இப்படியும் ஒரு பெண்ணா?
8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் கற்பழிக்கப்படுகிறார், சுனிதா கிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 15. வாழ்க்கை போச்சே என்று இடிந்து போய் முடங்கி விடவில்லை. அன்றே முடிவெடுத்தார், தன்னை போல் பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், பெண்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று. களத்தில் இறங்கவும் செய்தார்.
மாலினி என்கிற 15 வயது சிறுமியை, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், விபச்சார விடுதியில் விற்று விடுகிறார். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50,000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல். கேட்கவே மனம் பதறுகிறது. சிறைக் கைதியைப் போன்று அடைத்து வைக்கப்பட்ட அந்த குழந்தை வெளியே தப்பித்து வர 3 முறை முயன்றும், தோற்றுப் போன அந்தச் சிறுமி, இறுதியாக சுனிதா கிருஷ்ணனின் திறமையான செயல்பாடுகளால் காப்பாற்றப்பட்டு, ஐதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாள். www.puradsifm.com
ஒரு முறை, சமூக விரோதிகளிடமிருந்து சிறுமிகளைக் காப்பாற்றப் போன இடத்தில் வாங்கிய அடி உதையால், இவரது வலது காது கேட்கும் திறனை இழந்திருக்கிறது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார். வாழ்க நவீன புரட்சி நாயகி.
இதை பகிர்ந்து அவரது செயலுக்கு ஊக்கமும், ஆதரவும், மரியாதையும் தாருங்கள் சகோதரர்களே..!
No comments:
Post a Comment