Monday, October 6, 2014

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்!



கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்!
******************************************************
'கொழுப்பு' என்றாலே இன்று பலருக்கும் பயம். உடம்பில் கொழுப்பு கூடிவிடுமோ என்ற பயத்திலேயே, விரும்பியதை நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியாமல் தவிக் கிறார்கள்.
உடம்பில் கொழுப்பு கூடினால், அது வியாதிகளின் கூடாரமாகத் தொடங்கிவிடும் என்பது உண்மை. ஆனால், ஆரோக்கியமான உணவின் மூலம் கொழுப்பு பிரச்சினையைத் தவிர்க்கலாம்.
* பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்பது, கொழுப்பின் அடர்த்தியைக் குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும்போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.
* உடலில் கொழுப்புச் செல்களைக் குறைக்க ஆப்பிள் உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் 'பெக்டின்' என்ற பொருள், உடல் செல்கள் கொழுப்பை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்புச் சேர்க்கைகளை நீக்கவும் உதவுகிறது.
* வாதாம் பருப்பில் உள்ள ஒமேகா 3, ஆல்பா லினோலினிக் போன்றவை கொழுப்பைக் கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வாதாம் பருப்புகளை உட்கொள்ளுங்கள்.
* கொழுப்பைக் கரைப்பதில் சிறந்த பங்காற்றக்கூடியது, பூண்டு. எனவே உணவில் அதிக அளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.
* பீன்ஸ், குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. கொழுப்பை கரைக்கும் நல்ல உணவாகவும் இது விளங்குகிறது.
* ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், அதேசமயம் கொழுப்பைக் கரைய வைப்பதைத் துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால், எடையைக் குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.
* 'கிரீன் டீ' எனப்படும் பச்சைத் தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டவை. ஆகவே தினமும் கிரீன் டீ குடித்து வாருங்கள். தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் அவசியம்.
* அசைவ உணவுகளைக் குறைத்துக் கொண்டு காய்கறிகளை, குறிப்பாக நார்ச்சத்து மிக்க காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளில் மீன்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம்.
* கொழுப்பு கரைப்புக்குத் தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது. வெந்நீர் பருகுவதும் நல்லதே!

No comments:

Post a Comment