Monday, April 15, 2013

படித்ததில் ரசித்தது!



சிறுவன் ஒருவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கையில் விலை உயர்ந்த கார் ஒன்று நின்றுகொண்டிருப்பதை பார்த்தான், ஆச்சர்யத்துடன் விழிகள் விரிய அதன் அருகில் சென்றான்.

இதை கவனித்த காரின் உள்ளே இருப்பவர் அச்சிறுவனை அழைத்து "என்ன காருல ஒரு ரவுண்டு அடிக்கலாமா" என்று கூறி அச்சிறுவனை காரில் சிறிது தூரம் அழைத்து சென்றார்.

சிறுவன் அவரை பார்த்து "கார் சூப்பரா இருக்கு ரொம்ப விலையா இருக்குமே" என்று கேட்டான்.

அதற்கு அவர் "எனக்கு தெரியாது தம்பி, ஏன்னா இந்த காரை எனக்கு என் அண்ணன் வாங்கி கொடுத்தார்" என்றார், இதை கேட்டதும் சிறுவன் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன .....

இதை கவனித்த அவர் "நமக்கும் இது போல ஒரு அண்ணன் இருந்தா நல்லாஇருக்குமேன்னு" நினைக்கிறியா, என்று சிறுவனைப் பார்த்து கேட்டார்.

"அதில்லை, நான் அந்த அண்ணன் போல் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று சிறுவன் பதிலளித்தான்.

"அவரவர் எண்ணங்களைப் போலவே
அவரவர் வாழ்க்கை அமையும்"

No comments:

Post a Comment