இந்த மாபெரும் பாதுகாப்பு அரண் கட்டப்பட்டது.
கி.மு. 220இல் தொடங்கிய இதன் கட்டுமானப் பணி இறுதியில், 1368-1644 வரையிலான மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தான் நிறைவடைந்தது.
இதன் நீளம்,10 ஆயிரம் லீ அதாவது 5000கிலோ மீட்டர் என்றும், அகலம் சராசரியாக 6 மீட்டர் என்றும் கூறப்படுகிறது. எனினும் இவை தோராயமான அளவுகள் தான்.
இதனால், பெருஞ்சுவர் பற்றிய துல்லியமான புள்ளி விபரங்களைக் கண்டறிய வேண்டும் என்று சீன வரலாற்று அறிஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.இதைத் தொடர்ந்து,பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள், 1980ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததால் இம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
தற்போது, தொழில் நுட்பத் துறையில் சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் பணியை மீண்டும் தொடங்கச் சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் முடிவு செய்துள்ளன.
இந்த மாபெரும் அளவீட்டுப் பணி,4 ஆண்டு காலம் தொடரும். இதன் மூலம் சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளம், வரைபடம், தற்போதைய நிலை ஆகிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும்.
இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.
இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.
இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.
உலக மக்கள் தொகையில் முத்லிடத்தை பிடித்த சீனாவின் கிழக்கில்ஷான்ஹாயில் தொடங்கி லோப்நூர் வழியாக மேற்க்கில் சென்று தெற்க்கெ மங்கோலியாவின் உட்ப்பகுதிவரை செல்கிறது சீனப்பெருஞ்சுவர், வானுயர்ந்த மலைகள் மணல் பாலைவனங்கள் பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும் சுவரின் நீளம் 6400கிலோமீட்டர்கள்,எந்தவொர
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீனவிற்க்கு அச்சுறுத்தல்கள் அதிகம் திடீர் திடீரென்று அண்டை நாடுகள் சீனாவின் மீது படையெடுத்து வந்தன இது சீன அரசர்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வந்தது, இதை எப்படி தீர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்து இறுதியாக சீனாவின் எல்லைப்பகுதியில் மாபெரும் சுவர் ஒன்றை கட்டுவது என்று முடிவெடுத்து உடனடியாக வேலையில் இறங்கினார்கள், அதாவது கி.பி 206 இல் முதல் சின்வம்சத் அரசன் இதை கட்டத்தொடங்கினான் பதினைந்து வருடங்கள் இந்த பெருஞ்சுவரை கட்டினார்கள்
குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,கிட்டத்
இந்த சுவர் சீனாவின் அடையாளமாக உள்ளது, தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கிலொமீட்டர் தொலைவில் இருக்கும் சைமைதாயு மற்றும் மடியான்யு என்ற இரண்டு இடங்களில் மட்டும் இப்போது சுற்றுலாப் பயணிகள் சுவரை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்
சீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்
சீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. நீளம் 7500 கிலோ மீட்டர். சுவர்களுக்கு மத்தியில் உள்ள பாதையின் அகலம் 20 அடி. இது சில இடங்களில் 15 அடியாக உள்ளது. மேலும், இதுவரையிலான உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் இதுவே மிகப் பெரியதாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
Posted by venkatesh at 10:35 AM
சீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?
சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளத்தைக் கண்டுபிடிக்க, ஏப்ரல் திங்களில் பிரம்மாண்ட அளவீட்டுப் பணி தொடங்கியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்று, சீனப் பெருஞ்சுவர். பகைவர்களின் படை எடுப்பிலிருந்து சீனாவின் வட பகுதியைக் காப்பாற்ற, இந்த மாபெரும் பாதுகாப்பு அரண் கட்டப்பட்டது.
கி.மு. 220இல் தொடங்கிய இதன் கட்டுமானப் பணி இறுதியில், 1368-1644 வரையிலான மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தான் நிறைவடைந்தது.
இதன் நீளம்,10 ஆயிரம் லீ அதாவது 5000கிலோ மீட்டர் என்றும், அகலம் சராசரியாக 6 மீட்டர் என்றும் கூறப்படுகிறது. எனினும் இவை தோராயமான அளவுகள் தான்.
இதனால், பெருஞ்சுவர் பற்றிய துல்லியமான புள்ளி விபரங்களைக் கண்டறிய வேண்டும் என்று சீன வரலாற்று அறிஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.இதைத் தொடர்ந்து,பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள், 1980ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததால் இம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
தற்போது, தொழில் நுட்பத் துறையில் சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் பணியை மீண்டும் தொடங்கச் சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் முடிவு செய்துள்ளன.
இந்த மாபெரும் அளவீட்டுப் பணி,4 ஆண்டு காலம் தொடரும். இதன் மூலம் சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளம், வரைபடம், தற்போதைய நிலை ஆகிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும்.
No comments:
Post a Comment