Monday, September 10, 2012

அறிந்த அறியாத விளக்கம்: ஆறிலும் சாவு நூறிலும் சாவு..


ஆறிலும் சாவு நூறிலும் சாவு..

அறிந்த விளக்கம்:

மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல...
:( :(


அறியாத விளக்கம்:

இந்த பழமொழிக்கான சம்பவம்
மஹாபாரதத்திலிருந்து
உதாரணம் காட்டப்படுகிறது...

கர்ணணை,
குந்தி தேவி (போர் நிகழும்போது)
தம் தார்மீக வாரிசுகளான
பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக
இருக்கும் கிருஷ்ணனுடன்
சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள்...
(5+1)
அதற்கு கர்ணன்,
'தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள்
ஆறு பேருடன்
இருந்தாலும் சரி...

அல்லது கௌரவ சகோதரர்கள்
நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி..
மரணம்
என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று...

அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு
நான் செஞ்சோற்றுக் கடனுக்காக
கௌரவர்களுடனே இருந்து செத்துப் போகிறேன்
என்கிறான் கர்ணன்....

No comments:

Post a Comment