Monday, October 6, 2014

இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!

இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்! 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல எளிய காய்-கனிகள், நம் உடலுறுப்பை ஒத்த ஒரு அமைப்பையே கொண்டிருக்கின்றன. அதுமட்டுமா.. அந்த உறுப்புக்களை காக்கும் குணங்களையும் கொண்டிருக்கின்றன என்பது தான் அதிசயத்திலும் அதிசயம்.
தக்காளி - இதயம்
நம் இதயம் போலவே சிகப்பாகவும், நான்கு அறைகளுடனும் தக்காளி இருப்பது உண்மையில் மிக மிக அதிசயம் தான். இயற்கையா கொக்கா?
LYCOPENE எனப்படும் தாவர வேதிப்பொருள் தக்காளியில் நிறைய உண்டு. இந்த LYCOPENE இதய நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவிர பல்வேறு புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தையும் தடுக்கிறது. நமது இரத்தத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய LDL CHOLESTROL அளவையும் தக்காளி கட்டுபடுத்துகிறது.
காரட் – கண்கள்
காரட்டை குறுக்கே நறுக்கி பாருங்கள். கண்களில் உள்ள கருவிழி போன்றே அது தோற்றமளிக்கும். இதிலிருந்தே தெரியவில்லை இந்த எளிய காய்கறி கண்களின் பார்வைக்கு எத்துனை முக்கியம் என்று? பீட்டா கரோட்டீன் என்ற பொருளிலிருந்து தான் காரட்டுக்கு அந்த ஆரஞ்சு நிறம் கிடைக்கிறது. இந்த பீட்டா கரோட்டீன் கண்களில் புரை (CATARACT) ஏற்படுவதை தடுக்கிறது. முதுமையில் ஏற்படும் கண்களில் உள்ள தசை தேய்மானத்தையும் இந்த பேட்டா கரோட்டீன் கட்டுபடுத்துகிறது. முதுமையில் ஒருவரது பார்வை குறைய இது தான் முக்கிய காரணமாகும். பீட்டா கரோட்டீனை இயற்கையான முறையில் உட்கொண்டால் தான் அதற்குரிய முழு பழங்கள் கிடைக்கும் மாத்திரைகள் உட்கொள்வதால் அல்ல.
முளைகட்டிய பட்டாணி – விந்தணு
முளைகட்டிய பட்டாணியின் உருவமும் நம் விந்தணுவின் உருவமும் ஒன்று என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. நன்கு முளை கட்டிய பட்டாணி பெண் கருமுட்டையை கருவுற வைக்க நீந்துவதற்கு முயலும் விந்தணுவின் தோற்றம் போலவே இருக்கும். அப்பா.. இயற்க்கை தான் எத்தனை பெரிய ஆசான்? அதிசயம்? ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்கி விந்தணுவின் குறைப்பாடுகளை கழுவுவதில் முளைகட்டிய பட்டாணி முக்கிய பங்கு வகிக்கிறது.
முளைகட்டிய பட்டாணியில் இருக்கும் விட்டமின் C நமது விந்தணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய free radicals எனப்படும் தீய பொருட்களை துரத்திவிடுகிறது. இதன் மூலம் செழுமையான விந்தணுவின் உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. அரை கப் முளைகட்டிய பட்டாணியில் இருக்கும் விட்டமின் C வேறு என்றும் இல்லை.
அது மட்டுமல்ல…. கருவில் இருக்கும் குழந்தைக்கும் இது நல்லது. எப்படி தெரியுமா? முளைகட்டிய பட்டாணியில் இருக்கும் ஃபோலேட் FOLATE எனப்படும் வைட்டமின், கருவில் இருக்கும் குழந்தை மூளைக் குறைபாடுடன் பிறப்பதை தவிர்க்க உதவுகிறது. அது மட்டுமல்ல கருவின் முதுகெலும்பு வளர்ச்சிக்கும் இந்த ஃபோலேட்இன்றியமையாததாகும்.
காளான் – காது
மஷ்ரூம் எனப்படும் உணவுக் காளானை எடுத்து குறுக்கு வாட்டாக நறுக்கிப் பாருங்கள்… நம் காதுகள் போலவே அதன் அமைப்பு இருக்கும். இயற்கை சொல்ல வருவது என்ன? காளானை உணவில் சேர்த்து வாருங்க.. உங்கள் செவித்திறன் அதகரிக்கும். வைட்டமின் D அதிகமுள்ள உணவுப் பொருளில் காளானும் ஒன்று. உறுதியான எலும்புகளுக்கு வைட்டமின் D மிகவும் அவசியம். குறிப்பாக காதுகளில் உள்ள மிக நுண்ணிய எலும்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் D மிக மிக அவசியம்.
வாழைப் பழம் – உதடு (மன அழுத்தம்)
