Wednesday, April 3, 2013

எகிப்தின் துயரம் நைல் நதி..... சென்னையின் துயரம் என் டி எல் டாக்ஸி .....

######################################
சென்னை வாழ் பெருமக்களுக்கு சகல விதத்திலும் துயரம் கொடுக்க பலர் வர்த்தக ரீதியாக புறப்பட்டிருக்கின்றனர்.

எனது இன்றைய துயரம் கால் டாக்ஸி வழியாக.

துபாய் செல்ல நேற்று இரவே என் டி எல் கால் டாக்ஸி யில் இன்று காலை 6.45க்கு வர பதிவு செய்தாயிற்று. அதன் பதிவு என்னும் எனக்குக் கிடைத்தது SMS மூலமாக. அதன் ஓட்டுனரும் கூப்பிட்டு எந்த இடத்தில் பிக் அப் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டாயிற்று. காலை 6.45க்கு வர வேண்டிய நேரமும் சொல்லி ஆயிற்று.

காலை ஐந்து மணிக்கு கடமை தவறாத அந்த ஓட்டுனர் என்னை எழுப்பி 'வந்து கொண்டு இருக்கிறேன்' என்றார். சமயம் 6.30 வரையிலும் வரவில்லை. என்ன ஆயிற்று என்று கேட்டால், 'வேறே சவாரிக்குப் போயிட்டேன், நீங்க ஆபீசுக்குப் போன் போட்டு பேசிக்குங்க' என்று தன கடமையை முடித்து விட்டார்.

இனி என் பயணம் என் டி எல் அலுவலகத்தை நோக்கி. போன் செய்த போது அறை குறை தூக்கத்தில் இருந்த நபர், என் அவசரம் புரியாமல், மூன்று முறை 'மறுபடி சொல்லுங்க' என்று வேறு யாருடனோ இடையிலே பேசிவிட்டு என்னுடன் அடிக்கடி இணைந்தார். ஒரு வழியாக அவருக்கு இன்டர்நேஷனல் விமானப் போக்குவரத்து விதிகளைக் குறித்து சொன்ன பின் அவர் புரிந்து கொண்டது 'சரி சார் இன்னொரு வண்டிக்கு ஏற்பாடு பண்ணிடறேன்'.

சரி போகட்டும் என்று, கிட்டிய SMS இல் இருந்து புதிய ஓட்டுனரை தொடர்பு கொண்டேன். அவரோ' இதோ சார், உங்க வீட்டுக்குப் பக்கத்திலே தான் இருக்கேன், ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்' என்று சொன்ன பொது அக மகிழ்ந்து போனேன். ஆயிற்று 7.15 மணி. இன்னும் வரவில்லை. கூப்பிட்டுக் கேட்ட போது ' சார், ஆபிஸ்ல வேறே சவாரிக்குப் போகச் சொல்லிட்டாங்க' என்று முடித்துக் கொண்டார்.

இனி தாமதிப்பதில் பிரயோஜனம் இல்லை என்று, மற்றொரு டாக்ஸி நிறுவனத்தை அழைத்து 9.00 மணி விமானத்திற்கு, 7.45 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். நிச்சயம் விமானம் ஏறாமல் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையுடன்.

என் அதிர்ஷ்டம் இன்று விமானம் ஒரு மணி நேரம் தாமதம் (எமிரேட்ஸ் விமானம்) என்பதாலும் எனக்கு சற்றே குருட்டு அதிர்ஷ்டம் உள்ளதாலும், உள்ளே நுழைந்து விட்டேன்.

ஆனாலும் என் மனதை உறுத்தியது என் டி எல் டாக்ஸி காரன் செய்ததுதான். சும்மா விட முடியுமா?

கூப்பிட்டுச் சொன்னேன்,' இந்த மாதிரி செய்யலாமா?' என்று.

அவரின் மறு மொழி என்னை ஆச்சரியப் பட வைத்தது, ' எதுக்கு சார், சும்மா சும்மா கூப்பிடறீங்க? உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்குங்க' என்றார்.

நான் சொன்னேன், 'இதை இன்று முகநூலில் பதியப் போகிறேன், என் நண்பர்களுக்கெல்லாம் உங்களது தரக்குறைவான சேவையைப் பற்றிச் சொல்லப் போகிறேன்' என்றதும் .........

அவர் சொன்ன ஒரு வார்த்தை, ' சென்னைல எங்களால இப்பிடித்தான் பிசினெஸ் பண்ண முடியும். முகநூல் என்ன மயி.......தைப் புடுங்க முடியும்? என்ன வேணும்னாலும் செஞ்சிக்கய்யா' என்று ஒற்றைப் படை விமர்சனத்தில் அத்தனை முகநூல் நண்பர்களையும் அசிங்கப் படுத்திய அந்த நபரை, இனி உங்களிடம் விட்டு விடுகிறேன்.

என் வாழ்வில் இனி என்றைக்குமே 'என் டி எல்' டாக்ஸி யில் ஏறமாட்டேன். உன் உயிர் போனாலும் கூட.

-டிமிடித் பெட்கோவ்ஸ்கி

1 comment:

  1. Dear All,

    This is for your kind information. NTL has proved that the mistake is not on the part of NTL. They have attached (audio file) which has the conversation between Call Center Executive and the customer. They have not used any abusive words. Since the person who used the media infulence to spoil the company's name. They have proved that the mistake was not on their part, AanthaiiRipportter co-editor Mr.B.N Rajan has removed the post from his webpage and shared with all other pages like this. NTL Will never abuse their customers. They are providing best service to the customer But unfortunately two vehicles which they have sent cannot reach him ontime, they asked the apoligise for the same. He refused to use their service later than.

    Below are the false statement provided by the reporter (Customer).

    1. NTL staff used abusive words on the customer. (Proof : Audio file attached)
    2. Flight delay. (We checked with Emirates Airlines and they confirmed on 1st April,2013 there was no flight departured more than 1 hr delay).

    https://soundcloud.com/#allwin-zeno/theratening-call-reporter

    ReplyDelete