Sunday, December 28, 2014

திசையன்விளை அருகே தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறுகள்

திசையன்விளை அருகே தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறுகள்

திசையன்விளையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் முதுமொத்தன்மொழி பஞ்சாயத்து ஆயன்குளம் படுகை அருகில் இந்த கிணறுகள் உள்ளது. இந்த கிணற்றுக்குள் மணிமுத்தாறு அணை உபரி தண்ணீரை அதிக அளவில் திருப்பி விட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அதன்படி கிணறுகளுக்குள் தண்ணீர் விடப்பட்டது. அவற்றில் 2 கிணறுகள் தண்ணீரை உள்வாங்கிய படியே உள்ளன. இதனை அறிந்த பொதுமக்கள் பலர் அந்த அதிசய கிணறுகளை பார்த்து வியந்து சென்றனர். மாவட்ட வருவாய் அதிகாரி குழந்தைவேலு, ராதாபுரம் தாசில்தார் சேக் அப்துல்காதர், சுனாமி தாசில்தார் அபுல்காசிம், திசையன்விளை வருவாய் ஆய்வாளர் ஜெஸ்லட் ஜெயா மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வந்த விவசாயிகள், மணிமுத்தாறு அணை தண்ணீரை இங்குள்ள கிணறுகள் வழியாக அதிக அளவு திருப்பி விட்டால் இப்பகுதியில் உள்ள சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விவசாய பம்பு செட் நிலங்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள உப்பு நீர் நல்ல நீராக மாற வாய்ப்பு உள்ளதாக கூறினர்.
மேலும் சிறிய அளவிலான கலர் பாசி (கழுத்தில் அணிவது) களை இந்த கிணற்றில் கொட்டி இங்குள்ள தண்ணீர் எங்கு செல்கிறது என்று சோதனை செய்ததாகவும், அந்த கலர் பாசிகள், காரி கோவில், குண்டல், நவ்வலடி, உவரி தேரி பகுதியில் உள்ள கிணறுகளில் மிதந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி குழந்தைவேலு இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் நேரில் கூறி மணித்தாறு அணை 4–வது ரீச் வழியாக தண்ணீர் வர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.


திசையன்விளை அருகே தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறுகள்

No comments:

Post a Comment