காரணமின்றி உங்களுக்கு மன அழுத்தமா? இனம் புரியாத சோகமா? ரெண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டு முகத்துல சிரிப்பை வரவழையுங்க. வாழைப்பழத்துல ‘ட்ரிப்டோஃபான்’ என்னும் ப்ரோட்டீன் இருக்கு. இது ஜீரணமாகுற பட்சத்துல செரோடொனின் எனப்படும் நரம்பியல் நுண்ணூக்கி வேதிப்பொருளா மாறிடுது. நமது மூளையின் மனப்போக்கை கட்டுப்படுத்தக்கூடிய கெமிக்கல்களில் இந்த செரோடோனினும் ஒன்று. பெரும்பாலான anti-depressant மருந்துப் பொருட்கள் இந்த செரோடொனின் அளவை கட்டுப்படுத்துவதில் தான் வேலை செய்கின்றன என்பது தெரியுமா?
இந்த செரோடொன் அதிகபட்சமிருக்கும் போது நமது மனப்போக்கு (mood) சிறப்பாக இருக்கும். (பூஜை மற்றும் இதர சுப காரியங்களில் வாழைப் பழம் ஏன் முக்கிய பங்கு வகிக்கிதுன்னு இப்போ புரியுதா?)
பச்சை பூங்கோஸ் எனப்படும் BROCOLLI – புற்றுநோய்
பச்சை பூங்கோகோஸின் நுண்ணிய செல்கள் பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கான புற்றுநோய் செல்கள் போலவே இருக்கும். விஷயம் தெரியுமா? இந்த பூங்கோஸை அதிகளவு உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கமுடியுமாம். கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் நடந்த சோதனையில் ஒரு வாரம் தொடர்ந்து பூங்கோஸை உட்கொள்வதன் மூலம் 45% வரை விந்துப்பை புற்றுநோயை தவிர்க்கமுடியும் என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஒரு மணிநேரமும் விந்துப்பை புற்றுநோயால் ஒருவர் இறக்கிராராம்.
இஞ்சி – வயிறு
நாம் சர்வசாதரணமாக அதன் அருமை தெரியாமல் பயன்படுத்தும் இஞ்சி, பார்ப்பதற்கு நம் வயிற்றின் அமைப்பை போலவே இருக்கும். ஜீரண சக்தியை அதிகரிப்பதற்கு இஞ்சி மிகவும் சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? சீனர்கள் கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேல் இஞ்சியை மருத்துவத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். நெஞ்செரிச்சல் மற்றும் மலச் சிக்கலுக்கு இஞ்சி மிகச் சிறந்த தீர்வாகும். இதை தவிர மேலும் பல வித பயன்கள் இஞ்சி மூலம் உண்டு. மேலும் குடல் புற்றுநோயை குணப்படுத்துவதிலும் இஞ்சி சிறந்த பங்கு வகிக்கிறது.
பாலாடைக் கட்டி – எலும்புகள்
எலும்பு மஜ்ஜை பாலாடைக்கட்டி இரண்டும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியம் தான். ஒரு நல்ல துளைகளுடைய பாலாடைக்கட்டி (EMMENTAL) எலும்புகளுக்கு மட்டுமல்ல அதன் உட்புறங்களுக்கும் நல்லது. பாலடைக்கட்டிகளில் கால்சியம் அதிகளவு காணப்படுவதே இதற்க்கு காரணம். எனவே பாலாடைக்கட்டியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் எலும்பு அழற்சி நோய் எனப்படும் OSTEOPOROSIS நோய் வரவே வராது. மருத்துவ ரீதியாகவும் இது நிரூபிக்கப்பட்ட ஒன்று.
திராட்சை – நுரையீரல்
நமது நுரையீரல் முழுக்க ALVEOLI எனப்படும் திசுக்களால் ஆனாது. இவை பார்ப்பதற்கு திராட்சை கொத்தை போலவே இருக்கும். இந்த ALVEOLI மூலம் தான் ஆக்சிஜன் நம் இரத்தத்துக்குள் செல்கிறது. சில குழந்தைகள் கருவிலேயே இறப்பதற்கு முக்கிய காரணம், கருத்தரித்த 23 அல்லது 24 வாரங்களுக்குள் இந்த ALVEOLI கருவில் உள்ள குழந்தையின் நுரையீரலில் சரியாக வளராதது தான். பழங்கள் அதிகம் நிரம்பிய – குறிப்பாக திராட்சைகள் அதிகளவு உள்ள – ஒரு உணவு முறையின் மூலம் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம். திராட்சையில் proanthocyanidin எனப்படும் வேதிப் பொருள் அலர்ஜியால் ஏற்படக்கூடிய ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
வால்நட் – மூளை
வால்நட்டின் முடிச்சுகளுடன் கூடிய மடிப்புக்கள் பார்க்கும்போது நமது மூளையின் வெளிப்புறத் தோற்றம் போலவே இருக்கும். OMEGA-3 FATTY ACID காணப்படும் ஒரே பொருள் வால்நட் தான். பல்வேறு மூளை சம்பந்தப்பட்ட கோளாறுகளில் இருந்து மேற்படி OMEGA-3 FATTY ACID நம்மை பாதுக்காகிறது. தற்போது அதிகளவு தோன்றும் Alzheimer’s disease எனப்படும் ஒரு வகை நினைவு சம்பந்தப்பட்ட நோய்க்கு காரணமான புரதங்களை வால்நட்டிலுள்ள கனிமங்கள் அழித்துவிடுகின்றன. மூளை பழுதடைவது (brain ageing) வால்நட்டை உட்கொள்வதன் மூலம் ஓரளவு ஒத்திப்போடமுடியும்.

No comments:

Post a Comment