Sunday, August 24, 2014

இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழி தமிழ்?

இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழி தமிழ்?

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வடநாட்டு பா.ஜ.க எம்.பி பாராளுமன்றத்தில் கோரிக்கை!

இந்திய பாராளுமன்றதில் உள்ள தமிழக எம்பிக்கள் ஒருக்கணம் வியப்பில் மூழ்கினர். அதற்கு காரணம் பாஜகவின் ராஜ்ய சபை உறுப்பினர் தருண் விஜய் தமிழை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று எழுப்பியதால் தான்.

தமிழ் மொழியின் அருமை பெருமைகளை பற்றி வடநாட்டு மக்கள் உணராது , அதற்கு உரிய இடம் அளிக்காதது அவர்களின் கடும் போக்கையே காட்டுகின்றது. ஏழ்கடல் தாண்டி தன்மனம் வீசி புகழ்கொண்டு வாழும் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழியாக பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறது என்று பாராளுமன்றத்தில் பறைசாற்றினார் தருண் விஜய். இவர் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கை பரப்பும் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.வின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த தருண் விஜய் , தமிழ் மொழியில் வேலை செய்யும் திறன் பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் , சம்பள உயர்வு , பதவி உயர்வு கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி , அனைத்து இந்திய பல்கலைகழகங்களிலும் தமிழுக்கு சிறப்பு பிரிவு ஒரு உருவாகப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் , இந்திய நடுவண் அரசு , தமிழை அனைத்து வடநாட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் பரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் தருண் விஜய்

தமிழ் அறிஞர்கள் பலரும் வடநாட்டு இந்துக் கோவில்களுக்கு வந்துள்ளனர். இப்படியாக தென்னாட்டையும் வடநாட்டையும் அவர்கள் இணைத்துள்ளனர். உண்மையான தேசிய ஒருமைப்பாட்டை தமிழ் கவியான பாரதியார் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவின் பண்பாட்டு புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் காரணியாக விளங்கும் தமிழ் மொழிக்கு உரிய மரியாதையும் , இடமும் இது வரை இந்த நாட்டில் கிடைக்க வில்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளார் தருண். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் போதெல்லாம் தருண் அவர்களை 'வணக்கம்' என்று கூறியே வரவேற்கிறார்.

தமிழுக்கு ஆதரவான தருண் விஜய்யின் இந்த கூற்றை தமிழக எம்பிக்கள் வரவேற்று உள்ளனர். குறிப்பாக சி.பி.ஐ. கட்சியின் து. ராஜா அவர்கள் , வடநாட்டு தலைவர்கள் இப்படி தமிழ் மொழியை ஆதரிப்பது உண்மையில் பாராட்டுதலுக்கு உரியது என்று பேசினார்.

இதில் என்ன வியப்பு என்றால் இது நாள் வரை இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், மற்ற மொழிகள் எல்லாம் அடிமை மொழியாக இருக்க வேண்டும் என்று எண்ணிய பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர் இப்படி ஒரு கருத்தை முன்வைத்துள்ளது தான்.

இது வடநாட்டு இந்துத்வா மக்களின் மனநிலை முதிர்ச்சியை காட்டுவதாக உள்ளது. தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய வடநாட்டு எம்பியை நிச்சியம் பாராட்டியே ஆகவேண்டும்.

காரணம் ++

இந்தி மொழி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்று மொழியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர் .

இந்தியாவை பொறுத்தவரை , தேசிய மொழி என்று எதுவும் கிடையாது . ஆனால் இந்தி தான் ஆட்சி மொழி அலுவல் மொழி. ஆங்கிலம் துணை அலுவல் மொழியாக உள்ளது .

உண்மையின் தருண் கோரியது போல தமிழ் மொழிக்கு ஆட்சி மொழி அதிகாரம் வந்து விட்டால் , தமிழ் மொழியை அழிவில் இருந்து காப்பாற்றி விடலாம்.

இங்குள்ள தமிழர்கள் பிழைப்புக்காக இந்தியை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது . தமிழ் மொழியிலேயே அனைத்து நடுவண் அரசு அலுவல்களையும் பார்க்கலாம் . நடுவண் அரசின் நாணயங்கள், அஞ்சல் தலைகள் , கடவுச் சீட்டுகள் , அடையாள அட்டைகள் அனைத்திலும் தமிழும் இடம் பெரும். இதை நியாயமாக தமிழர்கள் போராடி ஆட்சி மொழி அதிகாரத்தை பெற வேண்டும். அதற்காக போராட்ட முன்னெடுப்புகளை தமிழக கட்சிகள் இது வரை எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம் . ....

நம் தலைமுறையில் தமிழை இந்தியாவில் ஆட்சிமொழியாக்க பாடுபடுவோம். தமிழுக்கு உரிய இடத்தை பெற்றுத் தருவோம்.

என்ன தயாரா ...தமிழ் மக்களே ?

இதை பதிவு செய்ய காரணம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு 14 வயதில்
4 நாட்கள் சிறையில் அடைபட்டு வருந்திய வருத்தம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை .....
நன்றி.
திரு தருண் விஜய்

No comments:

Post a Comment