Monday, December 8, 2014

ஜலதோஷத்திற்கு இராமநாதபுரம் நண்டுக்கால் சூப்

ருசி நிறைந்த இராமநாதபுரம் 

ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். இல்லை என்றால் ஏழு நாளில் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் ஜலதோஷத்திற்கு ராமேஸ்வரம் தீவில் ஒரு ரெடிமேட் மருந்து இருக்கிறது. அதுதான் நண்டுக்கால் சூப். நண்டுக்கால் சூப் மற்றும் காரல் மீன் சொதி செய்யக் கற்றுத் தருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாத்திமுத்து ஜொகரா.

என்னென்ன தேவை?

நண்டு கால்கள் குறைந்தது 10

ரசப் பொடி - மூன்று டீஸ்பூன்

புளி, எலுமிச்சை - தேவையான அளவு

பூண்டு - 1

ம‌ஞ்ச‌ள் பொடி, கடுகு தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 4

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

எப்படிச் செய்வது?

நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்யவும். பின்னர் அ‌ம்‌மி‌க்கல் அ‌ல்லது ம‌த்தில் வைத்து ஓடுகள் உடையும் அளவிற்குத் தட்டிக்கொள்ள வேண்டும். புளியைத் தண்ணீர் அல்லது தேங்காய்ப் பாலில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பூண்டை நசு‌க்‌கி வை‌த்து‌க்கொ‌ள்ள வேண்டும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாயைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் தயாராக உள்ள பு‌ளி‌க்கரைச‌லுடன் ரச‌‌ப்பொடி, ம‌ஞ்ச‌ள் பொடி, உப்பு, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டுக் கா‌ல்க‌ள், பூ‌ண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

நண்டுக் கால்கள் நன்றாக வெந்ததும், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும். சுடச் சுட இந்த சூப்பைக் குடித்தால் ஜலதோஷம் காணாமல் போகிவிடும்

 ராமநாதபுரம் சமையல், நண்டுக்கால் சூப், சூப், 

இராமேஸ்வரம் ரபி

No comments:

Post a Comment