Wednesday, May 15, 2013

பார்வையற்றவர்

ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்கு BMTC பஸ்ல போனேன். கூட்டம் இல்லைன்னாலும் உட்கார இடம் இல்லை என்பதால் நின்று கொண்டே சென்றேன்.

ஒரு ஸ்டாப் வந்ததும் பார்வையற்ற ஒருவர் பஸ்ஸில் ஏறினார். உட்கார்ந்திருந்தவர்கள் யாரும் அவரைக் கண்டு கொள்ளவேயில்லை. அவருக்கு இடம் கொடுத்து உதவவும் இல்லை. அவரும் எதையும் பொருட்படுத்தாமல், நின்று கொண்டிருந்தவர், மோதாமல் இருக்க ஒரு கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றார். பஸ் வேகமாகப் போனது. திடீரென டிரைவர் பிரேக் போட்டார். சர்ர்ர்ரக்க்க்க். நான் உட்பட நின்று கொண்டிருந்தவர் அனைவரும் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தோம். கிட்டத்தட்ட உட்கார்ந்து இருந்த அனைவருமே முன் சீட்டில் போய் முட்டிக் கொண்டார்கள்..

அந்த பார்வையற்றவர் மட்டும் விழாமல், கெட்டியாக கம்பியைப் பிடித்துக்கொண்டு கம்பீரமாக நின்றார்.

#திடீரென வரும் திருப்பங்களை எதிர்கொள்ள பார்வை இருந்தால் மட்டுமே போதாது .இல்லையா? #

- Chelli Sreenivasan

No comments:

Post a Comment