வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவன் இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்கிறான். ஒவ்வொரு மாநிலமாக சுற்றும் அவன் டெல்லிக்கு போகிறான். அங்கு பாராளுமன்றத்தை பார்த்து "அட....அழகா இருக்கே....இது என்ன?" என்று டாக்சி டிரைவரிடம் கேட்க, அதற்க்கு டிரைவர்" இது எங்க நாட்டு பாராளு மன்றம்" என்றான். "இது எவ்வளவு நாளில் கட்டியது?" என்று பயணி கேட்க "தெரியல....ஒரு அஞ்சாறு வருஷம் கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்" ன்னு பதிலளித்தான் டிரைவர். "அஞ்சாறு வருஷமா? எங்க நாடா இருந்தால் அஞ்சு மாசத்துல கட்டியிருப்போம்" ன்னு பீத்திக்கிட்டான.
அடுத்து இந்தியா கேட்....
"இது என்ன?"
இது இந்தியா கேட்."
"இதை கட்டி முடிக்க எத்தனை நாளாச்சு?"
"தெரியல....ஒரு வருஷம் இருக்கலாம்"
"ஒரு வருஷமா? எங்க நாடா இருந்தா...ஒரு மாசத்துல கட்டியிருப்போம்" மறுபடியும் பீத்திக்கிட்டான் வெளிநாட்டான்.
டாக்சி டிரைவர் கடுப்பாகிட்டன் இருந்தாலும் காட்டிக்கல....
அடுத்து தாஜ் மஹால்
"ஓ.....இதான் தாஜ்மஹாலா? அருமையா இருக்கே....இதை கட்டி முடிக்க எவ்வளவு வருஷமாச்சு?"
இதை கட்டிமுடிக்க இருபது வருஷமாவது ஆகிருக்கும்ன்னு சொன்னா....உடனே இவன் எங்க நாட்டுக்காரங்க இருபது மாசத்துல கட்டியிருப்போம்ன்னு பீத்திக்குவான் ன்னு மனசுல நினைச்சுக்கு.....கொஞ்ச நேரம் யோசிப்பது போல நடித்துவிட்டு டாக்சி டிரைவர் பதிலளித்தான்.
"தெரியல சார். நான் போன வாரம் இந்தப்பக்கம் வரும்போது இது இங்கே இல்லை. எப்படி அதுக்கிடையில கட்டி முடிச்சாங்கன்னு ஆச்சயமா இருக்கு"ன்னு போட்டான் பாருங்க ஒரு போடு....அதோடு வெளிநாட்டான் வாயே திறக்கல.....:-))))))))))))
No comments:
Post a Comment