பிறப்பும் இறப்பும் உடையவர்கள் பசுக்கள்;
*பசுக்கள் எண்ணில்லாதவர்கள் - .
பசுக்களாவார் தேவர்கள் முதலாகக் கிருமிகள் ஈறாக உள்ள சீவர்கள்.
பிறப்பும் இறப்பும் இல்லாதவர் பதி-*பதி ஒருவரே*
அந்தப் பதி சிவபெருமான்.
சிவபெருமானுக்குப் பசுக்களெல்லாம் என்றும் அடிமைகள்;
சிவபெருமான் அந்தப் பசுக்கள் தோறும் நிறைந்து நின்று அவர்களையெல்லாம் ஆளும் தலைவர். ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுபதி. *பசுக்களுக்குப்பதி - பசுபதி,
*பசு - ஆன்மா, பதி - தலைவன்.
இந்த உண்மையை யெற்றுச் சிவபெருமானை வழிபடுகிற மார்க்கம் சைவசமயம்.
-பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவ சமயம் இல்லை.
*சத்தி -வல்லமை-
*சிவபெருமனின் வேறாகாத திருவருளே சிவசக்தி*
*இந்தச் சிவசக்தியே பார்வதி தேவியார் என்று சொல்லப்படும்.
சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கொண்டருளிய மூர்த்தங்கள்:
*விநாயகர்
*சுப்பிரமணியர்
*வைரவர்
*வீரபத்திரர்
இவர்களுக்குச் செய்யும் வணக்கம், சிவபெருமான் ஒருவரைக் குறித்த வணக்கமேயாம்.
மனிதர்களைப் போல்வே பிறந்தும், இறந்தும் உழலுகிற தேவர்களைப் பரம் என்று கொள்வது சைவ சமயத்துக்கு முற்றும் விரோதம்.
சைவசமயிகள் என்று பெயர் இட்டுக்கொண்டு, அநேக மூடர்கள், *உயிர்ப்பலி* ஏற்கிற துட்ட தேவதைகளை வணங்குகிறார்கள். இவர்கள் எல்லாருஞ் சிவத்துரோகிகள்; இவர்களே அஞ்ஞானிகள்.
பெறுவதற்கு அரிய மனிதப் பிறவியைப் பெற்றும், மிக மேலாகிய சைவசமய மரபிலே பிறந்தும், சைவசமயம் இப்படிப்பட்டது, சிவபெருமான் இப்படிப்பட்டவர், அவரை வழிபடுகிற முறைமை இப்படிப்பட்டது என்று ஆராய்ந்து அறிந்து கொண்டு, சைவசமயத்தை பின்பற்ற வேண்டும்.
சைவசமயிகள் சைவசமயத்தை அறியாது கெடுவதற்குக் காரணம், சைவசமயத்தைச் சைவசமய குருமார்கள் பிரசங்கஞ் செய்யாது விடுதலே.
No comments:
Post a Comment