Wednesday, August 6, 2014

சிறுவயதில் உங்களை அனாதையாய் விடாத பெற்றோரை தயவுசெய்து அவர்களின் முதுமையில் நீங்கள் அவர்களை அநாதை ஆக்கிடாதீர்கள்..!


ஆசையாய் பெயரிட்டு
மெல்ல நடை பழக வைத்து
சிந்திய சோற்று பருக்கைகளை
சிரித்தவாறு சாப்பிட்டு
"கக்கா" வை மிதிக்காதே என்று
அதை கையினால் எடுத்ததும்
பல முறை தூக்கத்தை
கெடுத்துக் கொண்டு
நெஞ்சின் மேல் தாலாட்டியதையும்
பள்ளியில் சேர்ப்பதற்கு
பல மணி நேரம்
வரிசையில் நின்றதும்
மானத்தை விற்று
கடன் வாங்கி
இரு சக்கர வாகனம்
வாங்கி கொடுத்து
தினமும் துடைத்து அதற்கு
பெட்ரோல் வாங்க காசு கொடுத்ததும்
இருந்த நிலத்தை விற்று
கல்லூரிக்கு அனுப்பியதும்
கண் பார்வை மங்கிய பின்னும்
அதிகாலை எழுந்து
பால் வாங்கி வந்ததும்
இல்லாத பரிச்சைக்கு பணம் கொடுத்ததும்
வேலைக்கு சேர்வதற்கு
வீட்டை வித்து பணம் கொடுத்ததும்
தலைக்கு மேல் கடனை வாங்கி
கல்யாணம் செய்து வைத்ததும்
சம்பளம் இல்லா வேலைக்காரனாய்
அனு தினமும் உழைத்ததும்
கொஞ்சம் கூட நினைவில் இல்லை
உன்னை முதியோர் இல்லத்தில்
ஓர் அகதியாய் விட்டு விட்டு
வந்த பின்னும் .....
உங்கள் சிறுவயதில் உங்களை அனாதையாய் விடாத பெற்றோரை தயவுசெய்து அவர்களின் முதுமையில் நீங்கள் அவர்களை அநாதை ஆக்கிடாதீர்கள்..!

No comments:

Post a Comment